அருள்மிகு பரிமளரங்கநாதர் திருக்கோயில்
திருமாலுக்கு காவிரிக் கரையின் மீது அவ்வளவு இஷ்டம் போலும்.சோழ நாட்டில்தான் நிறைய இடங்களில் பகவான் தன் லீலா வினோதங்களைக் காட்டியிருக்கிறார். இந்தியாவிலுள்ள யாத்ரிகர்கள் எல்லோரும் சோழ நாட்டிற்கு வர வேண்டும் , தன்னைத் தரிசிக்க வேண்டும் என்பதில் பகவான் மிகுந்த விருப்பப்பட்டிருக்கலாம். அதற்கு அடையாளம் தான் திருஇந்தளூரில் குடிகொண்டிருக்கும் பரிமளரங்கநாதர் திருக்கோயில்.
மாயவரம் அல்லது மயிலாடுதுறையின் நகரின் நடுப்புறத்திலே மையமாகக் கொண்டு விளங்கும் இந்த திருஇந்தளூர் கோயிலின்
மூலவர் பரிமள இரங்கநாதன். இவருக்கு இன்னொரு பெயர் மருவினிய மைந்தன்.என்ற அழகான திருப்பெயர்.
உற்சவர் சுகந்தவ நாதன்.கிழக்கே பார்த்த தரிசனம்.
விமானம் வேத சக்ர விமானம்.
தீர்த்தம் இந்து புஷ்கரிணி.
சந்திரனுக்கு பலமுறை நேரிடையாகத் தரிசனம் கொடுத்த ஸ்தலம்.
இந்தப் பெருமாளைப் பற்றி 11 பாசுரங்கள் திருமங்கையாழ்வார் பாடியிருக்கிறார் .
கங்கைக்கும் காவிரிக்கும் முக்கியத்துவம் கொடுத்த வரலாறு இங்குதான் நடந்திருக்கிறது.பகவான் தலை மாட்டில் காவிரித் தாயாரும் கால் பக்கத்தில் கங்கையும் அமர்ந்திருக்கின்ற காட்சி மிகவும் அற்புதமானது. வேறெங்கும் காண முடியாதது.
ஐப்பசி மாதம் முழுவதும் இந்த கோயிலில் விழாக் கோலம்தான். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் யாத்ரிகர்கள் வந்து குவிவார்கள். காவிரி நதி – கடலில் சங்கமம் ஆகும் இடத்தில் ‘ கடைமுக ஸ்நானம் நடைபெறும். இது மிகவும் புனிதமான ஸ்நானம் என்பதால் இந்த ஸ்தலம் வரலாற்றுச் சிறப்பு உடையது.
பகவான் சயனத் திருக்கோலத்தில் சதுர்புஜத்தில் தரிசனம் கொடுக்கிறார். சந்திரனுக்கு மற்ற தலங்களில் பாவ விமோசனம் கிடைத்தாலும் சந்திரன் திருப்தி அடையவில்லை . இம்மியளவு கூட தன் மீது எந்த சாபமும் ஒட்டியிருக்கக் கூடாது என்பதில் சந்திரன் கண்ணும் கருத்துமாகக் கொண்டு பெருமாளிடம் தன் குறையைச் சொல்வதைவிட தாயாரிடம் சொன்னால் நல்ல பலன் கிடைக்கும் என்றெண்ணி தாயாரான புண்டரீக வல்லியிடம் தன் வேண்டுகோளைச் சொல்ல பெருமாளும் தாயாரும் சேர்ந்து சந்திரன் மனக் குறையை அவர் மீதிலிருந்த பாவத்தை அப்படியே போக்கியதாகச் சொல்கிறார்கள். இதனால்தான் இங்குள்ள தாயாருக்கு சந்திரபாப விமோசந வல்லி என்று பெயர் உண்டு.
பரிகாரம் :
100 ஏகாதசி விரதம் இருந்து இந்த பெருமாளை வேண்டினால் நினைத்த வரம் கிடைக்கும்.மற்ற தலத்திற்குச் சென்றும் – பாபம் தீரவில்லையென்று கவலைப் படுகிறவர்கள் இங்கு வந்து தங்களது பாபம். தங்கள் குடும்பத்தின் பாவம் , முன்னோர்கள் செய்த பாபம் அனைத்தையும் விலக்கிக் கொள்ள முடியும். தெரிந்தோ தெரியாமலோ பஞ்சமா பாதகங்கள் செய்திருந்தால் அதையும் இங்கு வந்து போக்கிக் கொள்ளலாம். பெண் பித்தால் தவறு செய்தவர்கள் , பெண்களின் சாபத்திற்கு ஆளானவர்கள் – பெண் வாரிசு பிறக்கவில்லையே என்று கவலைப்படுகிறவர்கள் இங்கு வந்து சாந்தி செய்தால் அவர்களது அனைத்துக் குறைகளும் விலகிவிடும்.
கோவில் இருப்பிடம் :