பரணி நட்சத்திரத்தில் இருக்கும் கிரகத்தை மற்ற கிரகங்கள் பார்த்தால் ஏற்படும் பலன்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

பரணி நட்சத்திரம்

பரணியில் நின்ற சூரியனை சந்திரன் பார்த்தால்:

  • பிறரிடம் பாசமும் அன்பும் உள்ளவன்
  • ஆள் அடிமை உள்ளவன்.

பரணியில் நின்ற சூரியனை செவ்வாய் பார்த்தால்:

  • கொடூர சித்தம் உள்ளவன்
  • போர் ,படை, சண்டை போன்றவற்றில் பயிற்சி உள்ளவன்(சண்டை பயிற்சியாளர் )

பரணியில் நின்ற சூரியனை புதன் பார்த்தால்:

  • நுண்கலை திரைப்படத்துறை, இசை, நாடகம் இவற்றில் திறமை உள்ளவன்.
  • நகைச்சுவை திறனும் உண்டு.

பரணியில் நின்ற சூரியனை குரு பார்த்தால்:

  • ஏழைகளுக்கு அதிக தானம் பண்ணுபவன்,
  • பணக்காரன்,
  • பெரிய அரசியல் பதவி அல்லது செல்வாக்கான அரசு உத்தியோகத்தில் இருப்பவர்,

பரணியில் நின்ற சூரியனை சுக்கிரன் பார்த்தால்:

  • கீழ்மட்ட பெண்களுடன் சுற்றுபவன்,
  • பணக்கஷ்டம் அதிகம்,
  • சந்தர்ப்பவாதிகள்,
  • இவனால் பயனடைவர் ஆனால் கஷ்டம் வரும் போது காலை வாரி விடுவார்கள்.

பரணியில் நின்ற சூரியனை சனி பார்த்தால்:

  • இவன் சோம்பேறி, தரித்திரன்

  பரணியில் நின்ற சந்திரனை சூரியன் பார்த்தால்:

  • கடின சித்தம் உள்ளவன். ஆனால் தன்னை நாடியவர்களுக்கு உதவி செய்பவன்,
  • சட்டத்தால் தண்டிக்கபடுவான் ,
  • தாராள ஊதாரி செலவாளி ,
  • தகப்பன் சேர்த்து வைத்த பணத்தில் சுகமாக வாழ்பவன்,
  • கடினமான சுபாவமுள்ளவன்,
  • கடமையை மறப்பவன்,
  • சாதாரண அறிவாளி,
  • பணக்காரன்,
  • பிறருடன் பேசி ஜெயிப்பதில் சமர்த்தன்,
  • உத்தியோகத்தில் இருப்பவர் ஆனால் தன் இஷ்டப்படி தான் நடப்பான்.

பரணியில் நின்ற சந்திரனை செவ்வாய் பார்த்தால்:

  • கடின சுபாவமுள்ளவன் ,
  • படித்தவன்,
  • வேலைத் திறன் அதிகம்,
  • உஷ்ண தேகம் உள்ளவன் ,
  • சுயநலவாதி ,
  • குறிக்கோள்களை அடைவதில் தீவிரம் உள்ளவன் ,
  • கோபம் கொள்வான் ,
  • தன்னை அதிகம் தம்பட்டம் அடித்து கொள்வான்

பரணியில் நின்ற சந்திரனை புதன் பார்த்தால்:

  • எந்த நிலையிலும் திருப்திபடுபவன்,
  • இனிமையாக பேசுவான்,
  • தன் பேச்சால் பிறரை கவருபவன் ,
  • கனவுலக சஞ்சாரி,
  • எல்லாமே உயர்வாக இருக்க வேண்டும் என்று நம்புபவன் ,
  • பிறரிடத்தில் அதிக நம்பிக்கை உண்டு.
  • அதிகம் படித்தவன்.

பரணியில் நின்ற சந்திரனை குரு பார்த்தால்:

  • சராசரி கல்வி ,
  • சுகபோக விருப்பம் உள்ளவன்,
  • தொழில் உத்தியோகத்தில் எச்சரிக்கையாக இருப்பவன்,
  • பணக்காரன்,
  • அதிகம் குழந்தைகள் உள்ளவன்.

பரணியில் நின்ற சந்திரனை சுக்கிரன் பார்த்தால்:

  • பாலுணர்வு அதன் மேல் இச்சையும் அதிகம் உள்ளவன்
  • பெண்கள் மேல் நாட்டம் அதிகம்
  • எப்போதும் பெண்களையே யோசனை கேட்பவேன்
  • தர்க்கம் செய்யாதவன்,
  • காதலில் நாட்டம் அதிகம்
  • பொறுப்பு அதிகம் கிடையாது,
  • சமூகத்தில் மேல் மட்டத்திலேயே பழகுபவன்

பரணியில் நின்ற சந்திரனை சனி பார்த்தால்:

  • உடல்நலக் குறைவு,
  • நோய் உண்டு,
  • கடின சித்தம் உள்ளவன்
  • பொய்யன்,
  • பரணிக்கு அதிபதி சுக்கிரன் ஆகையால் அந்த ராசிக்கு சனி யோககாரகன் ஆகையால் அவ்வளவு கஷ்டம் இருக்காது.
பரணி

 பரணியில் நின்ற செவ்வாயை சூரியன் பார்த்தால்:

  • கெட்டிக்காரன், நுண்ணறிவு உடையவன்
  • பெற்றோரிடம் பாசம் உள்ளவன்,
  • பணக்காரன்,
  • பணக்காரர்கள் நடுவே கவுரவமான பொறுப்பை வகிப்பவன்,

பரணியில் நின்ற செவ்வாயை சந்திரன் பார்த்தால்:

  • எப்போதும் பிற பெண்களிடம் மோகம் உள்ளவன்
  • கடின சித்தம் உள்ளவன்
  • காவல்துறையில் உத்தியோகம் உள்ளவன்,
  • இரக்கமற்றவன்.

பரணியில் நின்ற செவ்வாயை புதன் பார்த்தால்:

  • இவனும் பிற பெண்களிடம் நாட்டம் உள்ளவன்,
  • ஆடம்பரம் வீன் கவுரவம் இவற்றில் மோகம் உள்ளவன்.
  • பிறர் பணத்தில் இவனுக்கு நாட்டம் உண்டு.
  • பெரும் கொள்ளைக்காரர்களும் கடத்தல்காரர்களும் இவர்களே. ஆனால் குரு பார்த்தால் இது இராது

பரணியில் நின்ற செவ்வாயை குரு பார்த்தால்:

  • தன் குடும்பத்திலும் சமூகத்திலும் முதன்மை உள்ளவன்.
  • இந்தவகையில் பிறரைவிட பணக்காரன் .
  • சகிப்புத்தன்மையற்றவன் ,
  • முன்கோபி.

பரணியில் நின்ற செவ்வாயை சுக்கிரன் பார்த்தால்:

  • நல்ல உணவில் நாட்டம் இருக்காது,
  • பெண்களையே சுற்றி திரிபவன்
  • ஆனால் சமூகத்திலும் குடும்பத்திலும் இவனுக்கு நல்ல பதவி உண்டு .

பரணியில் நின்ற செவ்வாயை சனி பார்த்தால்:

  • குடும்பத்திலும் உறவினர்களிடையே இருந்து பிரிந்து வாழ வேண்டிய நிலை வரும்
  • இவனுக்கு தாயின் அன்பு கிடைக்காது
  • மெலிந்த தேகி
  • தன் குடும்பத்திற்கு எதிராகவே காரியங்களை செய்பவன்

பலன்கள் தொடரும்

Leave a Comment

error: Content is protected !!