திருத்தெற்றியம்பலம்
நின்ற திருக்கோலத்தைக் கண்டு திருப்தி அடையாதவர்கள் பள்ளி கொண்ட பெருமாளாகப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதையும் மிகப் பிரசித்திப் பெற்ற திருநாங்கூரிலேயே காண முடியும். பக்தர்கள் கேட்காமலேயே அவர்களது உள்ளத்தை முக்காலமும் உணர்ந்த பெருமாள். ‘சொன்னபடி கேட்கும் குழந்தை போல’ பக்தர்களுக்கு பள்ளி கொண்ட சயனத்தில் காட்சி தரும் இடம்தான் திருத்தெற்றியம்பலம் இதுவும் திருநாங்கூரிலேயே இருக்கிறது.
மூலவர் செங்கண்மால் பெருமாள். ஆதிசேஷன் மீது தெற்குப் பக்கத்தில் தலை வைத்துக் கொண்டு பள்ளி கொண்டிருக்கிறார். தலை பக்கத்தில் திருமகள். கால் பக்கத்தில் பூமாதேவி. தாயார்: செங்கமலவல்லி. தீர்த்தம் சூர்ய புஷ்கரணி. விமானம் தேவ விமானம். உற்சவர் லெஷ்மி நாராயணன். திருமங்கை ஆழ்வார் பாடல் பெற்ற ஸ்தலம். இத்தல இறைவன் தை அமாவாசைக்கும் மறுநாள் திருநாங்கூர் கருடசேவைக்கும் புறப்பட்டுச் செல்வது வழக்கம்.
சூர்யனுக்கு திடீரென்ற பிரகாசமும் வலிமையும் ஒரு சாபத்தால் குறைய ஆரம்பித்தது. தனது பிரகாசம் குறையாமல் இருக்கவும் பெற்ற சாபத்தை உடனடியாக போக்கவும் வழி தெரியாமல் சூரியன் திண்டாடிக் கொண்டிருந்த பொழுது பூலோகத்தில் திருத்தெற்றியம்பல ஸ்தலத்திலுள்ள. புஷ்கரணியில் நீராடி பெருமாளைத் தொழுதால் சூரியன் பழையபடி பிரகாசம் பெறுவதோடு சாபமும் நீங்கப் பெறுவான் என்று சொல்லக் கேட்டு சூரியன் இத்தலத்திற்கு வந்து சாபம் விமோசனம் பெற்றான். சூரியன் நீராடிய புஷ்கரணிக்கு சூரிய புஷ்கரணி என்று பெயர். சூரியனைப் போலவே இங்கு வந்து தன் பாபம் நீங்கி பெருமாள் தரிசனம் கண்டவர் அநந்தாழ்வார் என்னும் பரமபக்தர்.
பரிகாரம் :
செல்வாக்கு குறைந்து கொண்டிருப்பவர்களும் அரசாங்கத்தில் மிக உயர்ந்த பதவியைப் பெற வேண்டும் என்று நினைப்பவர்களும், புகழ் கீர்த்தி, பெருமையைத் தலைமுறை தலைமுறையாகக் காப்பாற்ற வேண்டும் என்று ஆசைப்படுபவர்களும். குழந்தைகள் இல்லாமல் இருப்பவர்கள். குழந்தைகள் இருந்தும் அவர்களால் மனக்கஷ்டம் அடைபவர்கள், வயோதிக காலத்தில் நோயினால் வேறு பல சௌகரியங்களை இழக்கக் கூடாது என்று எண்ணுபவர்கள். தோல்விகளைக் கண்டு துவண்டு போனவர்கள் ஆகியோர் இந்த ஸ்தலத்திற்கு வந்து ஒருநாள் முழுவதும் தங்கியிருந்து இங்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை முறைப்படிச் செய்தால் செங்கண்மால் பெருமானால் அனுக்கிரகம் பெற்று – வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை தொடர்ந்து பெறுவார்கள். பழைய பாவங்கள், விட்ட குறை தொட்ட குறை தோஷங்கள் கூட விலகிவிடும்.
கோவில் இருப்பிடம் :