Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம்-பகுதி-27-லக்னத்தில் உள்ள கிரகங்களின் தன்மைகள்-மகரிஷி பராசரர்

அடிப்படை ஜோதிடம்-பகுதி-27-லக்னத்தில் உள்ள கிரகங்களின் தன்மைகள்-மகரிஷி பராசரர்

லக்னத்தில் உள்ள கிரகங்களின் தன்மைகள்-மகரிஷி பராசரர்

லக்னாதிபதி பாவ கிரகங்களுடன் சேர்ந்து 6, 8,12 இருப்பின் உடல்நிலை பாதிப்பு ஏற்படும். லக்கினாதிபதி கேந்திர/ திரிகோணங்களில் இருப்பின் தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். லக்னாதிபதி நீச்சமாக அல்லது எதிரி வீட்டிலோ இருப்பின் நோய்வாய் படுவார்கள்.

லக்னாதிபதி சுப கிரகங்களுடன் கிரகங்களுடன் சேர்ந்து கேந்திர/ திரிகோணங்களில் இருப்பின் அனைத்து நோய்களும் மறைந்து போகும்.

லக்கினாதிபதி அல்லது சந்திரன் பாவ கிரகங்களுடன் இருந்தாலோ அல்லது பார்த்தாலோ தேக அசெளரியம் ஏற்படும். சுபர் பார்த்திடில் சுபம் ஆகும்

சுபகிரகம் லக்னத்தில் இருப்பின் அந்த ஜாதகர் நல்ல அமைப்புடன் இருப்பார். பாவகிரகம் இருப்பின் தேக அமைப்பு இல்லை. சுபர் பார்ப்பதும் சேர்ந்து இருப்பதும் நல்ல தேக அமைப்பு இருக்கும்.

புதன், குரு, சுக்கிரன் கேந்திரங்களில் அல்லது திரிகோணங்களில் இருப்பின் அந்த ஜாதகர் நீண்ட ஆயுள், செல்வந்தர், புத்திசாலியாக இருப்பார். அரசால் பாராட்டுவார் 

புகழ், செல்வம், அளவற்ற இன்பம் மற்றும் உடல் சுகம் ஆகியவைகளை ஸ்திர ராசியில் லக்னாதிபதி இருக்க சுபர் பார்த்தால் அந்த ஜாதகர் மேற்கூறிய பலனை பெறுவார்

குரு, சுக்கிரன், புதன் ஆகியவை லக்னத்தில் சந்திரனோடு சேர்ந்து இருப்பின் அல்லது திரிகோணத்தில் இருப்பின் அந்த ஜாதகர் அதிர்ஷ்டம் மிக்கவர் 

சனி அல்லது செவ்வாய் மேஷம், ரிஷபம் மற்றும் சிம்ம லக்னத்தில் இருப்பின் அந்த ஜாதகர் கொடி சுற்றி பிறப்பார். 

சூரியன் கேந்திரங்களில் இல்லாமல் மற்ற கிரகங்கள் இரட்டை ராசியில் பலமுடன் இருப்பின் அந்த குழந்தை இரட்டை குழந்தைகளில் ஒன்றாகும். 

சூரியன் மற்றும் சந்திரன் ஒரே பாவத்தில் வர்க்கோத்தமம் ஆகி நின்றிட அந்தக் குழந்தை பிறந்த மூன்று மாதத்தில் இருந்து மூன்று தாயார்களால் வளர்க்கப்படும். பின்னர் தகப்பனார் மற்றும் சகோதரர்களால் வரப்படுவார்.

சந்திரனும் லக்னத்திற்கு ஈடானது ஆகும் அதன் மூலம் ஒருவரின் வயிற்றுப்புண் அங்க அடையாளங்கள் ஆகியவற்றை அறிய முடியும் 

திரேக்காணம்-1  உடல் அவயங்கள் ஏறு வரிசைப்படி தலை, கண்கள், காது, மூக்கு தாடை மற்றும் முகம் ஆகியவை முதல் திரேக்காணம். 

திரேக்காணம்-2 உடல் அவயங்கள் ஏறு வரிசைப்படி கழுத்து, தோள்பட்டை, கைகள், பக்கம், இருதயம் ,வயிறு, தொப்புள் 

அவயங்கள் பாதிப்பு: அசுப கிரகங்களில் அவயங்கள் எவையோ அதுதொடர்பான அவயங்கள் பாதிக்கபடும்.

 திரிகோணம்-3 உடல் அவயங்கள் ஏறுவரிசைப்படி அடிவயிறு, முதல் பாதம் வரை உள்ள அவயங்கள் 

அவயங்கள் தொடர்பான அட்டவணை

லக்னத்தில் உள்ள கிரகங்களின் தன்மைகள்
லக்னத்தில் உள்ள கிரகங்களின் தன்மைகள்
லக்னத்தில் உள்ள கிரகங்களின் தன்மைகள்
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!