அஸ்வினி தாரா பலன் அட்டவணை
இங்கே ஜென்மம் என்பது “முதல் நிலை விண்மீன்” என பொருள்படுகிறது. தாரா – தாரை என்பதற்கு தமிழில் விண்மீன் என பொருள்.
அணு என்கிற வடமொழி சொல்லிற்கு “அடுத்தது” என தமிழில் பொருள்படுகிறது. பிறந்த விண்மீனுக்கு அடுத்த நிலையில் உள்ள விண்மீன், “அடுத்த விண்மீன்” என பெயர் சூட்டப்படுகிறது – இதை அணு தாரா என அழைக்கிறார்கள்.
மூன்று என்ற தமிழ் சொல்லுக்கு, திரி என்ற வடமொழி சொல் பயன்படுகிறது. அப்படியானால் திரிஜென்ம தாரா என்பதற்கு, தமிழில் “மூன்றாம் நிலை விண்மீன்” என பொருள்.
முதல் நிலை விண்மீன், அடுத்த விண்மீன், மூன்றாம் நிலை விண்மீன் ஆகிய 3 நிலைகள் குறித்து கீழே உள்ள பட்டியலின் மூலம் எளிதாக கற்கலாம்.
முதல்நிலை விண்மீன்களை கணிப்பதற்கு, பிறந்த விண்மீனை ஒன்றாம் விண்மீனாக கருதி, ஒன்பதாம் விண்மீன் வரை எண்ணி வந்தால், அவை முதல் நிலை விண்மீன்கள் (ஜென்மம்) குழுவில் இடம் பெறுகின்றன.
10வது விண்மீனில் இருந்து, 18வது விண்மீன் வரை எண்ணி வந்தால், அவை இரண்டாம்நிலை – அடுத்த நிலை விண்மீன்கள் (அணு ஜென்மம்) குழுவில் இடம் பெறுகின்றன.
19வது விண்மீனில் இருந்து 27வது விண்மீன் வரை எண்ணி வந்தால் அவை மூன்றாம் நிலை விண்மீன்கள் (திரி ஜென்மம்) குழுவில் இடம்பெறுகின்றன.
பரணி தாரா பலன் அட்டவணை