ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு-சந்திரன் இணைவு பார்வை தரும் பலன்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

குரு-சந்திரன் இணைவு
ரிஷப லக்னம் 

ரிஷப லக்னத்தினருக்கு சந்திரன் முயற்சி ஸ்தானாதிபதி ; குரு அஷ்ட மாதிபதி , லாபாதிபதி. சுய ஜாகத்தில் குரு- சந்திரன் சேர்க்கை எந்த இடத்தில் இருந்தாலும் , ஓரிடத்தில் நிலையாக வாழமுடியாமல் அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்ய நேரும்.

அஷ்டமாதிபதி குரு , முயற்சி ஸ்தானாதிபதி சந்திரனுடன் இணைவதால் சிறிய செயலுக்கும் பலமுறை முயற்சிசெய்ய நேரும். சகோதரர்களுக்குள் வம்பு , வழக்கு உருவாகும். சிலருக்கு காதல் , கலப்புத் திருமணம் நடக்கும் வாய்ப்பு அதிகம்.

குரு தசை புக்திக் காலங்களில் அஷ்டமாதிபதி என்பதால் காலதாமதத் திருமணத்தைத் தரலாம். அல்லது திருமணத்திற்குப்பிறகு வம்பு வழக்கை சந்திக்க நேரும்.இளம்வயதில் அஷ்டமாதிபதியின் தசை புக்தி நடந்தால் ரகசியத்திருமணம் நடக்கும்.

இவரே 11 – ஆம் பாவாதிபதியாக இருப்பதால் மத்திம வயதில் இரண்டாம் திருமணம் நடக்கும்.

ரிஷபத்திற்கு 3 – ஆமதிபதி சந்திரனுடன் சம்பந்தம் பெறும் குருபகவான் அஷ்டமாதிபதி வேலையை பரிபூரணமாகச் செய்வார். லாபாதிபதியாக சுபப் பலன்களை வழங்குவதரிது.

குரு-சந்திரன் இணைவு
பரிகாரம் 

வியாழக்கிழமை காலை 11.00-12.00 வரையிலான சந்திர ஓரையில் வேங்கடாசலபதியை வணங்க நன்மை உண்டாகும்.

Leave a Comment

error: Content is protected !!