ரிஷப ராசியை பற்றிய சில குறிப்புகள்
💚வாக்கு வன்மையும் திட்டமிடுவதில் வல்லமையும் உள்ளவரான நீங்கள் எதையும் முறைப்படி செய்யறது தான் நல்லது என்று நினைப்பீர்கள். அதேசமயம் உங்கள் வார்த்தைகளே சில சமயம் உங்களுக்கு எதிராக திரும்பும் என்பதை உணர்ந்து யோசித்து பேசனும்.
💚சுக்கிரனோடு ஆதிக்க ராசியில் பிறந்தவர் என்பதால் உங்களுக்கு சுகபோகங்களுக்கு குறைவிருக்காது. அதேசமயம் கேளிக்கை நாட்டத்தில் செலவை கட்டுப்படுத்தாமல் விடுவது கூடாதுங்க.
💚புதிய முயற்சிகள், பணி சார்ந்த விஷயங்களுக்காக செல்லும் சமயத்தில் பசுவுக்கு உங்களால் இயன்ற தீவனம் வாங்கி கொடுத்து விட்டு செல்லுங்கள். இதை நீங்கள் வெள்ளிக்கிழமையில் செய்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.
💚வீடு வாங்கும் போது அல்லது புதிதாக கட்ட போது அது உங்கள் பெயரால் அமையப்போகும் என்றால் அந்த வீட்டின் தலைவாசல் தெற்கு திசை நோக்கி இருப்பது நல்லது. அந்த திசையில் அமைக்க முடியாத நிலையில் இருந்தால் மேற்கு வாசலாக இருந்தாலும் சிறப்பு.
💚ரிஷப ராசியினரான உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய நிரம் வென்மை. இது தூய வெண்மையாக இல்லாமல் லேசாக பழுப்பு அல்லது மஞ்சள் கலந்த வெண்மையாக இருப்பது கூடுதல் சிறப்பு. முக்கியமான சமயங்களில் இளம் நிறம் ஏதாவது கலந்த வெண்ணிற உடை உடுத்துவது அதிர்ஷ்டகரமாக இருக்கும். அது இயலாவிட்டால் இளம் சந்தன நிறம் பரவாயில்லை அல்லது வெள்ளை கர்சீப் வச்சுக்குங்க அதுவும் நற்பலன் தரும்.
💚வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வணங்குவது விசேஷமான நற்பலன்களை கிட்டச் செய்யும். அன்றைய தினம் அசைவம் தவிர்த்து முடிந்தால் ஒருவேளை விரதமிருக்க முயற்சிக்கவும். திருமகள் அருளால் உங்கள் வாழ்க்கை எப்பொழுதும் சீராகவும் சிறப்பாகவும் இருக்கும்.