நம் ஆன்மீகத்தில் ஒரு இன்னலை தீர்த்துக் கொள்ள மூன்று விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.அவைகள் மணி,மந்திரம் அவுஷதம் என்னும் பெரும் ரகசியங்கள்ஆகும்.
மணி என்றால் நாம் விடும் மூச்சு. இந்த மூச்சுக்காற்றின் மூலம் நமது கர்மாவினை கழித்துக்கொள்ளலாம். மற்றொன்று மந்திரம் அதாவது நாம் ஜெபிக்கும் அட்சரங்கள் அட்சரங்களின் கோர்வையே மந்திரங்கள் ஆகும். இதன் மூலம் நாம் வினைகளை தீர்க்க முடியும்.
மூன்றாவதாக ‘அவுஷகம்’அதாவது உணவு பிரசாதம் என்பதாகும். இப்படி நம் உடலில் உள் சென்று வெளியேறும் இம்மூன்றின் மூலம் மட்டுமே நமது பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்பது ஆயிரம் சதவீதம் உண்மையாகும். இவை அனைத்துமே யாகம் செய்வதிலும் கோவிலின் நிகழ்வுகளிலும் நமக்கு கிடைக்கும்.
அதோடு மட்டுமல்லாமல் ‘அவுஷகம்’ என்னும் உணவினை பிறருக்கு தானம் செய்வதன் மூலமும் நமக்கு ஏற்ற உணவினை நாம் தேர்ந்தெடுத்து உட்கொள்வதன் மூலமும் நல்ல நிகழ்வினை நமக்கு நாமே உருவாக்கி அதன்வழி பயணிக்க முடியும்.
எந்த உணவு சரியானது? எதை உட்கொள்ள வேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்? எதை தானம் செய்ய வேண்டும்? என்பதை எப்படி அறிந்து கொள்வது என்ற சந்தேகம் தோன்றலாம். நமது ஜோதிடத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உணவுவகையும் பழம் அல்லது காய்கறி வகையும் வழங்கப்பட்டுள்ளது. அவற்றை நமது தார பலனுக்கு ஏற்றவாறும் நம் ஜென்ம நட்சத்திரத்திற்கு சாதகமான நட்சத்திரத்தின் உணவினையும் தேர்வு செய்து அந்த உணவினை நாம் உட்கொள்வது மட்டுமல்லாமல் தானமும் செய்து வந்தால் மலையளவு துயரம் பனியாய் உருகிவிடும்.
ஜென்ம நட்சத்திரத்திலிருந்து 18 வது நட்சத்திரம் பணப்பகை நட்சத்திரமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. இந்த நட்சத்திரம் சுட்டிக் காட்டும் உணவினை தவிர்ப்பது நல்லது.
22 வது நட்சத்திரம் ‘வைணாசிக’ நட்சத்திரமாகும். ‘வைணாசிகம்’ என்றால் உடலை வதைப்பது என்று பொருள்படும். அதற்கான உணவையும் தவிர்த்து விடுவது சிறப்பினை தரும்.
27 வது நட்சத்திரம் வணங்கத்தக்க நட்சத்திரமாக அறியப்படுகிறது.இந்த நட்சத்திரத்திற்கான உணவினை அதிக அளவில் தானம் செய்வதன் மூலம் சிறப்பினை அடையலாம்.
பொருளாதார நிலையினை உயர்த்திக் கொள்வதற்கு ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து இரண்டாவது நட்சத்திரத்திற்கான உணவை தானம் செய்வதோடு நாமும் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் பொருளாதார சூழ்நிலையில் தன்னிறைவு பெற முடியும்
எந்த நட்சத்திரத்திற்கு எந்த உணவு மற்றும் பழம் காய்கறிகள் என்பதை பின்வருமாறு காணலாம்
1.அஸ்வினி நட்சத்திரம்
பழம் -முந்திரி
உணவு -எலுமிச்சம் பழ சாதம்
2.பரணி நட்சத்திரம்
பழம் -நெல்லிக்காய்
உணவு – நெல்லிக்காய் சாதம் ,நெல்லிக்காய் ஊறுகாய் ,நெல்லிக்காய் ஜூஸ்
3.கிருத்திகை நட்சத்திரம்
பழம் -அத்தி ,பேரிச்சை
உணவு – அனைத்து வகை வற்றல் குழம்பு
4.ரோகிணி நட்சத்திரம்
பழம் -நாவல் பழம்
உணவு – தயிர் சாதம் ,நீர்மோர்
5.மிருகசீரிடம் நட்சத்திரம்
பழம் – தேங்காய் மற்றும் இளநீர்
உணவு – எல்லாவித பருப்பு சாதம்
6.திருவாதிரை நட்சத்திரம்
பழம் – அனைத்து வகை வாழைப்பழம்
உணவு – களி மற்றும் கூழ் வகைகள்
7.புனர்பூசம் நட்சத்திரம்
பழம் – கரும்பு சாறு மற்றும் கரும்பு
உணவு – பால் சாதம்
8.பூசம் நட்சத்திரம்
பழம் – விளாம்பழம் மற்றும் ஆப்பிள்
உணவு – சாம்பார் சாதம்
9.ஆயில்யம் நட்சத்திரம்
பழம் – –
உணவு – முருங்கைக்காய் மற்றும் மோர் வற்றல் குழம்பு
10.மகம் நட்சத்திரம்
பழம் -வெண் பூசணி ,மாங்காய்
உணவு – கீரை சாதங்கள்
11.பூரம் நட்சத்திரம்
பழம் – எலுமிச்சை பழம் மற்றும் ஊறுகாய்
உணவு -பலாப்பழ சாதம்
12.உத்திரம் நட்சத்திரம்
பழம் – மாதுளை
உணவு – புளியோதரை
13.அஸ்தம் நட்சத்திரம்
பழம் – ஆரஞ்சு
உணவு – தேங்காய் சாதம்
14.சித்திரை நட்சத்திரம்
பழம் – பப்பாளி மற்றும் சாத்துக்கொடி
உணவு – சக்கரை பொங்கல்
15.சுவாதி நட்சத்திரம்
பழம் – உலர் திராட்சை மற்றும் வேர்க்கடலை
உணவு – எல்லா வகை பருப்பு பொடி சாதம்
16.விசாகம் நட்சத்திரம்
பழம் – விளாம்பழம் மற்றும் சப்போட்டா
உணவு – கருவேப்பிலை பொடி சாதம்
17.அனுஷம் நட்சத்திரம்
பழம் – நுங்கு
உணவு – வெண்பொங்கல்
18.கேட்டை நட்சத்திரம்
பழம் – வல்லாரை மற்றும் செர்ரி
உணவு – மாங்காய் சாதம்
19.மூலம் நட்சத்திரம்
பழம் – கொய்யா
உணவு – அதிரசம்
20.பூராடம் நட்சத்திரம்
பழம் – வெள்ளரிப்பழம்
உணவு – காளான் சாதம்
21.உத்திராடம் நட்சத்திரம்
பழம் – பலாப்பழம்
உணவு – கடலைமாவினால் செய்யப்பட்ட உணவு வகைகள்
22.திருவோணம் நட்சத்திரம்
பழம் – சீதாப்பழம்
உணவு – அரிசி மாவினால் செய்யப்பட்ட உணவுகள்
23.அவிட்டம் நட்சத்திரம்
பழம் – தக்காளி மற்றும் ஆப்பிள்
உணவு – அவல் சம்மந்தப்பட்ட உணவு வகைகள்
24.சதயம் நட்சத்திரம்
பழம் – எல்லா நிற திராட்சை பழங்கள்
உணவு – சேமியா மற்றும் இடியாப்பம்
25.பூரட்டாதி நட்சத்திரம்
பழம் – மாம்பழம்
உணவு – புட்டு வகைகள்
26.உத்திரட்டாதி நட்சத்திரம்
பழம் – அன்னாசி
உணவு – உளுந்து சம்மந்தப்பட்ட உணவுகள்
27.ரேவதி நட்சத்திரம்
பழம் – இலந்தை மற்றும் பேரிச்சம்
உணவு – கொத்தமல்லி சாதம்
மேற்கூறிய உணவு வகைகளை அந்தந்த நட்சத்திரங்கள் வரும் நாளில் தானம் செய்வதும் பெரும் சிறப்பினை தரும்