லக்னாதிபதி நின்ற பலன்கள்-மகரிஷி பராசரர்
இந்த பதிவை படிப்பதற்கு முன் மேலே கொடுக்கப்பட்டுள்ள பதிவை படித்துவிட்டு தொடரவும் அப்போதுதான் தெளிவாக புரியும்
அடிப்படை ஜோதிடம்-பகுதி-26-சத்தியாச்சாரியாரின்படி
லக்னாதிபதி நின்ற பலன்கள்-
லக்னாதிபதி லக்னத்தில் இருந்து ஆறாம் இடத்தில் இருந்தால், சுபயோகம். அது வளமையுள்ள அல்லது சுப தன்மையுடன் அல்லது சுபர் பார்வை உடன் இருந்தால் ஜாதகர் ராணுவ தலைமை அதிகாரியாகவும் அல்லது முதல்தர மருத்துவராகவும்,மருந்துகளில் அதிகம் கற்றவராகவும் இருப்பார்.
லக்னாதிபதி 5-ம் இடத்தில் இருந்தால் அது சுப ராசி, ராசியிலும், நவாம்சத்திலும் அல்லது சுப நட்சத்திரத்திலும் அல்லது சுபர்களுக்கு நடுவில் அல்லது சுபர் பார்வை பெற்று இருந்தால் ஜாதகரை பெரும் புள்ளிகள் தத்து எடுத்து போவார்கள். அல்லது அவரே பெரும் புள்ளியாகவும், பெரிய தலைவராகவும் அல்லது கடவுளின் அருளை பெற்றவராகவும் இருப்பார்.
லக்னாதிபதி பலமாக இருந்து 4 ஆம் வீட்டில் இருந்தால் கீழ்கண்ட சுப யோகத்தை பெறுவார். அதிகப்படியான நிலங்களை பெறுவார்,பெரும் பணக்காரர், வசதி வாய்ப்புகளும், மகிழ்ச்சியும், தாயாரின் பரம்பரை சொத்தும், அதிகப்படியான வண்டி வாகனங்களும் அடைந்தவர். மேலும் புகழ் அடைவான்.
லக்னாதிபதி தன்னுடைய வலிமையுடன் மூன்றாம் பாவத்தில் சுபயோகத்தில் இருப்பின் ஜாதகர் புகழ், நுண்ணறிவு, சகோதரர் மூலம் சிபாரிசு செய்யப்படுதல், சங்கீதத்தில் புலமையும்,புகழ்பெற்ற கணிதம் தெரிந்த ஜோதிடரும் ஆவார்.
லக்கினாதிபதி வலிமையுடன் 2வது பாவத்தில் சுபயோகத்தில் இருப்பினும் ஜாதகர் தன்னுடைய குடும்பத்தை நடத்திச் செல்வந்தராகவும் ஆவார். மகிழ்ச்சியும், வசதிகளுடனும்,சிற்றின்ப ஆசையும் ,பரந்த கண்களும் இருக்கும்.
லக்னாதிபதி வலிமை பெற்று, லக்ன கேந்திரத்தில் இருந்தால் மேலே கூறிய சுபயோகம். ஜாதகர் வலிமை உள்ளவராகவும் எல்லா லக்னாதிபதியின் குணங்களை பெற்றவராகவும், பெரிய தலைவராகவும், ஜாதி மக்களில் வெளிப்படுத்துபவர், புகழ் பெற்றவராக திகழ்வார்.
லக்கினாதிபதி பலம் வாய்ந்தவராகவும் 12ஆம் இடத்தில் இருந்து சுப யோகம் பெற்றிருந்தால் ஜாதகர் தன்னுடைய தகப்பனாரின் சொத்துக்களை நல்ல வழியிலும், மதம் சம்பந்தப்பட்ட கருணை இல்லங்களுக்கும் கொடுத்து அமைதியாகவும், ஆனந்ததுடனும் வாழ்நாள் முழுவதும் வசதியிலும் மகிழ்ச்சியிலும் செலவழித்துவிட்டு சொத்தையும் குறைத்து விடுவார்.
லக்கினாதிபதி சக்தி வாய்ந்தவராகவும் 11ம் பாவத்தில் இருந்து கொண்டு சுபயோகம் பெற்றும் இருப்பின், ஜாதகர் எப்போதும் அவருடைய முயற்சியால் லாபங்களும், பெயரையும்,புகழையும்,மூத்த சகோதரர் மூலம் பெறுவார். பதினோராம் வீட்டதிபதி மூலம் எல்லாவிதமான பொருட்களையும் அடைவார்
லக்கினாதிபதி சக்தி வாய்ந்தவராகவும் 10ம் பாவத்தில் சுபயோகத்தில் இருந்தால் ஜாதகர் பிரசித்திபெற்ற வராகவும், தன்னுடைய அரசாங்க தொடர்பை அடைவார் மேலும் 10ம் வீட்டுக்குரிய வேலைகளும் பத்தாம் அதிபதி வழங்குவார்.
லக்னாதிபதி சக்தி வாய்ந்தவராகவும் ஒன்பதாம் பாவத்தில் இருந்து கொண்டு, சுபயோகம் இருந்தால் ஜாதகர் தந்தையின் சொத்துக்கள், செல்வங்களையும் பெறுவார்
ஜாதகர் தான தர்மங்களை செய்வார். குருவுக்கு விசுவாசமாக இருந்து பணிகளை செய்வார்.
லக்னாதிபதி பலமானவராக இருந்து 8-ம் வீட்டில் இருந்தால், சுபயோகம் பெற்றால், ஜாதகர் நீண்ட ஆயுளுடன் ஏழையாகவும், மற்றவர்களுக்கு உதவி செய்து கொண்டும், மற்றவர்களுடன் நல்லுறவுகள், பேச்சுகளுடன் தன்னுடைய வேலைகளை செய்து கொண்டும், ஜாக்கிரதையாகவும், நல்லவிதமாக இருந்து அமைதியான மரணத்தை பெறுவார்.
லக்கினாதிபதி பலம் பெற்றவராக 7-ம் இடத்தில் இருந்துகொண்டு சுப யோகம் பெற்றிருந்தால். ஜாதகர் வெளி தேசத்திலேயே வாழ்வார், அல்லது மாமனார் வீட்டில் வரம்புக்கு மீறியதும், அதிகமான பெண்களுடனும், நல்ல மாலைகளுடன், சந்தனத்துடனும் மகிழ்ச்சியை அனுபவிப்பார்.
பிறக்கும் நேரத்தில் அசுப ராசியிலும், ராசிச் சக்கரத்திலும் அல்லது நவாம்ச சக்கரத்திலும் அல்லது 3,5,7 நட்சத்திரத்தில், ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து அல்லது அசுபத்திற்கு மத்தியில் அல்லது அசுபத்தின் பார்வையில்,கிரகம் இருந்தால் அசுபயோகம், நட்சத்திரத்தை பிறந்த நட்சத்திரம் எந்த கிரகத்தின் நட்சத்திரம் இருக்கிறதோ அதையும் சேர்த்துக் கொண்டு கணக்கிட வேண்டும்.
லக்னாதிபதி பலவீனமாகவும் 3 லிருந்து 12 வரையிலுள்ள பாவங்களிலிருந்தும் மேலே குறிப்பிட்டபடி இருந்தால் அசுப யோகம் என்றும் இதில் குறிப்பிட்டுள்ள 3 முதல் 12 வரை மேலே கூறியவை திருப்பி போடப்படும். அதாவது எதிர்மறையாக இருந்தால் இவ்வாறு நடக்க நேரிடும். லக்கினாதிபதி சுபராயும், மேலும் அசுபயோகத்தில் இருந்தால் இதன் விளைவுகளும் பலத்தின் பாகையைப் பொறுத்து வேறுபட்டு சுபயோக, அசுபயோக பலன்கள் இருக்கும்.
லக்னாதிபதி பலம் பொருந்தியவராகவும், லக்னாதிபதி இருக்கும் இடம் ராசிச் சக்கரத்தில் பலவீனமாகவும் இருப்பின் விளைவுகளும் மத்திமமாய் இருக்கும்.
எப்போது லக்னாதிபதி பலம் இல்லாதவராகவும், ராசியின் அதிபதி ராசி சக்கரத்தில் லக்னாதிபதியுடன் எந்த இடத்தில் இருக்கிறாரோ விளைவுகளும் தீய பலனாக இருக்கும்
ஜோதிடர் இவைகளை கவனமாக சீர்தூக்கிப் பார்த்து மேலே குறிப்பிடப்பட்ட வைகளை கருதி அவர் சொல்லிய பலன்களும் நடக்காமலும் சரி இல்லாமலும் போகாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
லக்னாதிபதி வலுவாகவும் லக்னத்திலும் மேலும் சந்திர லக்னத்தில் ராசியிலும் நவாம்ச சக்கரத்திலும் சுபர்களுடன் அல்லது சுபர்களின் பார்வை எல்லாவற்றையும் தீர்க்கமாக ஆராய்ந்து சுப அல்லது அசுப அல்லது இரண்டின் அசுப சுபத்தின் நன்மைகளும், விளைவுகளும் கலந்து இருக்கும் என்று சொல்லவேண்டும். அசுபத்தின் மத்தியில் அல்லது அதன் பார்வையில் இருந்தால் தீமை ஏற்படும் என்பதை சொல்ல வேண்டும்.
பாவங்களில் தூண்டப்பட்டு ஏற்படும் விளைவுகள், பிறந்த லக்னம் எந்த லக்னத்தை பார்க்கிறதோ இவைகளையும் சேர்த்து பலன் கூறவேண்டும்.
சர ராசி (மேஷம் கடகம் துலாம் மகரம்) லக்னமாக இருந்தால் அல்லது நவாம்ச லக்னம் சுப வீடுகளிலும் அந்த லக்னாதிபதி மேற்குறிப்பிட்ட ராசியில் இருந்தாலும், கேந்திர திரிகோணங்களில் சர ராசி சக்கரத்தில் சுப ராசியிலும், நவாம்ச சக்கரத்திலும் அப்படியே இருந்தால் ஜாதகர் அரச குடும்பத்தில் பிறந்து புகழ் செல்வாக்குடன் இருப்பான்.
லக்னாதிபதி கேந்திர அல்லது திரிகோண ராசியிலும் சுப ராசியிலும் நவாம்ச சக்கரத்தில் ராசியிலும், அந்த சுப நட்சத்திரத்தில் இருந்தால் ஜாதகர் சொந்த முயற்சியால் உழைப்பினாலும் அரசிடமிருந்து ஆதரவைப் பெறுவர்.