ஜோதிட குறிப்புகள் பகுதி-15

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

ஜோதிட குறிப்புகள்

  • ஜென்ம காலத்தில் சந்திரன் எந்தக் கிரகத்தா பார்க்கப்படுகின்றானோ அந்தக் கிரகத்தினுடை திரேக்காணத்தையும் அடைந்திருந்தால் ஜாதகன் அரசனாவன். நித்திய கல்யாணம் உடையவனாவன்.
  • ஜென்ம காலத்தில் செவ்வாய் , புதன் , குரு , சுக்கிரன் சனி சூரியன் , சந்திரன் இவர்கள் மேஷாதி ராசியைப் பார்த்தால் ஜாதகன் அரசனாவன்.
  • ஜென்ம காலத்தில் மேஷ ராசியை புதன் பார்த்தால் ஜாதகன் மந்திரியாவன் , சற்குணவான் , தனமுடையவன் , திருடன் ஆவான்.
  • ஜென்ம காலத்தில் புதன் ரிஷப ராசியிலிருந்தால் ஜாதகன் புளிப்பில் வெறுப்புடையவன் , தனமுடையவன் , அரசனாவன் , ஸ்ரீமான் , இரக்கமுடையவன்.
  • ஜென்ம காலத்தில் புதன் ஏழாம் பாவத்தில் மிதுனத்தில் இருந்தால் திரமுடையவன் , ஜாதகன் நூல்களை நெய்பவன் , தனமுடையவன் . மேற்படி புதன் சுய க்ஷேத்திரத்தில் கன்னியில் இருந்தால் ஜாதகன் கவி ஞானமுடையவன் . அரசனைப் போல் தனமுடையவன் , ஜோதிஷன் , பூமி ஆளுகையுடையவன் , ஸ்திரீ நாமுடையவன் , குரூரமுடையவன் , சேனாதி பதியாவன் . யாகம் செய்வன் , மந்த சுபாவமுடையவன் , தீன ஜனங்களாலடையப்படுபவன்.
  • ஜென்ம காலத்தில் துலாராசியில் புதனிருந்தால் ஜாதகன் க்ரூர செய்கையுடைய அரசன் , தட்டார் வேலை செய்பவன் . அதாவது சொர்ண வேலை செய்பவன் , வைசியர்களில் முதல்வன் துஷ்டர்களுக்கு முதல்வன்.
  • ஜென்ம லக்கினம் கடகமாகி ஐந்தாம் பாவமான விருச்சிகம் புத்திர ஸ்தானம் ஆகி அங்கு புதனிருந்தால் ஜாதகன் இரண்டு புத்திரனுடையவன் , முடவன் ஆவன் , துணிகளைவெளுப்பவன் தனமில்லாதவனாவான்.
  • ஜென்ம காலத்தில் தனுசு ராசியில் புதனிருந்தால் ஜாதகன் சூரன் , சிரேஷ்டன் , அரசனானவன் , உதாரமுடையவன் , தர்மக் கொடியுடையவன்.
ஜோதிட குறிப்புகள்
ஜோதிட குறிப்புகள்
  • ஜென்ம காலத்தில் மகரத்தில் புதனிருந்தால் ஜாதகன் அரசர்களுக்கரசனாவன் , ஒரு போதும் தனமில்லாமல் இரான்.
  • ஜென்ம காலத்தில் கும்ப ராசியில் புதனிருந்தால் ஜாதகன் ஸ்தீரி லோலனான அரசனாவன் , அரச மந்திரியாவன் , ராஜ மோகன் , பாபியாவன்.
  • ஜென்ம காலத்தில் மீன ராசியில் புதனிருந்தால் ஜாதகன் பாபி , ஆஸ்யமறிந்தவன் , அரசனாவன் , கிழத்தன்மையுடையவன் , குரூரம் அதிகமுடையவன்.
  • ஜென்ம லக்கினத்திற்காவது , சந்திர லக்கினத்திற்காவது , லக்கினாதிபதிக்காவது இந்த பலன் சமமாகும்.
  • ஜென்ம லக்கினத்தில் பூர்ண சந்திரனிருந்தால் ஜாதகன் நற்குணமும் , தனமும் உடையவன்.
  • ஜென்ம லக்கினத்தில் க்ஷுண சந்திரன் இருந்தால் ஜாதகன் தாமத குணமுடையவன் , துஷ்டன் , கோபமுடையவன்.
  • ஜென்ம லக்கினமாக , கடகம் , மேஷம் , ரிஷபம் இவைகளாகி அதில் சந்திரன் க்ஷுண சந்திரனாகியிருந்தாலும் , இருகால் ராசிகளிலிருந்தாலும் , நாற்கால் ராசிகளிலிருந்தாலும் நாற்கால் ராசி வர்க்கங்களிலிருந்தாலும் ஜாதகன் தனம் , குணம் இவைகளையுடையவனாகியும் தூர்த்ததன்மை , செவிட்டுத் தன்மை , ஊமைத்தன்மை , குறைந்த புத்தி இவைகளையடைவான்.
  • ஜென்ம காலத்தில் தனுசு , மீனம் , துலாம் , கும்பம் , மகரம் இவைகள் ஜாதகனுக்கு ஜெனன லக்கினமாகி அதில் சனியிருந்தால் அழகான அங்கங்களுடைய அரசனாவன் வித்துவானாவன் . பட்டணம் , கிராமம் இவற்றிற்கு தலைவனாவான்.

Leave a Comment

error: Content is protected !!