தூமன்
தூமன் – செவ்வாயுடைய புத்திரர் – புகை சமுகத்தையொத்து வால் நட்சத்திரம் ஆகும்.தூமன் உங்கள் ஜாதத்தில் எப்படி பட்ட பலன்களை தருவார் என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.
தூமன் லக்னத்தில் இருந்தால் ஜாதகர் வீரராகவும், அழகான கண்களை உடையவராகவும், மனிதநேயம் இல்லாதவராகவும், பக்தி இல்லாதவராகவும், கெட்ட நடத்தை உடையவராகவும், முன் கோபக்காரராகவும் இருப்பார்.
தூமன் 2-வது இடத்திலிருந்தால் ஜாதகர் நோயாளியாகவும், செல்வந்தராகவும், கை, கால் இல்லாதவராகவும், தன்னம்பிக்கை இல்லாதவராகவும், ஆண்மை அற்றவராகவும், சோம்பேறியாகவும் இருப்பார்.
தூமன் 3-வது இடத்தில் இருந்தால் ஜாதகர் புத்தி கூர்மையும், நுண்ணறிவும், தைரியம் உள்ளவராகவும், சந்தோஷம் உள்ளவராகவும், பேச்சாற்றல் பெற்றவராகவும், நிறைந்த செல்வங்களை பெற்று இருப்பார்.
தூமன் 4-வது இடத்தில் இருப்பின் ஜாதகர் எல்லா சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பார். ஆனால் அவருடைய மனைவியால் அல்லது பெண்களால் துக்கம், துன்பங்கள் அடைபவராக இருப்பார்.
தூமன் 5-வது இடத்திலிருந்தால் ஜாதகர் குறைவான சந்ததியை உடையவராகவும், செல்வம் இல்லாதவராகவும், பெரிய மனிதராகவும், எதையும் சாப்பிடக் கூடியவராகவும், மந்திரங்களாலும், நண்பர்களாலும் கைவிடப்பட்டவராகவும் இருப்பார்.
தூமன் 6-வது இடத்திலிருந்தால் ஜாதகர் வலிமையுள்ளவராகவும், எதிரிகளை வெல்லக் கூடியவராகவும், திறமையும் ஞானமும் பெற்றவராகவும், நோய்கள் இல்லாதவராகவும், புகழ்பெற்றவராகவும் இருப்பார்.
தூமன் 7- வது இடத்திலிருந்தால் ஜாதகர் வருமானம் இன்றி இருப்பவராகவும், ஏழையாயும், புலனடக்கம் இல்லாதவராகவும் இருப்பார். புத்தி கூர்மையும், நுண்ணறிவும் எப்போதும் இல்லாதவராகவும், பெண்கள் இருக்கும் இடங்களில் திறமையாக சுற்றி வருபவராக இருப்பார்.
தூமன் 8- வது இடத்தில் இருந்தால் ஜாதகர் ஆர்வமில்லாதவராகவும், தைரியம் இல்லாதவராகவும்,உண்மையாக நடந்து கொள்பவரும், எதற்கும் ஒத்து வராதவராகவும், கடினமான இதயம் பெற்றவராகவும், சுயநலம் பேணுபவராகவும் இருப்பார்.
தூமன் 9-வது இடத்திலிருந்தால் ஜாதகருக்கு மகன்களும், அதிர்ஷ்டங்களுடனும், செல்வத்துடனும், மரியாதைக்குரிய நபராகவும், மனிதநேயம், மதத்தின் மீது பற்று உள்ளவராகவும் இருப்பார். உறவுக்காரர்களிடம் நல்ல நிலையில் இருப்பார்கள்.
தூமன் 10-வது இடத்தில் இருந்தால் ஜாதகர் மக்களையும், அதிர்ஷ்டத்தையும் கிடைக்க பெற்றிருப்பார். அறிவு கூர்மை, உண்மையாய் இருத்தல், சந்தோஷமாய் இருத்தல் போன்ற குணங்கள் இருக்கும்.
தூமன் 11-வது இடத்திலிருந்தால் ஜாதகர் சம்பத்துக்கள், தானியங்கள், தங்கம் போன்ற ஆபரணங்களையும், ஓவியம் வரைதல், பாடல் பாடுதல் போன்ற திறமை பெற்றவராக இருப்பார்.
தூமன் 12ம் இடத்திலிருந்து ஜாதகர் ஒழுக்கம் கெட்டவராகவும், பாவ செயல் புரிபவராகவும், அடுத்தவர்களின் மனைவியை விரும்புவதும்,வஞ்சம், பழிவாங்கும் குணமும் பெற்றவராகவும் இருப்பார்.
உங்கள் ஜாதகத்தில் தூமன் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள