மேஷம்-சுக்ரன்
ஒரு ஆணின் ஜாதகத்தில் மேஷத்தில் சுக்ரன் இருந்தால் , அவன் மனைவி குடும்பம் நடத்துவதில் திறமையானவள் பிடிவாதம் , முன்கோப குணம் உள்ளவள் ஆதிக்க எண்ணம் , பிறரை அடக்கியாள வேண்டும் என நினைப்பவள்.சிறிய குற்றம் , தவறென்றாலும் பெரிய குற்றமாக எண்ணுவாள். கணவனை மிஞ்சி செயல்களைச் செய்வாள். சில நேரங்களில் முன்யோசனையின்றி தன் விருப்பம்போல் எதையாவது செய்துவிட்டுப் பின் வருத்தப்படுவாள் . அவசரபுக்தி உடையவள்.
இவனுக்கு மனைவியாக வரப்போகிறவள் கௌரவமான குடும்பத்தில் பிறந்தவள் . ஜாதகன் பிறந்த ஊருக்கு அருகிலோ அல்லது சொந்த ஊரிலோ பிறந்திருப்பாள். சொந்தத்திலும் பெண் அமையக்கூடும்.
அதிகபட்சமாக 25 மைல் தூரத்தில் தெற்கு அல்லது கிழக்கு சார்ந்த திசையில் பெண் அமையும். அவள் பிறந்த வீடு கிழக்கு மேற்கு வீதியில் , வடக்கு- தெற்கு முன்வாசலுள்ள வீடாக இருக்கும் .
முருகன் , தமிழ் , வெற்றி , வீரம் , பூமி , வீரர்கள் , நெருப்பு சம்பந்தப்பட்ட பெயரை உடையவள் மனைவியாக அமைவாள் .