Home108 திவ்ய தேசம்திவ்யதேசம்18:திருக்கண்ணங்குடி (குழந்தை வரம் அருளும் அற்புதம் தலம்)

திவ்யதேசம்18:திருக்கண்ணங்குடி (குழந்தை வரம் அருளும் அற்புதம் தலம்)

திவ்யதேசம்18:திருக்கண்ணங்குடி

கண்ண பெருமானின் விளையாட்டுக்கள் தான் எத்தனை எத்தனை ? அவற்றில் ஒன்று நடந்த இடம்தான் திருக்கண்ணங்குடி.இது திருவாருருக்கு 14கிலோ மீட்டர் தொலைவில் சிக்கலுக்கும் கீவளுருக்குமிடையில் ஆழியூர் என்னும் சிறிய ஊரிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.

ஆறு , காடு , நகரம் , ஆலயம் , தீர்த்தம் என்று இந்த ஐந்தும் கொண்டு மிகவும் அற்புதமாக அமைந்த ஸ்தலம் என்பதால் பஞ்ச புத்ரா ஸ்தலம் அல்லது பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரம் என்று பெரிதும் போற்றப்படுகிறது.

ஐந்து நிலை கொண்ட இராஜகோபுரம் , இரண்டு பிராகாரங்களுடன் பக்த உலா மண்டபம்,சோபன மண்டபம் , மகா மண்டபம் அர்த்த மண்டபமும் கொண்டு

  • மூலவர் ஸ்ரீ லோகநாதப் பெருமாள் , சியாமளமேனிப் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
  • தாயார் லோகநாயகி , உத்ஸவர் அரவிந்தவல்லி.
  • தீர்த்தம் ராவண புஷ்கரணி கோயிலுக்குள் எட்டு தீர்த்தக் கிணறுகள் உண்டு.
  • உத்ஸவர் தாமோதரப் பெருமாள்.இடது கரத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு தரிசனம் தருகிறார்.
  • விமானம் உற்பலாவதகம்
  • தல விருட்சம் மகிழமரம், காயா மகிழ் : உறங்காப்புளி ; தோலா வழக்கு ஊறாக்கிணறு திருக்கண்ணங்குடி என்று பல்வேறு அதிசயங்களைக் கொண்டு இத்தலம் விளங்குகிறது.

வசிஷ்டர் , வெண்ணையக் கொண்டு கிருஷ்ணரை உருவமாகப் பிடித்து அது இளாகாதவண்ணம் வைத்து பகவானை வணங்கிக் கொண்டிருந்தார். பகவான் கிருஷ்ணன் , வசிஷ்டரை சோதிக்க ஒருநாள் தானே குழந்தையாக வந்து வசிஷ்டர் பூஜித்த வெண்ணெய்க் கிருஷ்ணனே உண்டு விட்டார் . இதைக் கண்டு பதறி , குழந்தையானக் கிருஷ்ணரைத் துரத்த அந்த குழந்தை இந்தக் கோயிலிலுள்ள மகிழமரத்தடியில் பதுங்கியது.அங்கு தவம் செய்த மகரிஷிகள் கிருஷ்ணனை யாரென்று அறியாமல் கட்டிப் போட்டதால் இதற்கு திருக்கண்ணங்குடி என்ற பெயர் வந்தது.

திவ்யதேசம்18:திருக்கண்ணங்குடி

ஒருசமயம் திருமங்கையாழ்வார் திருவரங்கம் கோயிலுக்கு திருப்பணி செய்யும் பொருட்டு நாகப்பட்டினத்திலிருந்து தங்கமயமான ஒரு புத்த விக்ரஹத்தை எடுத்து வந்தார் . நள்ளிரவில் ஓய்வெடுக்க விரும்பிய பொழுது இத்தலத்திலுள்ள புளிய மரத்தின் அடியில் புதைத்து விட்டு நான் அயர்ந்து உறங்கினாலும் நீ உறங்கி விடாமல் இந்த விக்ரகத்தை பார்த்துக் கொள் ‘ என்று புளிய மரத்தைப் பார்த்துச் சொன்னார். புளியமரமும், திருமங்கையாழ்வார் சொன்னபடி கேட்டு உறங்காமல் அந்த விக்ரகத்தைக் காத்தது. அதனால் இன்றுவரை இங்குள்ள புளிய மரத்திற்கு ‘ உறங்காப் புளிய மரம் என்று பெயர் உண்டு.

இன்னொரு அதிசயம் இங்குள்ள கிணறுகளில் தண்ணீரே தென்படுவதில்லை இந்த ஊரில் என்ன வழக்கு நடந்தாலும் அது இன்றுவரை முடிவில்லாமலே சென்று கொண்டிருக்கிறது.

இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் ‘ திருநீர் ‘ அணிந்து கொண்டு பெருமாள் காட்சியளிப்பது ஆச்சரியமான செய்தியாகும். கருடன் இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு தரிசனம் தருகிறார். இத்தலத்தில் தாயார் சன்னதியிலுள்ள மூலவரும் , உற்சவரும் ஒரே ஜாடையில் இருப்பது , வேறு எந்த கோயிலிலும் காண முடியாத அதிசயம்.திருமங்கையாழ்வார் . மங்களாசாஸனம் செய்திருக்கிறார்.

திவ்ய தேசம்

பரிகாரம்

பரம்பரை பரம்பரையாக வந்த சொத்துக்கள் கைவிட்டுப் போகாமல் இருப்பதற்கும் தம் குலமக்கள் வழிதவறி நடக்காமல் குடும்பப் பெருமையை நிலைநாட்டுவதற்கும் தெரியாத்தனமாக தவறுகள் செய்து வம்பில் மாட்டிக் கொண்டவர்களுக்கும் , கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் தத்தளிப்போர்க்கும் கடன் சுமையால் வாடுபவர்களுக்கும் இந்த ஸ்தலம் நன்மையைச் செய்யும்.இங்குள்ள பெருமாளை சேவித்து , அபிஷேகம் ஆராதனை செய்து வந்தால் போதும். பட்ட கஷ்டங்கள் அனைத்தும் பஞ்சாகப் பறந்துவிடும்.

கோவில் இருக்கும் இடம்

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!