அடிப்படை ஜோதிடம்-70-அஸ்வினி இரண்டாம் பாதத்தில் கிரகங்கள் நின்ற பலன்கள்
திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator
🤝Join our Whatsapp Channel💚
265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report
உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள
FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR
அஸ்வினி இரண்டாம் பாதத்தில் கிரகங்கள் நின்ற பலன்கள்
அஸ்வினி 2-ம் பாதத்தில் சூரியன் நின்றால்
- அஸ்வினி 2ம் பாதத்தில் சூரியன் இருப்பது அவ்வளவு நல்லதல்ல,
- ஆயுள் கூட குறைவாக இருக்கலாம்( எட்டாமிடம் ,சனி இ வற்றையும் பொருத்தது)
- 8 வயது வரை பாலாரிஷ்டம் உண்டு.
- வறுமை மேலிடலாம்,
- சந்திரனுடன் இணைந்தால் அதிக கெட்ட பலனாகும்.
- சூரியனையும் அல்லது சந்திரனையும் செவ்வாய் பார்த்தால் மட்டுமே சுப பலன் உண்டு.
அஸ்வினி 2-ம் பாதத்தில் சந்திரன் நின்றால்
- அதிக காரம் முதலியவை கொண்ட உணவை விரும்புபவன்,
- மது பிரியன்
- பெண்களால் சிக்கல்கள் ஏற்படலாம்
- வறுமை மிகும்
- சுயநலவாதி
- அதிக பேராசை உண்டு
- செவ்வாய், ராகு இந்த சந்திரனை ஏழாம் பார்வையாக பார்த்தால், இந்த இரண்டாம் பாதம் பெண்ணுக்கு வைதவ்யம் ஏற்படலாம்
- இந்த இரண்டாம் பாதம் சந்திரனை சுக்கிரன் பார்த்தால் பாக்கியம் உண்டு
- இவனுக்கு நல்ல ஆண் குழந்தையும் ,நல்ல மண வாழ்க்கையும் உண்டு
- இதே 2ஆம் பாதம் சந்திரனை சனி பார்த்தால் இவன் பொறுமைகாரனாகவும் , சோக வாழ்க்கை உள்ளவனும் ஆவான்.
அஸ்வினி 2-ம் பாதத்தில் செவ்வாய் நின்றால்
- இப்பாதத்தில் செவ்வாய் நின்று அதை சூரியன் பார்த்தால் பெரும் கல்விமான் ஆவான்
- பெற்றோர்களை மிகவும் விரும்புவான்
- சில சமயம் இவன் வறுமை அடைவான்
- குழந்தை அற்றவனாகவும் இருக்கலாம்
- பழிவாங்கும் குணம் உள்ளவன்
- நெருப்பு விபத்துக்கள் ஏற்படலாம், மற்றவகை விபத்துக்கள், காய்ச்சல் முதலியவை ஏற்படும்
- தலையில் வடு உள்ளவன்
அஸ்வினி 2-ம் பாதத்தில் புதன் நின்றால்
- குழந்தைகளால் பாக்கியம் சுகமுண்டு
- பல கலைகளிலும் வல்லவனாவான்
- பாதி வயதுக்குமேல் துறவியாகலாம்
- இந்த புதனை சூரியன் பார்த்தால் புகழ்பெற்ற மருத்துவர் ஆவான்.
- சிந்தனையும் உயர்பண்பு உள்ளவனாகவும் இருப்பான்
அஸ்வினி 2-ம் பாதத்தில் குரு நின்றால்
- கவர்ச்சியான தோற்றம், குணம் கொண்டவன்
- புத்திசாலி
- நேர்மையானவன்
- எழுத்தாளர்,
- ஆசிரியருமாவான்
- பிறர் இவனிடம் அன்பு மதிப்பு மரியாதை கொள்வார்கள், ஆனால் எப்பொழுதும் கடனாளியாக இருப்பான்
அஸ்வினி 2-ம் பாதத்தில் சுக்கிரன் நின்றால்
- நல்ல வலுவான உடல் கட்டும், பருமனான உடல் அழகும் பழக இனிமையானவனும் ஆவான்
- குடும்பத்தில் அதிக பாசம் உண்டு
- அதிஷ்டதாலேயே அதிக செல்வம் படைப்பான் ,
- நாவலாசிரியர், கலைஞன் இவனே
- பொறியியல் துறையில் சில சமயம் வல்லவனாவான்
அஸ்வினி 2-ம் பாதத்தில் சனி நின்றால்
- கரிய நிறம் முடி உள்ளவன்
- மெலிந்த உடல் உள்ளவன்
- காட்டு பொருட்களால் பிழைப்பு ,வியாபாரம், செய்பவன். அதில் கெட்டிக்காரனும் ஆவான் .
- ஆனால் சில சமயம் பொது அறிவு குறைவாக இருக்கும்
- இதனால் பணம் முடைகளில் சிக்கிக் கொள்வான்
- முற்போக்குவாதி
- முன்கோபி
- சிலசமயம் சமூக விரோத செயல்களில் ஈடுபாடு உண்டு
அஸ்வினி 2-ம் பாதத்தில் ராகு நின்றால்
- மத சம்பந்தமானவற்றில் பற்றுள்ளவன்
- அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்கள் உண்டு
- வறுமையும் கையேந்தும் குணமும் உண்டு
- அடிக்கடி எண்ணங்கள் திட்டங்களை மாற்றுபவன்
- சில சமயம் மூளை பாதிப்பு நோய் உண்டு
அஸ்வினி 2-ம் பாதத்தில் கேது நின்றால்
- சமூகத்தில் பெரும்பாலும் கீழ்மட்டத்தில் இருப்பவன்
- பொதுமக்களுடன் நல்லுணர்வு உண்டு
- பெண்களிடம் அதிக மோகம் பற்று உண்டு.
கால சக்கர தசை | வருடம் |
மகர சனி | 4 வருடம் |
கும்ப சனி தசை | 4 வருடம் |
மீன குரு தசை | 10 வருடம் |
விருச்சிக செவ்வாய் தசை | 7வருடம் |
துலாம் சுக்கிர தசை | 16 வருடம் |
கன்னி புதன் தசை | 9 வருடம் |
சிம்ம சூரிய தசை | 5 வருடம் |
கடக சந்திரன் தசை | 21 வருடம் |
மிதுன புதன் தசை | 9 வருடம் |
பரம ஆயுள் | 85 வயதாகும் |