மேஷ லக்னம்
மேஷ லக்னத்தின் சூரியன் மற்றும் சந்திரன்,செவ்வாய்,புதன்,குரு,தசா ஆகியவற்றின் பலன்களை தொகுத்து கொடுத்தத்துள்ளேன் இது பொது பலன்கள் மட்டுமே..
சூரிய திசை நடந்தால் உண்டாகும் பலன்கள்
மேஷ லக்னத்திற்குஅதிபதி செவ்வாய் பகவானாவார் செவ்வாய் பகவானுக்கு சூரியன் நட்பு என்ற முறையிலும் மேஷத்தில் சூரியன் உச்சம் அடைகிறார்.சூரியன் உச்சம் பெற்று தசை நடத்தினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்:
அரசு தொடர்பான துறைகளில் ஈடுபடக் கூடியவர்கள்.எதிலும் தைரியத்துடன் செயல்படக்கூடியவர்கள்.பூர்வீக சொத்துக்களால் லாபம் அடையக் கூடியவர்கள்.தந்தைவழி உறவுகளால் ஆதாயம் கிட்டும்.புத்திரர்கள் மூலம் ஆதாயம் கிட்டும்.மக்கள் தொடர்பான துறைகளில் கீர்த்தி உண்டாகும்.
சுயதொழில் எண்ணிய லாபம் உண்டாகும்.வெளி வட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும்.ஆன்மீகப் பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.சாமர்த்தியமாக செயல்பட்டு எண்ணிய எண்ணத்தை செயல்படுத்த கூடியவர்கள்.
பலன் தரும் பரிகாரம்
அவரவர் ஜாதகத்தில் சூரியன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
மேலும் ஜென்ம ஜாதகத்தில் பாபர்கள் மற்றும் சுபர்களின் பார்வை இருக்கும் பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.
சந்திர திசை நடந்தால் உண்டாகும் பலன்கள்
மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய்.செவ்வாய் பகவான் சந்திரன் நட்பு ,சமம் என்ற நிலையில் இருந்து தசை நடத்தினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு.
உடல் ஆரோக்கியம் மேம்படும்.வீடு மனை யோகங்கள் உண்டாகும்.மனதில் புதிய சிந்தனைகள் தோன்றி மறையும்.மனதுக்குப் பிடித்த வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்.தொழில் திறமையால் லாபகரமான சூழல் உண்டாகும்.மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
ஆன்மிக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் .நீர்ப்பாசனம் தொடர்பான செயல்பாடுகள் லாபம் அதிகரிக்கும்.வெளியூர் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.தாய் வழியிலிருந்து வந்த சொத்து தொடர்பான பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்.
பலன் தரும் பரிகாரம்
அவரவர் ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கள்கிழமை தோறும் சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதி தேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
மேலும் ஜென்ம ஜாதகத்தில் பாபர்கள் மற்றும் சுபர்களின் பார்வை இருக்கும் பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.
செவ்வாய் திசை நடந்தால் உண்டாகும் பலன்கள்:
மேஷ லக்ன அதிபதி செவ்வாய் பகவானாவார்.செவ்வாய் ஆட்சி பெற்று திசை நடத்தினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்.
உடல் தோற்றம் பொலிவு மேம்படும்.செய்யும் செயல்களில் கீர்த்தி உண்டாகும்.ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும்.பணியில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும்.வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும்.மனதில் புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள்.
வெளியூர் பயணங்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும்.சுய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்.குடும்ப பொருளாதாரம் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.
பலன் தரும் பரிகாரம்
அவரவர் ஜாதகத்தில் செவ்வாய் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் ஓரையில் முருகப்பெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
மேலும் ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் பாபர்களின் பார்வை இருக்கும் பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.
புதன் திசை நடந்தால் உண்டாகும் பலன்கள்:
மேஷ லக்னம் அதிபதி செவ்வாய் பகவானாவார். புதன் பகவான் செவ்வாய் பகவானுடன் சமம் என்ற நிலையிலிருந்து திசை நடத்தினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு.
திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.இளைய சகோதரர்களால் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அனுகூலமான சூழல் உண்டாகும்.மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.காது தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டு மறையும்.பூமி விருத்திக்கான பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்
விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனம் தேவை.உத்தியோகத்தில் பதவி உயர்வு சாதகமாகும்.எதிர்பாராத சில விரயச் செலவுகள் ஏற்பட்டு நீங்கும்.நெருக்கமானவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
பலன் தரும் பரிகாரம்
அவரவர் ஜாதகத்தில் புதன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் புதன்கிழமை தோறும் புதன் ஓரையில் பெருமாளை துளசி மாலை கொண்டு வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
மேலும் ஜென்ம ஜாதகத்தில் சுவர்கள் மற்றும் அவர்களின் பார்வை இருக்கும் பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்ட நடைபெறும்.
குரு திசை நடந்தால் உண்டாகும் பலன்கள்
மேஷ லக்னம் அதிபதி செவ்வாய் பகவானாவார். செவ்வாய் பகவானுடன் குருபகவான் நட்பு என்ற நிலையிலிருந்து திசை நடத்தினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு.
வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும்.வாழ்க்கை பற்றிய அனுபவ அறிவு மேம்படும்.உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்.
உயர் கல்வி சார்ந்த எண்ணங்கள் மற்றும் முயற்சிகள் ஈடேறும்.உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.குடும்பத்தில் பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.புதிய ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளால் அலைச்சல் அதிகரிக்கும்.நண்பர்களுடன் கேளிக்கை ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.
பலன் தரும் பரிகாரம்
அவரவர் ஜாதகத்தில் குரு பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் வியாழக்கிழமை தோறும் குரு ஓரையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
மேலும் ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் பாபர்களின் பார்வை இருக்கும் பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்ட நடைபெறும்.
சுக்கிர தசா நடந்தால் உண்டாகும் பலன்கள்
மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய் பகவானாவார்.செவ்வாய் பகவானுடன் ,சுக்கிர பகவான் சமம் என்ற நிலையிலிருந்து திசை நடத்தினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு:
குடும்ப பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த சுபசெயல்கள் ஈடேறும்.நண்பர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்பு ஏற்படும்.உடலில் இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும்.புதிய கூட்டாளிகளின் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும்.
மனைவிவழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.பிள்ளைகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமான சூழல் உருவாகும்.ஆடை, ஆபரணம் வாங்குவதில் விருப்பம் உண்டாகும்.உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்த்த பதவி உயர்வு உண்டாகும்.
பலன் தரும் பரிகாரம்
அவரவர் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில், வெள்ளிக்கிழமைதோறும் ,சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
மேலும் ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.
சனி திசை நடந்தால் உண்டாகும் பலன்கள்
மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய் பகவானாவார். செவ்வாய் பகவானுடன் சனி பகவான் பகை என்றாலும் நீசம் என்ற நிலையில் இருந்து தசை நடத்தினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு.
அனுபவ அறிவு மேம்படும்.தொழில் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும்.ஆன்மீக எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள் உண்டாகும்.மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும்.அரசு தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும்.
சுபச் செயல்கள் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும்.கலைஞர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் கால தாமதமாக கிடைக்கும்.உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும்.சமூக சேவை புரிபவர்களுக்கு ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும்.முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.
பலன் தரும் பரிகாரம்
அவரவர் ஜாதகத்தில் சனி பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் சனிக்கிழமைதோறும் சனி ஓரையில் நல்லெண்ணெய் தீபமேற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
மேலும் ஜென்ம ஜாதகத்தில் அசுபர்கள் மற்றும் சுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்ட நடைபெறும்.
ராகு திசை நடந்தால் உண்டாகும் பலன்கள்
மேஷ லக்னத்தில் அதிபதி செவ்வாய் பகவானாவார் .செவ்வாய் பகவானுக்கு ராகு பகவான் பகை என்ற நிலையில் இருந்து தசை நடத்தினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு.
மனதுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.வழக்கு தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை.செய்யும் செயல்களில் கவனம் வேண்டும்.நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.நிர்வாகம் தொடர்பான முடிவுகளில் கவனம் வேண்டும்.நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.
எளிதில் முடியும் என்று எதிர்பார்த்த சில செயல்கள் காலதாமதமாகும்.நெருக்கமானவர்களிடம் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும்.
பலன் தரும் பரிகாரம்
அவரவர் ஜாதகத்தில் ராகு பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் வெள்ளிக்கிழமை தோறும் ராகு ஓரையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
மேலும் ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்கள் பார்வை இருக்கும் பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன் மாறுபட்டு நடைபெறும்.
கேது திசை நடந்தால் உண்டாகும் பலன்கள்
மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய் பகவானாவார் செவ்வாய் பகவானுடன் கேது பகவான் பகை என்ற நிலையில் இருந்து தசை நடத்தினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு.
செயல்படும் தன்மைகளில் மாற்றம் உண்டாகும் .அஞ்ஞான சிந்தனைகள் தோன்றி மறையும்.மனதில் எழும் ஆசைகள் குறையும்.பல்துறை பற்றி அறிந்து கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
மனதில் பலவிதமான சிந்தனைகளின் மூலம் குழப்பமான சூழல் உண்டாகும்.குடும்ப நபர்களிடம் அனுசரித்து செல்லவும்.புதுவிதமான செயல்பாடுகளில் விருப்பம் உண்டாகும்.பணிகளில் சாதகமற்ற சூழல் உண்டாகும்.தொழில் நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும்.
பலன் தரும் பரிகாரம்
கேது திசை நடப்பவர்கள் அரசமரத்தடியில் இருக்கும் விநாயகப்பெருமானை அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.