மேஷ ராசி திருமண வாழ்க்கை
மேஷ ராசி -மேஷ லக்னம்
இவரின் 7 – ஆம் வீடு துலாம். இதன் அதிபதி சுக்கிரன். துலாத்தில் செவ்வாய் , ராகு , குரு சாரம் வாங்கிய சித்திரை , சுவாதி , விசாகம் ஆகிய நட்சத்திரங்கள் உள்ளன.எனவே மேஷ லக்ன- ராசியினரின் வாழ்க்கைத் துணைவர் அடிப்படையில் பொறுமை , அழகு கொண்டவராக இருப்பினும் , சிலநேரங்களில் கோபமாகவும் பிடிவாதத்துடனும் நடந்து கொள்வர்.
தெய்வபக்தி உடையவராகவும் , ஆன்மிகத்துக்கு செலவு செய்பவராகவும் இருப்பர்.எதையும் கணக்கு பார்த்துப் பழகுவர்.வியாபார நுணுக்கம் கொண்டவர்.
மேஷ லக்ன- ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணையின் தாய்வீடு நதி , கடல் போன்ற இடங்களில் அருகே இருக்கும். வாழ்க்கைத் துணை அமையும் திசை மேற்கு அல்லது தென்கிழக்காக இருக்கும். இவர்களில் வாழ்க்கைத் துணை பெரும்பாலும் விவசாயம் , இனிப்பு அலங்கார பொருட்கள் போன்றவை விற்பனை செய்பவராக இருப்பார்.
இவர்களின் 7 ஆம் அதிபதி உச்சமானால் நிறைய பண வரவு கொண்டவராகவும், அதேசமயம் நிறைய செலவு செய்பவராகவும் அமைவார்.
அதுபோல் 7 – ஆம் அதிபதி நீசமானால் இல்லற வாழ்க்கையில் பிடிப்பின்மையும்,நோய்க்கு செவுவிடுதலும் , சதா சண்டையும் இருக்கும்.
7ம் அதிபதி தனது பகை வீடான கடக, சிம்மத்தில் இருந்தாலும், சற்று கோபமாக காணப்படுவார்.
7 – ஆம் அதிபதி 7 – ல் ஆட்சி பெற்றால் . கோபமும் குணமும் கலந்த வாழ்க்கைத் துணையாக அமைவார்.பயணம் செய்வதை மிகவும் விரும்புவார்.
சற்று தந்திர குணமும் இருக்கும்.
ர,ரி,ரு,ரா,த,தி,து,தே(R,T) எனும் எழுத்துகள் வாழ்க்கைத் துணையின் முதல் எழுத்துகளாக வரக்கூடும்.
மேலும் துலா ராசியின் எழுத்தான கா(K) என்ற எழுத்திலும் துணைவர் பெயர் ஆரம்பிக்கும்.