புதன்
அறிவாள் உலகத்தை ஆட்டுவிப்பவர் புதன் என்பதால் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் உள்ளவர் எனும் அர்த்தத்தில் இவரை நிபுணன் என்று ஜோதிட சாஸ்திரம் புகழ்கின்றது.
ஒருவருக்கு புதனின் அருள் பரிபூரணமாக கிடைப்பது எப்போது? புதன் எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கும்போது என்ன பலன் தருவார்? விரிவாக தெரிந்து கொள்வோமா!
புதன்+சூரியன்
சூரியனுடன் புதன் இணைந்து அமையப் பெற்றிருக்கும் ஜாதகர்கள் தெய்வீக அருளைப் பெற்று இருப்பார்கள், புராணங்கள், இதிகாசங்கள், சாஸ்திரங்கள்,சரித்திரங்கள் முதலியவற்றை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பர். எல்லோரிடமும் அன்புடன் பழகுவர். நல்ல விஷயங்களை போதிப்பதிலும் வாதம் செய்வதில் வல்லவர்களாக திகழ்வர்.உடலில் உஷ்ணதின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.தனவனாகவும் , புகழ் பெற்றவராக திகழ்வார்.
புதன்+சந்திரன்
வேதம், சாஸ்திரம், விஞ்ஞானம், ஜோதிடம் முதலியவற்றில் ஆர்வம் கொண்டவர்கள். தேர்ந்த ஆசானை போல் நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கு போதிப்பார்கள். நீதிக்கும் நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். எதிரிகளை சுலபமாக வெற்றி கொள்ளும் இவருக்கு அவ்வப்போது கர்வம் தலை தூக்கும்.மற்றவர்களால் புகழையும் கீர்த்தியையும் பெறுவார்கள்.
புதன் +செவ்வாய்
விவசாய நிலங்கள், மாடு கன்று பால் பாக்கியங்களுடனும் , வீடு- மனை களுடனும், செல்வந்தராக இருப்பார்கள். கல்வியில் நாட்டம் இருக்காது. ஆசார அனுஷ்டானங்களை பின்பற்றுவதில் கண்டிப்புடன் இருப்பர்.அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும், மனதுக்குள் தகாத எண்ணங்கள் ஏற்பட்டாலும் அவற்றை வெளியில் தெரியாமல் மறைப்பதில் சமர்த்தர்.இவர்களுக்கு மனோதைரியம் அவ்வளவாக இருக்காது. சகோதரர்களால் ஏமாற்றப்படக்கூடும்.இவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.
புதன் +குரு
அழகாகவும், கம்பீரமாகவும் தோன்றும் இவர்களுக்கு பயணங்களில் சுற்றுலா செல்வதில் ஆர்வம் இருக்கும். வாக்கு சாதுரியம் பெற்றிருப்பர். ஞானிகள் மகான்களின் ஆசி கிடைக்கும். கணிதத்தில் நிபுணத்துவம் பெற்று இருப்பர்.மன அழுத்தகாரராக இருப்பர்.எப்போதும் உண்மையை கடைபிடிக்கும் இவர்களுக்கு பிறர் பொருளில் ஆசை இருக்காது. முன்கோபம் அதிகம் உண்டு.
புதன் +சுக்கிரன்
ஆசார அனுஷ்டானங்களில் பிடிப்புள்ளவர்.தெய்வீக வழிபாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வார். பிறர் மனம் புண்படாதபடி நடந்து கொள்வார்கள். தாராளமாக உதவும் மனப்பான்மை கொண்டிருப்பார்கள்.எடுத்த பணியை திறம்பட செய்து முடிப்பதில் வல்லவர். சத்தியத்திலிருந்து தவறாதவர்.
புதன் +சனி
எல்லோரையும் நண்பர்களாக்கிக் கொள்வார்கள்.பொருள் சேமிப்பதிலும் பாதுகாப்பதிலும் வல்லவர். அவசரப்பட்டு கோபப்படுவார்கள். பண விஷயங்களில் கண்டிப்புடன் இருப்பார்கள். பிறரை குறை கூறுவதில் ஆர்வம் காட்டுவார்கள்.துன்பபடுபவர்களிடம் இவர்கள் இரக்கம் காட்டுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. தனது கருத்தை ஆணித்தரமாக முன்வைப்பார்கள்.
புதன் +ராகு
கல்வியில் ஆர்வம் அறிவுக்கூர்மையும் அதிகம் கொண்டவர். நிலையான எண்ணம் இருக்காது. சஞ்சலம் மிகுந்தவர். இவர்களின் மனதில் உள்ளதை எளிதில் அறிய முடியாது. இவர்கள் உடலில் பித்தம் மிகுந்திருக்கும். பிறரை நன்றாக புரிந்து கொள்வதில் வல்லவர்கள்.உடல் ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படும். ஆசார அனுஷ்டானங்களில், தெய்வ நம்பிக்கைகளில் பற்றுதல் இருக்காது. இவர்கள் உடல் நலனில் குறிப்பாக பற்களின் நலனில் அக்கறை காட்டவேண்டும்.
புதன்+கேது
அறிவு கூர்மையுடன் திகழும் இவர்கள் பிறருக்கு ஆசிரியர்களாக போதிப்பார்கள். ஆன்மீக ஞானம் பெற்று இருப்பார்கள். கவலையை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் வலம் வருவார்கள். எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவார்கள். எடுத்த காரியத்தை உடனே முடித்துவிடும் சுபாவம் கொண்டவர்கள். நண்பர்கள் உறவினர்களிடம் புகழுடனும் பெருமையுடனும் திகழ்வார்கள். சகலவிதமான போகங்களை அனுபவிப்பார்கள்.
புதன் அருள் பெற பூமிதேவதையை வழிபடலாம் :
புதனை வழிபட்டால் ,அகங்காரம் அழியும் ,அமைதி கிடைக்கும் ,விவேகத்தை தரவல்லவர் புதன் பகவான் பகவான் .அவரை வழிபட விவேகம் வளரும் ,அடக்கமும் சகிப்பு தன்மையும் இருந்தால் வளமான வாழ்க்கை நிச்சயம் .
பும் புதாய நம என்று சொல்லி புதன் பகவானது திரு விக்கிரகத்துக்கு 16 உபசாரங்களை செய்யுங்கள் .அல்லது அதன் அதிதேவதையான ஸ்ரீ மந்நாராயணனை நமோ நாராயணா என்று சொல்லி வழிபடுவதுடன் ,புதன் பகவானையும் தியானித்து வணங்குங்கள் இன்னலை அகற்றி இன்பத்தை வழங்குவார் .
பஞ்சபூதங்களில் ,பூமியின் பங்கு புதனில் உண்டு ,நம் உடலிலும் பூமியின் பங்கு உண்டு ஆகவே பூமித்தாயின் வழிபாடு ,புதன் பகவானின் வழிபாடாக மாறிவிடும் சமுத்ரவஸனே!
தேவி பர்வதஸ்தன மண்டிதே !
விஷ்ணு பத்னி நமஸ்துப்யம் பாதஸ்பர்சம்
-எனும் சுலோகத்தை மனதார சொல்லாம்