அடிப்படை ஜோதிடம் -69-அஸ்வினி நட்சத்திரம் முதல் பாதத்தில் கிரகங்கள் நின்ற பலன்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

அஸ்வினி நட்சத்திரம் முதல் பாதத்தில் கிரகங்கள் நின்ற பலன்கள்
அஸ்வினி முதல் பாதத்தில் சூரியன் நின்றால்:

அஸ்வினி நட்சத்திரம் முதல் பாதத்தில் சூரியன் இருக்க பிறந்தவன் பருமனான உடல் உள்ளவன்,

  • வாதத்தில் வல்லவன்,
  • தன்னம்பிக்கை உள்ளவன்,
  • தீர்க்காயுள் உள்ளவன்,
  • பணக்காரன்,
  • தன் குழந்தைகள் மூலம் நிறைய நன்மை அடைபவன்,
  • பித்த ரத்த சம்பந்தமான நோய்கள் உள்ளவன்.
அஸ்வினி முதல் பாதத்தில் சந்திரன் நின்றால்
  • தாராள புத்தி,
  • நல்ல செல்வாக்கு உள்ளவன்,
  • பிறரிடம் கருத்து பரிமாற்றத்தால் நன்மை அடைபவன்,
  • அரசு அல்லது தனியார் துறையில் உயர் பதவி வகிப்பவன்,
  • இவன் பித்த தேகி,
  • இதில் லக்னம் இருந்து குருவும் இருந்தால் 83 வயதுக்கு மேல் வாழ்பவன்
அஸ்வினி முதல் பாதத்தில் செவ்வாய் நின்றால்
  • குள்ள வடிவம்,
  • தொழிலும் சமூகத்திலும் உயர்மட்டம் வகிப்பவன்,
  • ஆரோக்கியம் உள்ளவன்
  • , இவனை தன் முன்னேற்றியாக பலரும் மதித்து நேசிப்பார்கள்,
  • கணிதம் அல்லது பொறியியலில் பெரும் பட்டம் பெறுவான்
அஸ்வினி முதல் பாதத்தில் புதன் நின்றால்
  • இவன் நாத்திகனாக இருப்பான்,
  • பெரும்பாலும் தொழிலில் சமூகத்தில் கீழ் நிலையிலேயே இருப்பவன்.
  • மது ,மாது இவற்றில் பெரும் ஆசை உண்டு.
  • களவாணித்தனம் உண்டு.
  • இந்த பாதத்தில் உள்ள புதனை குரு பார்த்தால் நல்ல பலன்கள் வாழ்க்கையில் நடக்கும்.
  • இந்த நிலையில் இவன் பெரும் கல்வி அறிவு உடையவனாவான் வேதாந்தியாகவும் இருப்பான், ரகசிய சாதனை உடையவனுமாவான்
அஸ்வினி
அஸ்வினி முதல் பாதத்தில் குரு நின்றால்
  • வெகு புத்திசாலி,
  • மெத்தப் படித்தவன்,
  • மதப்பற்று, கடவுள் நம்பிக்கை, வேதாந்தம் இவற்றில் அதிக ஈடுபாடும், சாதனையும் உண்டு.
  • நாவன்மையில் பேச்சு கவர்ச்சி உண்டு.
  • இவன் சொற்பொழிவில் மக்கள் தேனில் ஈ விழுவது போல் மயங்கி வருவர்.
  • 35 வயதுக்கு மேல் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு.
  • நண்பர் உறவினர் மூலம் அதிக நன்மை பெறுவான்.
அஸ்வினி முதல் பாதத்தில் சுக்கிரன் நின்றால்
  • பருமனான உடல் வாகு,
  • சிரித்த முகம் உள்ளவன்,
  • ஆயுள் குறைவு (எட்டாம் இடம் ஆயுள், தாயம் இவற்றை பொருத்தது)
  • தீர்க்காயுள் ஏற்பட்டால் அந்தஸ்துள்ளவன்,
  • கடல் வாணிபம், கடல் பொருட்கள் மூலம் லாபம் அடைவான்.
  • இவன் கடல் கப்பல் பொறியாளராகவும் ஆவதுண்டு.
அஸ்வினி முதல் பாதத்தில் சனி நின்றால்
  • இளமையில் வறுமை, பிற்காலத்தில் மகிழ்ச்சி ,செல்வம் உண்டு
  • மந்தபுத்தி ,
  • எதிலும் நிதானம்,
  • நீடித்த ஆயுள் உண்டு.
  • வரலாற்றுத் துறையில் ஆர்வம் உண்டு.
  • பிற்காலத்தில் எழுத்தாளராவதுண்டு
அஸ்வினி முதல் பாதத்தில் ராகு நின்றால்
  • புத்திசாலி
  • ,பலவான்,
  • தந்தையிடம் அதிக பற்று பாசம் உள்ளவன்.
  • தன் மேலிருப்பவர்கள் பிறரிடமிருந்து உரிய நேரத்தில் உதவிகள் அடைபவன்.
  • முகத்தில் நன்றாக தோன்றும் மச்சங்கள் உண்டு.
  • இந்த ராகுவை அசுப கோள்கள் பார்வை அல்லது சம்பந்தம் ஏற்பட்டால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படும் ஆனால் உயிருக்கு ஆபத்து இராது
அஸ்வினி முதல் பாதத்தில் கேது நின்றால்
  • நல்ல படிப்பு உண்டு,
  • இவன் நன்றாக செயல்பட்டு இறுதியான ஆக்கமான முன்னேற்றம் அடைவார்.
  • மக்களிடையே பிரபலம் அடைபவன்.
  • பொறியியல் துறையில் வல்லுனராக வழி உண்டு.

Leave a Comment

error: Content is protected !!