சுக்கிரனுடன் இணையும் மற்ற கிரகங்களின் பலன்கள்
சுக்கிரன்-குரு சேர்க்கை
பிடிவாத குணம் கொண்டவர்கள். தன்னைப் பற்றி மட்டும் சிந்திக்க கூடியவர்கள். மற்றவர்களுக்கு உபதேசிப்பதில் வல்லவர்கள். அனுபவ அறிவு உடையவர்கள். ஆடம்பரப் பொருட்களின் மீது விருப்பம் கொண்டவர்கள்.
சுக்கிரன்-சந்திரன் சேர்க்கை
அழகிய தேகம் கொண்டவர்கள். சாதுரியமான செயல்பாடுகளை கொண்டவர்கள். கல்வி செல்வம் உடையவர்கள். இளகிய மனம் கொண்டவர்கள்.
சுக்கிரன்-சனி சேர்க்கை
கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள். உழைத்து முன்னேற கூடியவர்கள். உணர்ச்சி மிக்கவர்கள். விவசாயம் தொடர்பான செயல்களில் விருப்பம் கொண்டவர்கள். எதையும் ஆராயாமல் செய்யக்கூடியவர்கள்.
சுக்கிரன்-ராகு சேர்க்கை
மனைவியிடம் அதிக அன்பு கொண்டவர்கள். நினைத்த காரியத்தை செய்து முடிக்க கூடியவர்கள். செல்வாக்கு உடையவர்கள். வெளியூர் பயணங்களில் விருப்பம் கொண்டவர்கள். அதிக ஆசை கொண்டவர்கள். தன்னைப்பற்றி தாழ்வாக எண்ண கூடியவர்கள்.
சுக்கிரன்-கேது சேர்க்கை
ஆன்மீக ஈடுபாடு உடையவர்கள். கற்பனைவளம் கொண்டவர்கள். ஆடம்பரப் பொருட்களின் மீது விருப்பம் இல்லாதவர்கள். மறைமுக செயல்பாடுகளை கொண்டவர்கள். நெருக்கமானவர்களிடம் அடிக்கடி மனஸ்தாபங்கள் உண்டாகும்.
சுக்கிரன்-சூரியன் சேர்க்கை
அலங்கார பொருள்களின் மீது விருப்பம் கொண்டவர்கள். வாகன யோகம் உடையவர்கள். பாசனவசதி உடையவர்கள். கண் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் இருக்கும்.
சுக்கிரன்-செவ்வாய் சேர்க்கை
வெளியூர் பயணங்களில் ஆர்வம் கொண்டவர்கள். எழில்மிகு தோற்றம் கொண்டவர்கள். எதையும் சாமர்த்தியமாக செய்யும் திறமை உடையவர்கள். புதுவிதமான எண்ணங்களைக் கொண்டவர்கள்.
சுக்கிரன்-புதன் சேர்க்கை
மற்றவர்களுக்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ளக் கூடியவர்கள். இறை வழிபாடுகளில் ஆர்வம் கொண்டவர்கள். நினைத்த பணியை செய்து முடிக்க கூடியவர்கள். எதிலும் நேர்மையாக விரும்பியவர்கள். தன்னால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவ கூடியவர்கள். அனைவரையும் ஈர்க்கும் குணம் கொண்டவர்கள்.