சுபகிருது வருட பலன்கள்-2022-மகரம்
சனி பகவானின் அருள் பெற்ற மகர ராசி அன்பர்களே!!!
இவ்வருடம் முழுவதும் குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ஆம் இடம் சஞ்சாரம் செய்கிறார்.
சித்திரை 16ஆம் தேதி முதல் ஆனி மாதம் 28ஆம் தேதி வரையில் அதிசாரத்திலும், தை மாதம் 3-ஆம் தேதி முதல் நேர்கதியிலும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ஆம் இடம் சஞ்சாரம் செய்கிறார்.
ராகு கேதுக்கள் முறையே 4, 10-ஆம் இடங்களில் சஞ்சாரம் செய்கிறார்கள்.
- சித்திரை மாதம் முதல் ஆனி மாதம் வரை சுபகாரியங்களில் இருந்த தடைகள் விலகும். மன பாரம் குறையும். தூக்கமின்மை குறையும்.
- தொழில் துறையில் இருந்த பிரச்சினைகளும் குறையும்.
- தைரியமாக எதையும் செய்து வெற்றி கொள்ளும் நேரமிது.
- அலைச்சல் வெகுவாக குறையும்.
- வாடகை வீட்டில் இருப்பவர்கள் வீடு மாறக் கூடிய சூழ்நிலை உருவாகும்.
- மாணவர்கள் கடும் முயற்சி செய்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
- ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை எந்த காரியத்தை தொடங்கினாலும் முதலில் தடை ஏற்பட்டு பிறகு நிறைவேறும்.
- குடும்ப சூழ்நிலை அமைதியாக இருக்கும்.
- ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. தொழில்துறையில் கடுமையாக உழைத்து குறைவான பலன்களை பெறுவார்கள்.
- உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும்.
- தை மாதம் முதல் வருடம் முடியும் வரை தொழில் வளர்ச்சிக்காக கடுமையாக உழைப்பீர்கள். அதில் நல்ல பலனும் கிடைக்கும்.
- உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்திலிருந்த மருத்துவச் செலவுகள் குறையும். பழைய வாகனங்களை விற்று புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
- நண்பர்கள் உறவினர்கள் உதவி செய்வார்கள். வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
பலன் தரும் பரிகாரம்
சனிக்கிழமைதோரும் சனி பகவானுக்கு எள் தீபமும்,ஆஞ்சநேயருக்கு நெய் தீபமும் ஏற்றி வர கெட்டது விலகும்.தொட்டது துலங்கும்.