Homeஜோதிட குறிப்புகள்லக்னத்தில் புதன் இருந்தால் என்ன பலன்?

லக்னத்தில் புதன் இருந்தால் என்ன பலன்?

லக்கினத்தில் புதன்

தன் புத்தியின் திறமையால் செல்வம் சேர்ப்பான் , கணித மேதை , கணக்கு வழக்கு சம்பந்தமான (பாங்க் , வட்டிக்கடை ) வேலைகள் அமையும் .நடத்தையில் நல்ல பண்பு உண்டு .ஜோதிடக் கலையிலும் ஓரளவு ஞானம் உண்டு.

  • பூர்வீக சொத்துக்கள் நிலைத்து நிற்கும்.
  • அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வர மாட்டார்
  • தமாஷாக பேசுவதில் வல்லவர் .
  • கல்வியறிவு அமையப் பெறாமல் இருந்தாலும் , மேற்பார்வைக்கு கம்பீரமும் – வசீகரிக்கும் தன்மையும் இவரிடம் இருக்கு கும்.
  • எதிரிகளை மிகச் சாமர்த்தியமாக மடக்குவார் . கலைகளில் வல்லவர் . முன்கோபம் உள்ளவர்.
  • சிற்றுண்டி , தாம்பூலம் இவற்றில் பிரியம் உறவினர்களிடம் பாசம் , மற்றவர்களின் சொத்துக்கு ஆசைப்படல் , விபசாரிகள் மோகம் , எதிர்ப்பவரை தண்டிக்கும் குணம் , தன் பிள்ளைகளின் மேல் பாசம் , புகழில் ஆசை,பாபரால் பார்க்கப்பட்டால் நோய் உண்டு.
லக்னத்தில் புதன்
  • குரு , வளர்பிறை சந்திரன் , சுக்கிரன் இவர்களுடன் சேர்க்கை பெற்றால் பட்டதாரி.

மேஷம் , மிதுனம் , கடகம் , கன்னி , விருச்சிகம் , தனுசு , மீனம் , லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி பலம் பெற்று இருந்தால் மேலே சொன்ன பலன்கள் மாறாது.இல்லையேல் , நல்ல பலன்கள் கிடையாது.

விரோதம் , அகால போஜனம் , வீண் வழக்கு , அரசு தண்ட னை , தீய நண்பர்கள் சேர்க்கை அடுத்த பெண்களை அனுபவிக்கும் வாய்ப்பு கிட்டும்.

புதன் நின்ற நட்சத்திரததின் எதிரிடை நட்சத்திரத்தில் லக்னம், சந்திரன், தசா புத்தி அந்தர நாதன் இருப்பின் சொல்லப் பட்ட சுப பலன்கள் மாறி எதிரிடையான பலன்கள் நடக்கும். தீய பலன்கள் செயல்படாது.

புதன் நின்ற நட்சத்திரத்தின் சாதக நட்சத்திரத்தில் லக்னம் , சந்திரன் , தசா புக்தி அந்தா நாதன் இருப்பின் சுபப் பலன்கள் பலப்பட்டு சிறப்பு தரும் தீய பலன்கள் பலப்படும்.

சொல்லப்பட்ட பலன்கள் புதன் தசா புத்தி அந்தர காலங்களில் நடைமுறைக்கு வரும் .

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!