கன்னி ராசி
❤எளிமையும், சுறுசுறுப்பும் தான் உங்கள் அடையாளம். அதேசமயம் முணுக்குன்னு வருகிற கோபமும், புகழ்ச்சிக்கு மயங்கர குணமும் உங்கள் உயர்வுக்கு தடையாக இருக்கும். புறம் பேசுறவங்களை ஒதுக்கி, முகஸ்துதியைத் தவிர்த்தால், உங்கள் முன்னேற்றம் முழு வீச்சில் இருக்கும்.
❤புத்திகாரகனான புதன் ஆட்சி மட்டுமல்ல உச்சமும் அடையக்கூடிய ராசியில் பிறந்த உங்களுக்கு இயல்பாகவே புத்திசாலித்தனமும், எந்த விஷயத்திலும் முழுமையான ஈடுபாடும் இருக்கும். அதே சமயம் அதிகமா தெரிஞ்சிகரதால பொதுவாகவே வரக்கூடிய குழப்பமும் உங்களுக்கு இருக்கும். வீண் சந்தேகம் வேண்டாத குழப்பத்தை தவிர்த்தால் எல்லாமே ஏற்றம் ஆகும்.
❤ஒரே சமயத்தில் பலவித செயல்களை செய்வது தனித்திறமை தான். அதுவே சில சமயம் குழப்பத்தை உருவாக்கும் போது விலகி நிதானமா யோசிக்கிறது தான் நல்லது.
❤கல்வி, பணி, திருமணம் இப்படி முக்கியமான முயற்சிகளுக்காக செல்லும்போது வழியில் மாற்றுத்திறனாளிகள் யாருக்காவது இயன்ற உதவியை செய்யரது உங்கள் முயற்சியை திருவினையாக்கும்.
❤உங்கள் பெயரில் அமையக்கூடிய வீடு அலுவலகம் இப்படி எதுவாக இருந்தாலும் அது தெற்கு திசையை நோக்கியதாக இருப்பது நல்லது. மேற்கில் இருந்தாலும் சிறப்பு தான்.
❤உங்கள் ராசி படி ஊதா, அடர் மஞ்சள் இரண்டு நிறங்களுமே உங்களுக்கு அதிர்ஷ்டகரமானது. முக்கியமான தருணங்களில் இந்த நேரத்தில் ஆடை அணிவது அல்லது இந்த நேரத்தில் ஒரு கைகுட்டையாவது வைத்திருப்பது நல்லது.
❤எப்பொழுதும் நரசிம்மர், சக்கரத்தாழ்வார், பெருமாள் தாயாரைக் கும்பிடுங்கள். புதன்கிழமைகளில் அசைவம் தவிருங்கள். முடிந்தால் ஒரு பொழுது விரதம் இருங்கள். பெருமாள் அருளால் உங்கள் வாழ்க்கையில் பெருமைகள் சேரும்.