காலபுருஷன் மற்றும் இராசிகளின் உடல் உறுப்புகள்
இராசி மண்டலம் எனப்படும் இராசிச் சக்கரமானது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கால புருஷனுடைய அங்கங்களாக கீழ்கண்ட 12 ராசிகளையும் குறிப்பிடுகின்றனர்.
- கால புருஷனின் சிரசு என்னும் தலை மேஷ ராசியாகும்.
- காலபுருஷனின் முகம் ரிஷப ராசியாகும்.
- காலபுருஷனின் மார்பு மிதுன ராசியாகும்.
- காலபுருஷனின்இதயம் கடக ராசியாகும்.
- காலபுருஷனின் வயிறு சிம்ம ராசியாகும்.
- காலபுருஷனின் தொப்புள் கன்னி ராசியாகும்.
- காலபுருஷனின் அடிவயிறு துலாம் ராசியாகும்.
- காலபுருஷனின் பிறப்புறுப்பு விருச்சிக ராசியாகும்.
- காலபுருஷனின் இரு தொடைகள் தனுசு ராசியாகும்.
- கால புருஷனின் இரு முழங்கால்கள் மகர ராசியாகும்.
- கால புருஷனின் இருகணுக்கால்கள் கும்ப ராசியாகும்.
- கால புருஷனின் இரு பாதங்கள் மீன ராசியாகும்.
மேற்படி கால புருஷனின் உடல் அவயங்களாக பிரிக்கப்பட்டுள்ள ராசிகள் ராசி மண்டலம் எனப்படும்.இந்த ராசி மண்டலத்தின் மொத்த அளவானது 360 பாகை அல்லது டிகிரிகள் ஆகும்.
இந்த ராசி மண்டல அமைப்பு வட்டவடிவமானதாகும். இந்த ராசி மண்டலத்தின் மொத்த அளவானது 360 பாகைகளால்யானது. 12 ராசிகளுக்கும் சம அளவாக பிரிக்கப்பட்டு ராசிகள் ஒவ்வொன்றும் 30 பாகை அளவாக கொண்டுள்ளது. இப்படி 360 பாகை அளவுள்ள ராசி மண்டலமானது 27 நட்சத்திரங்களுக்கு பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஒரு ராசியில் 2 1/4 என்று வரும் அதாவது நட்சத்திர 9 பாகம் ஆகும்.
இதன் விவரம் என்னவெனில் ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்கள் கொண்டதாகும்27×4=108பாதங்களாக அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களுக்கும் உள்ளது. 27 நட்சத்திரங்களும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளில் அமையும் விதம் ராசிகளின் சொரூபம் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்