அதிசார குரு பெயர்ச்சி பலன்கள் 2025 :மீனம்
குரு பகவான் ஆசி பெற்ற மீன ராசி அன்பர்களே !!!குருபகவான் தற்போது 4-ம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். அர்த்திராஷ்டம குரு அவ்வளவு நற்பலன்களை உங்களுக்குத் தந்திருக்க மாட்டார்.தாயாரின் ஆரோக்கியத்தில் ஏதேனும் உபாதை களைக் கொடுத்து, அதன் மூலம் செலவுகள் ஏற்படுத்தியிருப்பார். தாய்வழியில் தேவையற்ற வாக்குவாதங்களும் வந்து போயிருக்கும்.
அக்டோபர் 18 முதல் குருபகவான் அதிசாரத் தில் 5-ம் வீட்டில் வந்து அமர்கிறார். இது மீன் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலம் எனலாம். கஷ்டப்பட்ட உங்களுக்குக் காலம் தரும் ஒரு பரிசாகவே நீங்கள் இதைக் கருதலாம்.
5-ம் வீட்டில் அமரும் குருபகவான், உங்கள் நம்பிக்கையை அதிகப்படுத்தப் போகிறார். முயற்சிகள் வெற்றியாகும். பூர்விகச் சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். விட்டுப்போன குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். குல தெய்வத்தின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.
நீண்டகாலமாகக் குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் காத்திருபவர்களுக்கு, நல்ல தகவல் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். அவர்கள் வழியில் பண வரவுக்கும் வாய்ப்புண்டு.
ராசிநாதன் குரு, ராசியைப் பார்ப்பதால் சோர்ந்திருந்த உங்கள் முகம் தெளிவடையும். இளமையும் பொலிவும் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். செயல்களில் வேகம் பிறக்கும்.
எடுத்த காரியத்தை முடித்துக்காட்டுவீர்கள். இதுவரை இருந்த தயக்கமும் கவலையும் விலகும். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் பிறக்கும்.
குரு பார்வை பலன்கள்
ராசிக்கு 11-ம் வீட்டை குரு பார்ப்பதால், பண வரவில் இருந்த தடைகள் நீங்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். பழைய கடன்களை அடைக்க புது வழி பிறக்கும்; உங்களில் சிலர் புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். பல வகையிலும் வெற்றிகள் குவியும். மூத்த சகோதரர்களால் நன்மையும் லாபமும் கிடைக்கும்.
ராசிக்கு 9-ம் வீட்டை குரு பார்ப்பதால் ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். தந்தை வழியில் நற்பலன்கள் உண்டாகும். எதிர்பாராத தொகை கைக்குவரும். தந்தையின் ஆரோக்கியம் மேன்மை அடையும். பூர்விகச் சொத்துப் பிரச்னை களிலும் நல்ல தீர்வு உண்டாகும்.
பரிகாரம்: குலதெய்வத்தை தினந்தோறும் நினைத்து வழிபடுங்கள். சனிக்கிழமைகளில் மகாவிஷ்ணுவை வழிபட்டு வாருங்கள். மாதத்தில் ஒரு நாளேனும் சஷ்டி விரதம் இருந்து, அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று, மனமுருக வழிபட்டு வாருங்கள்.