சனி பெயர்ச்சி பலன்கள்
புனர்பூசம் நட்சத்திரம்1,2,3ம் பாதம்
கண்டிப்பாக கல்யாணம் நடந்துவிடும். தொழில் மேன்மை உண்டு. வியாபாரத்தில் நல்ல பங்குதாரர் கிடைப்பார். சிலர் தந்தையின் தொழிலில் பங்கெடுப்பீர்கள். வெளிநாட்டு சம்பந்த வேலை தொழில் கிடைக்கும். தொழிலாளர் முதலாளி ஆவார்கள்.
சில வழக்கறிஞர்கள் நீதிபதியாக உயர்வு பெறுவர். இந்த சனிப்பெயர்ச்சி நீங்கள் எந்த நிலையில் எவ்வகை வேலையில் இருப்பினும் உங்களை ஒரு படி மேலே செல்ல வைத்து கௌரவம் தேடித்தரும்.
பலன் தரும் பரிகாரம்
ஸ்ரீ கிருஷ்ணரை வணங்கவும்.
புனர்பூசம் 4ம் பாதம்
உங்களின் நோய், கடன் தாக்கத்தை குறைப்பது போலவே உங்களின் மேன்மையும் குறைக்கும். பணியிடங்களில் பதவி குறைப்பு வரும். தந்தையின் நலனில் கவனம் தேவை. உயர்கல்வியில் அதிக முனைப்பு அவசியம். வெளிநாட்டுப் பயணம் தடைகளை சந்திக்கும். அஷ்டம சனி ஆதலால் நிறைய நல்ல பலன்கள் கிடைக்காது.
பலன் தரும் பரிகாரம்
வியாழக்கிழமைகளில் சிவனை வணங்கவும்
திருவாதிரை நட்சத்திர ஜாதகர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்கள் தேவையில்லையா…???