6ம் வீட்டு கிரக பலன்கள்-மகரிஷி பராசரர்
6ம் வீட்டு கிரக பலன்கள் (6th house in astrology) 6ம் இடத்து அதிபதி 6-ல் இருப்பினும், லக்னம் மற்றும் எட்டில் இருப்பினும் வயிற்றுப் புண் அல்லது உள் காயங்கள் ஏற்படும்.
சூரியன்-தலை,
சந்திரன்-முகம்,
செவ்வாய்-கழுத்து
புதன்-தொப்புள்
குரு-மூக்கு,
சுக்கிரன்-கண்கள்
சனி-பாதம்
நிழற்புளி-அடிவயிறு
லக்னாதிபதி செவ்வாய் அல்லது புதன் வீட்டில் இருக்க புதனால் பார்க்கப்பட்டால் அந்த ஜாதகருக்கு முகத்தில் வியாதி ஏற்படும்
செவ்வாய் அல்லது புதன் ஏறுவரிசை ராசிகளின் அதிபதிகளாக இருந்து சந்திரன், ராகு மற்றும் சனி சேர்ந்து இருப்பின் குஷ்டரோகம் ஏற்படும்
கடகராசி தவிர வேறு எந்த ராசியிலும் சந்திரனுடன் ராகு இருப்பின் அவருக்கு வெள்ளை குஷ்டரோகம் ஏற்படும்
சனி ராகு சேர்ந்திடில் கருங்குஷ்டம் செவ்வாய் சேர்ந்து இருப்பின் ரத்த கஷ்டமும் ஏற்படும்
லக்னாதிபதி 6(6th house in astrology) மற்றும் 8-ம் அதிபதியுடன் சேர்ந்து சூரியனுடன் இருந்தால் அந்த ஜாதகருக்கு காய்ச்சலும், உடலில் கட்டியும்(tumour) ஏற்படும்
செவ்வாய் சூரியனை விட பலமாக இருப்பின் அவருக்கு ரத்த குழாய் தடிமனாக இருப்பதால் ஏற்படும் வீக்கம் மற்றும் புண்கள் ஏற்படும்
மேலே கூறியபடி புதன் பலமாக இருப்பின் உடலில் ஏராளமான நோய் தோன்றும் குரு இருப்பின் நோய் அழியும்
6-ம் இடத்தில் சுக்கிரன் இருப்பின் பெண்கள் தொடர்பான வியாதிகள் சனி காற்று தொடர்பான நோய்கள்
6-ம்(6th house in astrology) இடத்து அதிபதி அல்லது ஆறாம் இடத்தில் பாவ கிரகங்களுடன் நிற்க, சேர்ந்திருக்க, சனியும், ராகுவும் சேர்ந்து இருக்க அந்த ஜாதகர் எப்பொழுதும் நோய்வாய்ப்பட்டவர் ஆவார்
6ல் செவ்வாய் நிற்க, 6-ம் இடத்து அதிபதி 8-ல் நிற்க, அந்த ஜாதகருக்கு 6 வயதில் மற்றும் 12 வயதில் கடுமையான காய்ச்சல் ஏற்படும்
சந்திரன் மீனம் அல்லது தனுசில் நிற்க, குரு லக்னத்தில் நின்றிட, லக்னாதிபதியும் 6-ல் நின்றிட மாந்தியும் கேந்திரங்களில் இருந்துவிட்டால் அந்த ஜாதகருக்கு 26வயதில் கூஷய ரோகம் ஏற்படும்.
29, 30 வயதில் இனந்தெரியாத நோய் ஏற்படும்
6 மற்றும் 12ஆம் இடத்து அதிபதி பரிவர்த்தனை பெற்று சனியும் சந்திரனும் ஆறாமிடத்தில் நிற்பின் 45 வயதில் ரத்த குஷ்டம் ஏற்படும்
சனி எதிரி வீட்டில் நிற்க லக்னாதிபதி லக்னத்தில் நிற்பின் 59 வயதில் நரம்பு, வாத நோய்கள் ஏற்படும்.
6-ம்(6th house in astrology) இடத்து அதிபதி உடன் சந்திரன் நிற்க, எட்டாம் இடத்து அதிபதி 6-ல் நிற்க, 12ஆம் இடத்து அதிபதி லக்னத்தில் நிற்க அந்த ஜாதகருக்கு எட்டு வயதில் விலங்குகளால் துன்பம் ஏற்படும்
ராகு 6-லும் ராகுவிற்கு எட்டில் சனியும் இருக்க பிறந்த ஜாதகனுக்கு 1அல்லது 2-ம் வயதில் நெருப்பாலும், 3-ம் வயதில் பறவைகளால் துன்பமும் ஏற்படும்
சூரியன் 6-ல் அல்லது 8-ல் உள்ளது என்றால் அதற்குப் பனிரெண்டில் சந்திரன் நிற்க அந்த ஜாதகர் தனது ஐந்தாவது அல்லது ஒன்பதாவது வயதில் தண்ணீரால் பாதிக்கப் படுவார்
7ல் செவ்வாய் 8-ல் சனி இருப்பின் 10 மற்றும் 30 வயதில் அம்மை நோய் ஏற்படும்
எட்டாம் இடத்து அதிபதி ராகுவுடன் சேர்ந்து, எட்டாமிடத்தில் இருந்து கேந்திர திரிகோணங்களில் நின்றாலும், நவாம்சத்தில் எட்டாமிடத்தில் இருந்தாலும், அந்த ஜாதகருக்கு 18 மற்றும் 22 வயதுகளில் ரத்த நோய், மூத்திரக் கோளாறுகள் ஏற்படும்
6 மற்றும்(6th house in astrology) பதினோராம் அதிபதிகள் பரிமாற்றம் செய்திடில் அந்த ஜாதகருக்கு 31 வயதில் சொத்து இழப்பு ஏற்படும்
5-ம் இடத்து அதிபதி ஆறிலும் ஆறாம் அதிபதி குருவுடன் நிற்க பன்னிரண்டாம் அதிபதியே லக்னாதிபதி ஆக இருப்பின் அந்த ஜாதகரின் பையனே அவருக்கு எதிரியாவான்
லக்னாதிபதியும் ஆறாம் அதிபதியும் பரிவர்த்தனையானால் அந்த ஜாதகருக்கு 10 மற்றும் 19-ம் வயதில் நாய்களால் பயம் ஏற்படும்
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் :