அதிசார குருபெயர்ச்சி பலன்கள் 2025:தனுசு
குரு பகவானின் அருள் பெற்ற தனுசு ராசி அன்பர்களே!!! தற்போது குருபகவான் 7ல் அமர்ந்து ராசியை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றாலும் எல்லோரும் சொல்வது போல் கேந்திரத்தில் அமர்ந்த குரு உங்களுக்கு பெரிய நன்மைகள் எதையும் செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அக்டோபர் 18ம் தேதி முதல் அவர் 8ம் வீட்டில் அதிசாரமாக அடியெடுத்து வைத்து 48 நாட்கள் அங்கு அமர்ந்து பலர் போகிறார்.
ராசிநாதன் அஸ்டமத்தில் மறைவதால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்குமோ என்று அஞ்ச வேண்டாம். உங்கள் ராசிநாதன் கடகத்தில் உச்சம் அடைகிறார் என்பதை மறக்க வேண்டாம். அதிசாரத்தில் உச்சமடைவதால் திடீர் யோக அமைப்புகளை உங்களுக்கு குரு பகவான் தருவார்.
எட்டாமிடம் சுபத்துவம் அடைவதால் வெளிநாடு வெளி மாநில வேலைக்கு காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பயணங்கள் அதிகரிக்கும். அதன் மூலம் ஆதாயமும் கிடைக்கும் என்றாலும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. இரவில் பயணங்களை தவிர்க்க பாருங்கள்.
குரு பகவான் பார்வை பலன்கள்
குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தை பார்ப்பதால் பேச்சில் இனிமை கூடும். பல காலமாக முடியாத விஷயங்களை கூட அதிசார குரு காலகட்டத்தில் பேசிய சாதிப்பீர்கள். பேச்சால் புதிய நட்புகளை இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும் எதிர்பார்த்த பணம் வரவும் உண்டாகும்.
குரு பகவான் 4ம் வீட்டை பார்ப்பதால் இதுவரையிலும் ஏதேனும் காரணங்களால் நின்று போன வீடு கட்டும் பணியை மீண்டும் தொடர்வீர்கள். தாய் வழியில் எதிர்பாராத நன்மைகள் நடக்க வாய்ப்புண்டு. தாய் வழியிலிருந்து வந்த தொல்லைகளும் விலகும் உங்களின் பலர் வண்டி வாகனங்கள் வாங்கி மகிழுங்கள்.
12-ம் வீட்ட இந்த காலகட்டத்தில் நீண்ட நாட்களாக செல்ல நினைத்த கோயில்களுக்கு சென்று சரிதனம் செய்து வருவீர்கள்.
பரிகாரம் :நவகிரக குருவுக்கு வஸ்திரம் சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள். குருபகவான் நற்பலன்களை அள்ளிக் கொடுப்பார்.