ஹோரா
ஹோரா -ஆண் ராசியில் (மேஷம் ,மிதுனம் ,சிம்மம் ,துலாம் ,தனுசு ,கும்பம்)முதல் 15 டிகிரி வரை சூரிய ஹோரா என்றும் பின் பாதி 15 சந்திர ஹோரா என்றும் பிரிக்கபட்டுள்ளது.
ஹோரா -பெண் ராசியில் (ரிஷபம் ,கடகம் ,கன்னி ,விருச்சிகம் ,மகரம் ,மீனம் ) 1டிகிரி முதல் 15 டிகிரி வரை சந்திர ஹோரா.15 டிகிரி முதல் 30 டிகிரி வரை சூரிய ஹோரா என்று பிரிக்கபட்டுள்ளது
ஆண் ராசி : 1 டிகிரி முதல் 15 டிகிரி வரை சூரிய ஓரை
15 டிகிரி முதல் 30 டிகிரி வரை சந்திர ஹோரை
பெண் ராசி : 1 டிகிரி முதல் 15 டிகிரி வரை சந்திர ஓரை
15 டிகிரி முதல் 30 டிகிரி வரை சூரிய ஹோரை
ஓராச் சக்கரம் 2 விதமாக அமைக்கலாம்
ஓராச் சக்கரம் -1 இதன் படி எல்லா கிரகங்களையும் சூரிய சந்திர வீடுகளில் போடா வேண்டும்
ஓராச் சக்கரம் -2 இதன் படி முதல் 15 டிகிரி வரை இருக்கும் கிரகத்தை அதே வீட்டிலும் அடுத்த 15 டிகிரிக்கு மேல் வரும் கிரகத்தை அந்த கிரகத்தின் மற்றொரு வீட்டிலும் போடவேண்டும் .
ஹோரா | ||
ராசி | 15° | 30° |
மேஷம் | மேஷம் | விருச்சிகம் |
ரிஷபம் | ரிஷபம் | துலாம் |
மிதுனம் | மிதுனம் | கன்னி |
கடகம் | கடகம் | சிம்மம் |
சிம்மம் | சிம்மம் | கடகம் |
கன்னி | கன்னி | மிதுனம் |
துலாம் | துலாம் | ரிஷபம் |
விருச்சிகம் | விருச்சிகம் | மேஷம் |
தனுசு | தனுசு | மீனம் |
மகரம் | மகரம் | கும்பம் |
கும்பம் | கும்பம் | மகரம் |
மீனம் | மீனம் | தனுசு |
இதில் ஏதுனும் ஒரு முறையை பயன்படுத்தினால் போதுமானது ..
உதாரண ஜாதகம் :
ஹோரை -சம்பத்து
சூரிய ஹோரை -சந்திர ஹோரை
சந்திரன் -புதன்
சூரியன் -சுக்கிரன் ,செவ்வாய் ,குரு ,சனி ,ராகு ,கேது
இந்த ஹோராக்கள் என்ன பலன் தரும்
ஆண் கிரகங்கள் என்று சொல்ல படுகின்ற சூரியன் ,செவ்வாய் ,குரு ,சனி ஆகிய கிரகங்கள் சூரிய ஹோராவில் நிற்பதால் பலம் பெரும்.அதனால் நல்ல பலன்கள் தரும்
அதேபோல் பெண் கிரகங்கள் என்று சொல்லப்படுகின்ற சந்திரன் ,சுக்கிரன் ,புதன் ஆகியவை சந்திர ஹோராவில் இருந்தால் மிக்க வலுவடையும் .அப்படி வலுவடையும் போது வாழ்வில் வளத்தையும் வாடா நிலையையும் தந்துவிடும்.