களத்ரதோஷம்
களத்திர காரகன் சுக்கிரன் ஏழாம் வீடு மனைவி குறிப்பதாகும் 7ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் களத்திர தோஷம் ஏற்படும் ஜோதிடரிடம் பெரியோர்கள் மிக ஆர்வமாக கேட்கும் கேள்விகள் மனைவி எவ்வாறு அந்நியமா எந்தத் திக்கு கருப்பா சிவப்பா என்று தான் கேட்பார்கள்
இந்த களத்திரகாரகன் சுக்கிரனும் அல்லது களத்திர ஸ்தானாதிபதி இவரில் ஒருவர் நிறத்துக்கு எதுவோ அதுதான் மனைவி இருக்கும் ஒரு ஆக அமையும்
மூல நூல்கள் அனைத்திலும் திருமணம் செய்ய வேண்டிய பையனுக்கு அமையக்கூடிய பெண் எந்தத் திக்கில் அமைவாள் என்று கூறப்பட்டுள்ளது பெண்ணிற்கு மனமகன் திசை குறித்து குறிப்பு இல்லைஇது ஓரளவுக்கு ஒத்துவரும்.
ஏழாம் இடத்தில் களத்திர தோஷம் பெற்றால் என்ன?
- சுக்ரன் ஆண் ஜாதகத்தில் ஏழில் இருந்தால் பெண் ஜாதகத்தில் 6,7,8ம்வீட்டில் சுக்கிரன் இருந்தால் போதுமானது.
- கடக லக்கினமாக இருந்து மகரத்தில் சுக்கிரன் இருந்தால் மற்றவர் ஜாதகத்தில் சுக்கிரன் 6,7,8 ஏதாவது ஒன்றிலிருந்து சனியுடன் கூடி இருந்தாலும் சரி, சனி பார்வை இருந்தாலும் சரி, களத்திரதோஷசாம்யம் இருஜாதகருக்கும் கிடைத்துவிடும்.
- ஜனன ஜாதகத்தில் 7ல் சுக்கிரன் குரு கூடியிருந்து லக்னத்தில் புதன் இருந்து 12ல் சூரியன் இருந்தால் 100 வயதுவரை வாழ்வார்.
- 7ம் இடத்தில் சுக்கிரன் இருந்து குரு பார்வை இருந்தால் யோகமான கணவர் அல்லது மனைவி அமைவாள்.
ஏழாம் பாவத்தில் சுக்கிரன் அமையும் பொழுது அதனுடன் சேரும் கிரகங்கள் தன்மையை வைத்து சுபயோகத்தை பார்ப்போம்.
- சுக்கிரன்-சந்திரன்-: நல்லமனைவி- தனம்- புத்திசாலி
- புதன்-சுக்கிரன்: நல்லமனைவி- சாரீர சுகம் பெற்றவர்-மனைவி காட்டும் அன்பை திரும்ப செலுத்த மாட்டார்.
- சூரியன்-சுக்கிரன்-சனி: காமம் உடையவர், தான தர்மம் செய்வார்.
- சுக்ரன்-புதன்-சந்திரன்: கெளவரமாய் வாழ்வார்,தலைவன்,அரசாங்க தொடர்பு உடையவர்.
- சுக்ரன்-சந்திரன்-சனி: வேத விற்பன்னர் மற்றும் வேதங்களை மதிப்பவர்,சுக போகம் மிக்கவர்,சாஸ்திரம் அறிந்தவர்,செல்வம் மிக்கவர்.
- குரு-சுக்ரன்-சந்திரன்: பெண்களுக்கு பிரியமுள்ளவர்,நல்ல குணங்களை கொண்டவர்.
- சுக்ரன்-குரு-செவ்வாய்: கீர்த்தி புகழ் உடையவர்,அரசாங்கத்தால் போற்றப்படுபவர்.
- சுக்ரன்-குரு-புதன்: அதிக செல்வம் உள்ளவர்,ராஜாவை போல் உள்ளவரிடம் தொடர்பு,நல்ல மனைவி உடையவர்.
- சுக்ரன்-புதன்-சனி: எதிரிகளை வெல்வார்,பொன் பூமி,நல்ல மனைவி உள்ளவர்.
- சுக்கிரன்-குரு-சனி: ஏவலாட்கள் உடையவர்,வாகனம்,வீடு உடையவர்.
- குரு-சுக்ரன்: எதிரிகளை வெல்வார்,நல்ல புத்தி.
- சுக்கிரன்-புதன்-செவ்வாய்-சந்திரன்:நல்ல அழகான குணவதியான மங்கையை அடைந்தவர், ஜாதகர் அழகாக இருப்பார். நீதிமானாக இருப்பார். அதிக குழந்தைகள் இருக்கும்.
- சுக்கிரன்-குரு-செவ்வாய்-சந்திரன்: தர்மவான்,கெட்டிக்காரர், பொறாமை இல்லாதவர்.
- சுக்ரன்+குரு+செவ்வாய்+சனி: நியாயஸ்தர்களுக்கு பிரியமானவர், உண்மையோடு நடப்பவர்.
- சுக்ரன்+குரு+சந்திரன்+புதன்: மிக உயர்வானவர்.சுற்றத்தாரை நேசிப்பார்,தர்மவான்.
- குரு+சுக்ரன்+செவ்வாய்+ புதன்:பாக்கியசாலி,அரசாங்க தொடர்பு உடையவர், நல்ல மனைவி மக்கள் உடையவர்.
- சுக்ரன்+சனி +செவ்வாய்+புதன்:அழகர், நன்னடத்தை உள்ளவர், அனைவரையும் பிரியத்துடன் நடத்துவார்.
- சுக்ரன்+புதன்+குரு+சனி:அழகான கெட்டிக்கார மனைவி உடையவர், எதிரிகளை வெல்வார், நீதிமான்.
- சுக்ரன்+புதன்+ குரு+ செவ்வாய்+ சந்திரன்:இரக்கமுள்ளவர், நீதிமான், நல்ல மனைவி அல்லது கணவன் உள்ளவர்.
- சுக்ரன்+புதன்+ சனி+ செவ்வாய்+ சந்திரன்:நல்ல பலன்கள், பொறுமைசாலி, சுற்றத்தாரை மதிப்பவர்.
- சுக்ரன்+புதன்+ குரு+ செவ்வாய்+சனி:விரோதிகளை பெற்றவர். தர்மிஷடன், ஆன்மிகப் பற்று உடையவர்.
- சுக்ரன்+புதன்+ குரு+ செவ்வாய்+ சந்திரன்+சனி:பெரிய தனவந்தர், அரசனைப்போல் வாழ்வார்.
களத்ர தோஷங்கள் ஏற்படுவதால் :
1. திருமணம் காலதாமதமாக நடைபெறும் .
2.திருமணம் செய்ய பல ஆண் பெண் ஜாதகங்களைப் பார்த்து அவர்களிடம் அலைந்து பின்னர் நிச்சயமாகும்.
3. நிச்சயதார்த்தம் வரை வந்து நின்று போகும் அமைப்பு
4. கூடிவரும் திருமணம் நின்று போகும் அளவிற்கு அல்லது மன வருத்தம்.
களத்ர தோஷம் ஏற்படக் காரணமாயிருக்கும் கிரஹங்கள் :
1.லக்னத்திற்கு ஏழில் சனி செவ்வாய் சேர்ந்திருத்தல்.
2. லக்னத்திற்கு ஏழில் சுக்ரன் நீசம் பெற்று இருந்து சுக்ர தசை நடத்தல்.
3. லக்னத்திற்கு ஏழுக்குடையவன் , 6,8,12 -ல் தனித்து இருந்தாலும் , பாபக்கிரஹங்களுடன் சேர்ந்து இருப்பதும்.
4. லக்னத்திலிருந்து 2,7,9 ல் பாபக் கிரஹங்கள் இருந்தாலும் திருமணம் தாமதமாகும்.
5. லக்னத்திலிருந்து 7 – க்குடையவன் தசை நடப்பது.
6 . ஏழில் சனி , செவ் , ராகு அல்லது கேது சேர்ந்திருப்பது.
7. நான்காம் இடத்தில் சனி , செவ்வாய் , ராஹு அல்லது கேது இருத்தல்.
களத்ர தோஷ பரிகாரங்கள் :
” பெற்ற தாயாருக்கு உடுத்த துணி இல்லை. பையன் காசியில் சென்று வஸ்திர தானம் செய்தானாம் . இது பழமொழி.பெற்ற தாயாருக்கு எதுவும் கொடுக்காமல் , கோடி கோடியாகத் தானம் செய்தாலும் பலன்தருமா ? இதுபோல் , திருமணம் ஆக வேண்டிய நிலையில் உள்ளவர்கள் உள்ளூர் தெய்வம் , மற்றும் குலதெய்வம்ஆகியவைகளை வணங்காமல் , தோஷ பரிகாரம் என்று திருமணஞ்சேரி , காளகஸ்தி , சூரியநானார் கோவில் என்று வழிபாடுகள் நடத்துவதில் என்ன பிரயோசனம் ? எனவே குலதெய்வம் கோவிலுக்குச் சென்று , அங்குள்ள முறைப்படி வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் வீட்டில் சுமங்கிலியாக இறந்த முன்னோர்களுக்கு அவரவர் குடும்ப வழக்கப்படி சுமங்கிலி பூஜை செய்ய வேண்டும். ஸ்ரீ மஹாலெஷ்மி , கௌரி பூஜைகள் செய்யலாம். தீர்க்க சுமங்கலிகளாக வீட்டிற்கு வரும் பெண்களுக்கு நல்ல மஞ்சள் குங்குமம் கொடுத்து அவர்கள் ஆசிர்வாதம் பெற வேண்டும்.
எந்தெந்த கிரஹத்தால் களத்ர தோஷம் ஏற்பட்டுள்ளதோ அந்த கிரஹங்களுக்குரிய கடவுளை வழங்க வேண்டும்.
5 – ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள கிரஹ கடவுள்கள்.
சூரியன் : பரமேஸ்வரன்
சந்திரன் : சக்தி ( அம்பாள் )
செவ்வாய் : முருகன் ( காளி , மாரி மற்றும் துஷ்ட பெண் தேவதைகள் )
புதன்:கருப்பர்
வியாழன் : தக்ஷிணாமூர்த்தி
சுக்ரன் : சிவன் கோவிலில் உள்ள அம்பாள் , மஹாலெஷ்மி
சனி: சிவன் , விஷ்ணு
ராஹு:துர்க்காதேவி சுபக்கிரஹங்களுடன் இருந்தால் உயிர் பலி இல்லை.
கேது: மஹா கணபதி
அசுப கிரஹங்களுடன் இருந்தால் உயிர் பலி உள்ள தெய்வம் ஆகும். ஒரு சிலருக்கு குலதெய்வம் தெரியாது . அந்நிலையில் 5 – ஆம் இடத்தில் உள்ள கிரஹம் எதுவோ அதனைக் குல தெய்வமாகக் கருதி வணங்கலாம்.
மேலும் 5 – ஆம் இடத்தில் கிரஹங்கள் இல்லையெனின் , 5- ஆம் இடத்திற்குரிய கிரஹம் எதுவோ , அதற்கான தெய்வத்தைக்குலதெய்வமாகக் கருதி வணங்கலாம். 5 ஆம் இடத்திற்குரிய கிரஹம் எதுவோ அதனைக் கருத்தில் கொண்டு வணங்கலாம்.
இந்த இடத்தில் ஒன்றினைக் குறிப்பிட வேண்டுகிறேன் களத்ரகாரகன் சுக்ரன் . இதனை அதிகாலை வெற்றுக் கண்களால் பார்க்க முடியும்.கிராமத்தினர் 4 மணிக்கு இதைப்பார்த்துவிட்டு வேலைக்கு கிளம்புவர் . அவர்கள் சொல்லும் சொல் ” வெள்ளி முளைத்து விட்டது ” என்பதுதான் . அதாவது முளைவிடக் கூடிய சக்தி உள்ளது சுக்ரன் . எனவே சுக்ரனை அதிகாலையில் தரிசனம் செய்பவர்களுக்கு களத்ரதோஷம் விலகும் என்பது எனது தாழ்மையான கருத்து ஆகும்.
1. காஞ்சிபுரம் அருள்மிகு ராஜப் பெருமாள் கோவில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதியில் வழிபட திருமணத் தடை நீங்கும்.
2 . கன்னியாகுமரி மாவட்டத்தில் திருப்பதிசாரம் என்ற ஊரில் கமலவல்லி நாச்சியார் சமேத திருவாழ்மார்பன் கோயில் உள்ளது இங்கு மகாலெஷ்மியை மார்பில் வைத்துள்ளார் . இங்கு , திருப்பதி செல்ல முடியாதவர்கள் தங்கள் பிரார்த்தனையைச் செலுத்தலாம் . புது வஸ்திரம் வாங்கி தாயாருக்குச் சாத்தினால் திருமணத் தடைவிலகும்.
நவ திருப்பதிகள்
இந்த 9 வைஷ்ணவ க்ஷேத்ரங்களும் நவகிரஹங்களுடன் தொடர்பு உடையவை . எவ்வாறெனில் இந்த க்ஷேத்ரங்களில் உள்ள பெருமாளே நவக்கிரஹங்களாக உள்ளதாக ஐதீகம்.
1.சூரியன்-ஸ்ரீ வைகுண்டம்
2.சந்திரன்-வரகுணமங்கை ( நத்தம் )
3.செவ்வாய்:திருக்கோளுர்
4.புதன்- திருப்புளியங்குடி
5.குரு:ஆழ்வார் திருநகர்
6.சுக்ரன்:தென்திருப்போர்
7.சனி- பெருங்குளம்
8.ராகு-இரட்டை திருப்பதி
9.கேது- இரட்டை திருப்பதி
இவைகள் பாண்டிய நாட்டு நவதிருப்பதிகள் ஆகும்.
4.அருள்மிகு ஸ்ரீகல்யாண வரதராஜர் கோவில் திருவெற்றியூர் சென்னை,இங்கு பிராத்தனை செய்ய திருமணத் தடை நீங்கும்.
5 ) அருள்மிகு ஸ்ரீனிவாச ஆஞ்சநேயப் பெருமான் திருக்கோயில் உடுமலைப்பேட்டை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை , வடைமாலை சாத்த திருமணம் கைகூடும் .
6 ) அருள்மிகு கதிர் நரசிங்கப்பெருமாள் திருக்கோயில் திண்டுக்கல் . இங்கு எலுமிச்சம்பழ மாலை சாத்த தடை நீங்கும் .
7 ) அருள்மிகு ஸ்ரீ சவுந்தர் ராஜபெருமாள் கோயில் தாடி கொம்பு : திண்டுக்கல் மாவட்டம் இங்குள்ள புதி மன்மதனுக்கு மாலை அணிவித்து வேண்டிட திருமனம் விரைவில் நடக்கும் .
8 ) அருள்மிகு ஸ்ரீவனவேங்கடப் பெருமாள் கோயில் பெருந்துறை ஈரோடு மாவட்டம் திருமஞ்சனம் செய்ய திருமணம் கைகூடும் .
9 ) அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி கோலில் தான்தோன்றிமலை , கரூர் இங்கும் திருமஞ்சனம் செய்திடல் போதுமானது தென் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது . சுயம்பு முகூர்த்தியாகப் பெருமாள் எழுந்தருளியுள்ளார் .
10 ) அருள்மிகு ஸ்ரீமத் வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில் . ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம் பெருமாள் கோவிலில் நந்தி சிலை உள்ளது . இங்கு வழிபட தடைத் திருமணம் கைகூடும் .
திருமணத் தடை நீங்க
அருள்மிகு சர்வமங்களாதேவி சமேத தர்மலிங்ககேஸ்வரர் கோயில். நங்கநல்லூர். சர்வமங்களாதேவி என்பது லலிதா சகஸ்ரநாமத்தில் 200 வதாக உள்ளது. இங்கு அபிஷேகம் செய்திடில் திருமணம் கைகூடும்.
சென்னையில் உள்ள இதோ கோயில்கள் வருமாறு :
1 ) அருள்மிகு சாலீஸ்வரர் திருக்கோயில் – பாரிமுனை
2 ) அருள்மிகு குறுங்காலீஸ்வரர் – கோயம்பேடு.
3 ) அருள்மிகு முண்டக கன்னி அம்மன் கோயில்- மயிலை
4 ) அருள்மிகு ரவீஸ்வரர் கோயில் வியாசர்பாடி
கோவை மாவட்டம் : அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில்
மருதமலை : – அருணகிரி நாதரால் பாடப்பட்ட ஸ்தலம் இங்கு மஞ்சள் கயிற்றை மாங்கல்ய கயிறாகப் பாவித்து மருதமரத்தில் கட்ட திருமணம் கைகூடும்.
மணமுடித்து வைக்கும் மாதேவி
சென்னை ஆதம்பாக்கம் ஆண்டாள் நகரில் அருளாட்சி புரிந்து வருகிறாள் புவனேஸ்வரி தேவி. ஆலய முகப்பில் வித்யா தேவியர் கதை வடிவில் அருள்கின்றனர். அம்பிகையின் முன் பஞ்சலோகத் தாலான மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் மகாமேருவிற்கு நிவாரண பூஜைகள் விசேஷமாக நடக்கின்றன. திருமணத் தடையால் வருந்துபவர்கள் பௌர்ணமி அன்று இந்த அன்னைக்கு மாலை அணிவித்து மனமுருக வேண்டிக் கொண்டால் தடை நீங்கி திருமணம் நடக்கிறது என பக்தர்கள் நம்புகிறார்கள் . தேவியின் கருவறையில் வாராகி , மாதங்கி இருவரும் காவலாக அருள்கின்றனர் .
சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் பாதையில் 42 வது கிலோ மீட்டரில் உள்ளது திருப்போரூர்.
கந்தசஷ்டி ஆறுநாட்களும் விசேஷமாக வழிபடப்படும். இந்த சந்நதியில் தரிசனம் செய்தால் திருமணத் தடைகள் நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர். அதன் அருகில் வள்ளி , தெய்வானை சமேத ஆறுமுக சுவாமி அருள்கிறார் .
ஸ்ரீவில்லிபுத்தூர் தலத்தில் வடகிழக்கில் வடபத்ரசாயி திருக்கோயிலும் மேற்கில் ஆண்டாள் திருக்கோயிலும் அமைந்துள்ளன.
ஆண்டாள் பாடிய ” நாச்சியார் திருமொழி ” யில் உள்ள ” வாரணமாயிரம் ” எனத் தொடங்கும் முதல் பாடல் உட்பட 11 பாடல்களையும் மணமாகாத கன்னியர்கள் தினமும் பாடினால் விரைவில் திருமணம் நடக்கும் .
சென்னை மாமல்லபுரம் சாலையில் சென்னையிலிருந்து 42கி.மீ. தொலைவில் உள்ளது திருவிடந்தை.
திருமணத்திற்கான பரிகாரம் : - இத்தலத்தில் எப்படி நிகழ்த்தப் படுகிறது ?
திருமணமாகாத ஆணோ , பெண்ணோ அருகிலுள்ள கல்யாண தீர்த்தத்தில் குளித்து தேய்காய் , பழம் , வெற்றிலை , மாலைகளோடு லட்சுமி வராகரை சேவித்து , அர்ச்சனை செய்து கொண்டு , அர்ச்சகர் கொடுக்கும் ஓர் மாலையைக் கழுத்தில் அணிந்து , ஒன்பது முறை கோயிலை வலம் வர வேண்டும். திருமணம் முடிந்த பிறகு தம்பதி சமேதராக பழைய மாலையோடு வந்து அர்ச்சனை செய்து வராகரை வணங்கிச் செல்வது இத்தலத்தின் வழக்கம். பெரும்பாலான பக்தர்களுக்கு அந்த மாலை காயும்முன்பே திருமணம் நிச்சயமாகி விடுவது சகஜமானது.
சென்னை திருமுல்லைவாயில் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் , திருமாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் கொடியிடை நாயகியை தரிசித்து தாலி சார்த்தி வேண்டிக் கொண்டால் தடைப்பட்ட திருமணங்கள் இனிதே நடைபெறும்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து முத்துப் பேட்டை செல்லும் வழியில் பெருக வாழ்ந்தான். அருகில் உள்ளது சித்தமல்லி கிராமம் . இங்கு அமைந்துள்ளது புராதனமான , பிரசித்தி பெற்ற அபிராமி அம்பாள் சமேத ஸ்ரீ குலசேகரப் பெருமாள் திருக்கோயில் . இங்குள்ள சுவாமிக்கும் அம்மனுக்கும் நான்கு ஞாயிற்றுக் கிழமைகளில் நல்லெண்ணையால் மூன்று விளக்கு ஏற்றி வழிபட திருமணத் தடைகள் நீங்கி சீரும் சிறப்புடனும் திருமணம் நடைபெறும் .
1600 ஆண்டுகளுக்கு முன் குடைவரைக்கோயிலாகக் கட்டப்பட்ட பிள்ளையார்பட்டி ஆலயம்ஒன்பது நகரத்தார் ஆலயங்களுள் ஒன்று
விநாயகப் பெருமான் ஓங்கார வடிவில் அருள்புரியும் அற்புதத் தலம் இது . சங்கடஹர சதுர்த்தியில் கற்பக விநாயகரைத் தரிசித்தால் திருமணத் தடை நீங்கும் என்பது கண்கண்ட உண்மை.