திவ்ய தேசம்-அப்பக்குடத்தான் கோவில் (கோவிலடி)
திவ்ய தேசம் 6
பக்தர்களைக் காக்க பெருமாள் எத்தனையோ அவதாரங்களை எடுத்திருக்கிறார்.ஆனால் நமக்குத் தெரிந்தது பத்து அவதாரம்.தெரியாதது எத்தனையோ இருக்கலாம்.இந்த இடத்தில் தான் அவதாரம் எடுக்க வேண்டும் என்று பகவான் நினைத்ததில்லை.
பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக , நேரடியாக மறைமுகமாக அவதாரம் எடுத்துக் கொண்டுதான் வருகிறார். இதற்கு உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் திருவையாறு , திருக்காட்டுப் பள்ளி வழியாக தஞ்சை மார்க்கம் செல்லும் சாலையில் குடி கொண்டிருக்கும் , அப்பக்குடத்தான் பெருமாள் கோவிலைச் சொல்லலாம்.
கோவிலடி – என்று இந்தத் திருகோயிலுக்கு மற்றொரு பெயர் உண்டு. இந்திரகிரி , பவா சவன ஸ்சேத்திரம். பஞ்சரங்கம்.அப்பாவாரங்கநாத சுவாமி திருக்கோயில் என்று புராணங்களில் இத்திருத்தலத்தைப் பற்றி பெருமையாகக் கூறப்பட்டிருக்கிறது.காவிரி – கொள்ளிடம் நதிகளுக் கிடையில் இரண்டே முக்கால் ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கு நோக்கிய மூன்று பெரிய இராஜ கோபுரத்தோடு கோயில் காட்சியளிக்கிறது.
- மூலவருக்கு அப்பக்குடத்தான் பெருமாள் என்று திருநாமம்.புஜங்க சயனத்தில் மேற்கு திசை நோக்கி தரிசனம் காட்டுகிறார்.
- தாயார் திருநாமம் கமலவல்லி.
- கோயிலின் தீர்த்தம் இந்திர தீர்த்தம்.
- விமானம் இந்திர விமானம்.
- மார்க்கண்டேய முனிவர் பெருமாளுக்குப் பக்கத்தில் இருக்கிறார்.
உபரிசரவஸு என்னும் மன்னர் , பெருமாள் பக்தர் ஒருவருக்கு அன்னதானம் செய்ய மறுத்ததினால் துர்வாச முனிவரின் சாபத்திற்குப் பாத்திரமானான். அந்த சாபத்திலிருந்து நீங்க வேண்டுமானால் இந்த இந்திரகிரி கோயிலுக்கு வந்து ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்பதினால் தன் சாபம் நீக்க – தினமும் உபரி சரவஸு மன்னன் இங்கு வந்து அன்னதானம் செய்து வந்தான்.
ஒருநாள் பெருமாள் , கிழவனாக வந்து உபரிசரவஸு மன்னனிடம் அன்னம் கேட்க – அன்றைக்குப் பார்த்து அன்னம் இல்லை . உடனடியாக அன்னம் தயாரித்து அளிக்க கால தாமதமாகும் என்பதினால் உண்மை ‘ அன்னத்திற்குப் பதிலாக வேறு ஏதுவாக நிலையைச் சொல்லி இருந்தாலும் கேளுங்கள் தருகிறேன் ‘ என்று மன்னன் பவ்வியமாகக் கேட்க இறைவனும் ‘ சரி அப்பம் வேண்டும் ‘ என்று கேட்டார் . மன்னன் உடனடியாக அப்பம் தயார் செய்து கொடுத்தான்.அதை உண்டு பெருமான் உபரி சரவஸு மன்னனுக்குக் காட்சி தந்து துர்வாச முனிவரின் சாபத்தைப் போக்கினார்.
பெருமாளே அப்பத்தை விரும்பிக் கேட்டதால் இங்குள்ள இறைவனுக்கு அப்பக்குடத்தான் என்று பெயர்.இன்றும் பெருமாள் வலது கையில் ஓர் அப்பக்குடம் இருப்பதைப் பார்க்கலாம்.தினமும் இறைவனுக்கு நைவேத்தியம் அப்பம்தான்.
பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் , திருமழிசை ஆழ்வார்,நம்மாழ்வார் ஆகியோர் இந்தப் பெருமாளை மங்களாசாசனம் அருளியிருக்கிறார்கள்.
நம்மாழ்வாரின் கடைசிகாலம் இங்குதான் கழிந்தது.இங்கேதான் நம்மாழ்வார் மோட்சத்திற்குச் சென்றதாக ஐதீகம்.இந்த கோயிலுக்குப் பின் வேறெங்கும் நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்யவில்லை.
பரிகாரம் :
இந்த தலத்திற்குச் சென்று பெருமாளுக்கு அப்பம் நைவேத்தியம் செய்து அதை நிறைய பேர்களுக்கு தானமாக வழங்கினால் உடலிலுள்ள அத்தனை நோய்களும் மறைந்து விடும்.தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பிரம்மஹத்தி தோஷம் விலகும்.
யாரேனும் எப்பொழுதாவது இட்ட சாபத்தால் குடும்பத்தில் திருமணமாகாமல் பிள்ளைப்பேறு இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு – விமோசனம் கிடைக்கும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் பத்து நாட்களிலும் இங்கு வந்து கலந்து கொண்டவர்களுக்கு ‘ மோட்சம் ‘ நிச்சயமாகக் கிடைக்கும் என்று நம்பிக்கை !
ஆலயம் இருக்கும் இடம் :