கடக ராசி
1.தன்னம்பிக்கை அதிகம் உள்ள நீங்கள், அதை தலைகனமா மாத்திக்காம இருந்தா உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிடைக்கும்.
2.மற்றவங்க செய்யும் தவறுக்கு நீங்க வீண் டென்ஷன் ஆகறதையும் , அதை சுட்டிக் காட்டும் சமயத்துல உணர்ச்சிவசப்படறதையும் அறவே தவிர்த்துடுங்கள்.
3.மதிகாரகனான சந்திரனின் ஆதிக்கத்துல உள்ள ராசியில் பிறந்த நீங்கள், மனக்குழப்பம் , வேண்டாத சிந்தனைகளைத் தவிர்த்து , உணவையும் தூக்கத்தையும் முறைப்படுத்தினாலே உங்க வெற்றிக்கான பாதையில் வெளிச்சம் பரவத் தொடங்கிடும்.
4.சின்ன வயசுல இருந்தே எதையும் ஒருமுறைக்கு இருமுறை சொல்லி , எழுதிப் பழகறது , ஒரு விஷயத்தை இன்னொரு விஷயத்தோட ஒப்பிட்டு நினைவுல வைச்சுக்கறது இதெல்லாம் உங்க மறதியை மறக்கடிக்க உதவும்.
5.உங்க பெயர்ல சொந்த வீடு வாங்கற சமயத்துல அல்லது கட்டும் போது அது அந்த வீட்டோட தலைவாசல் , தெற்குப் பார்த்தபடி இருக்கறது நல்லது.
6.கல்வி , வேலை , திருமணம் இப்படி எந்த மாதிரியான முக்கியமான விஷயத்துக்காகப் புறப்படும்போது , சுதந்தரமாகத் திரியும் பறவைகள் அல்லது வாயில்லா ஜீவன்களுக்கு ஏதாவது தீனி வாங்கிப் போட்டுட்டுச் செல்வது , உங்க முயற்சிகள் வெற்றிபெற வழிவகுக்கும்க.
7.கடக ராசியினரான உங்களுக்கு வெளிர் நீல நிறம் அதிர்ஷ்டமானது.முக்கியமான சமயங்கள்ல இந்த வெளிர் நீல நிறத்துல உடை அணிவது சிறப்புங்க. அது இயலாவிட்டால் அந்த நிறத்துல ஒரு கைக்குட்டையை வைச்சுக்கிட்டாலும் போதும்.
8.எப்போதும் சிவனையும் பார்வதியையும் கும்பிடறது நல்லது.திங்கட் கிழமைகள்ல அசைவம் தவிருங்க. முடிஞ்சா அன்று ஒருவேளை விரதம் இருங்க. பசுபதி அருள் உங்க வாழ்வைப் பசுமையாக்கும்.











