அடிப்படை ஜோதிடம்- பாதகாதிபதி
பாதகாதிபதி விதி
பாதக ஸ்தானத்தில் நிற்கும் கிரகமும் பாதகாதிபதி நிற்கும் வீடும் தோஷம் ஆகிவிடும். கெடு பலன்களைச் செய்யும்.பாதகாதிபதி 4ல் இருந்தாலும் 4ம் அதிபதி பாதக ஸ்தானத்தில் இருந்தாலும் மனை தோஷம் ஏற்பட்டு விடும். வீட்டில் சுகம், நிம்மதி இருக்காது. கடன் தொல்லை, சாதுக்களின் சாபம், சாவு, போன்ற துக்க நிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்கும்.
- பாதகாதிபதி+சூரியன்-பிதுர் தோஷம் ஏற்படும்
- பாதகாதிபதி+சந்திரன்-மாத்ரு தோஷம் ஏற்படும்
- பாதகாதிபதி+குரு-குரு சாபம் ஏற்படும்
- பாதகாதிபதி+லக்கினாதிபதி-திருஷ்டி தோஷம் ஏற்படும்
- பாதகாதிபதி+2ம்அதிபதி வாக்கு தோஷம் ஏற்படும்
- பாதகாதிபதி+மாந்தி+4ம்அதிபதி-பிரேத தோஷம் ஏற்படும்
- பாதகாதிபதி+ 6ம் அதிபதி-செய்வினை தோஷம் ஏற்படும்
இப்படி பல விதமான தோஷங்களை ஏற்படுத்திவிடும்
சர லக்னம் – மேஷம், கடகம், துலாம், மகரம்
சர லக்னங்களுக்கு 11மிடம் பாதக ஸ்தானம்
மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதி-சனி
கடக லக்னத்திற்கு பாதகாதிபதி-சுக்கிரன்
துலாம் லக்னத்திற்கு பாதகாதிபதி-சூரியன்
மகர லக்னத்திற்கு பாதகாதிபதி-செவ்வாய்
மேஷம்
பாதகாதிபதியான சனி 10, 11 அதிபதியாக வருகிறார். பத்தாமிடம் ஜீவனஸ்தானம், சனி பத்தில் நிற்கும்போது ஜீவனகாரகனாகச் செயல்படுகிறார். அங்கு பாதகாதிபத்திய தோஷம் ஏற்படு வதில்லை. 11ல் இருக்கும்போது பாதகாதிபத்திய தோஷத்தை செய்ய தயங்க மாட்டார். லாப ஸ்தானமாக இருப்பதால் லாபத்தை தடை செய்ய மாட்டார். வேறு வழியில் தோஷம் செய்வார். மற்ற இடங்களில் பாதகாதிபதி சனி 6, 8 ,12-ல் மறைவது சிறப்பு.
கடகம்
பாதகாதிபதி சுக்கிரன் 4, 11-க்குடையவர் இங்கு கேந்திராதிபத்திய தோஷம், பாதகாதிபத்தியதோஷம் ஆகிய இரண்டு தோஷங்கள் உடையவர். எனவே இவர் ஜாதகத்தில் 6,8,12ல் மறைந்து, பாவ கிரகங்களுடன் சேர்ந்து கெட்டு விடுவது நல்லது. பலம் பெற்றால் தொல்லைகள் தான் அதிகம் இருக்கும். (விதிவிலக்கு துலாத்தில் ஆட்சி பெற்று இருக்கலாம்)
துலாம்
பாதகாதிபதி சூரியன் துலாம் லக்னத்தில் பொருத்தவரையில் சூரியன் எங்கிருந்தாலும் பாதக தன்மையை பலமுடன் செய்வார். சூரியன் பலம் இழப்பது நல்லது.
மகரம்
பாதகாதிபதி செவ்வாய் 4, 11-க்குடையவர் எனவே சுக, லாபாதிபதி எனவே நன்மை தீமை இரண்டையும் கலந்து செய்வார். சில கிரக சேர்க்கை பொருத்து பலனில் மாற்றங்கள் இருக்கும்.
ஸ்திர லக்னம் – ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்
ரிஷப லக்னத்திற்கு பாதகாதிபதி-சனி-9,10
சிம்ம லக்னத்திற்கு பாதகாதிபதி-செவ்வாய்-4,9
விருச்சக லக்கினத்திற்கு பாதகாதிபதி-சந்திரன்-9
கும்ப லக்னத்திற்கு பாதகாதிபதிய-சுக்கிரன்-4,9
இந்த ஸ்திர லக்னங்களுக்கு எல்லாம் பாக்கியாதிபதியே , பாதகாதிபதியாக வருவதால் அதிக தோஷம் செய்யாது, பாக்கியாத்துவம் வந்தால் மற்ற கேந்திராதிபத்தியமோ, விரையாதிபத்தியமோ, அட்டமாதிபத்திய தோஷம் அடிபட்டுப் போகும். எனவே இவர்களுக்கு பாதகாதிபத்திய தோஷம் வேலை செய்யாது. எனவே பாதகாதிபதி தோஷம் பற்றி பேச வேண்டியதில்லை.
உபய லக்னம் – மிதுனம், கன்னி, தனுசு, மீனம்
மிதுனம்,கன்னி லக்னத்திற்கு பாதகாதிபதி-குரு
தனுசு,மீனம் லக்னத்திற்கு பாதகாதிபதி- புதன்
மிதுனம்-கன்னி
இந்த லக்னங்களுக்கு பாதகாதிபதியாக வரும் குரு கேந்திராதிபத்திய தோஷம், பதகாதிபத்ய தோஷம், மாரகாதிபத்திய தோஷம் ஆகிய மூன்று தோஷங்களை உடையவர். எனவே குரு ஜாதகத்தில் கெட்டால்தான் அந்த ஜாதகர் உயர்வடைய முடியும். மாறாக பலம் பெற்றால் ஜாதகர் வாழ்வில் போராட்டம்தான்.
தனுசு ,மீனம்
இந்த லக்னங்களுக்கு பாதகாதிபதி புதன் இவர் கேந்திராதிபத்திய தோஷம், பாதகாதிபத்திய தோஷம், மாரகாதிபத்திய தோஷம்ஆகிய மூன்று பலமான தோஷங்களையும் பெற்றவர். இவர் தனித்த நிலையில் நின்று பலம் பெறக்கூடாது. கிரக சேர்க்கையின் மூலம் பலன் மாறும்.