Homeஜோதிட குறிப்புகள்ஜாதகத்தில் சூரியன் 12 வீடுகளில் இருப்பதன் பலன்கள்

ஜாதகத்தில் சூரியன் 12 வீடுகளில் இருப்பதன் பலன்கள்

12 வீடுகளில் சூரியன் நின்ற  பலன்கள்

லக்னத்தில் சூரியன் : லக்கினம், உயிர், உடல்

லக்னம் மேஷமாகி அங்கே சூரியன் இருந்தால்  அதுவும் உச்சம் பெற்ற சூரியனால்,நல்ல செல்வாக்குடன் இருப்பான் ,ஆனால் பொறுப்பற்ற நடத்தைகளும் உண்டு.

லக்னம் மீனமாகி அங்கே சூரியன் இருந்தால் பெண்களால் மிகவும் நேசிக்க படுவான் .

லக்கினம் சிம்மமாகி அங்கே சூரியன் இருந்தால் கம்பீரமான தோற்றம் இருக்கும். இரண்டாம் இடத்தில் சுக்கிரன் நீசம் பெற்றால்  இரவு குருடனாகவும் ,கண்களில் கோளாறு உடையவனாகவும் இருப்பான் ,பல் வரிசை ஒழுங்காக இருக்காது .

லக்னம் கடகமாகி அங்கே சூரியன் இருந்தால்  கண்களிலே புள்ளி விழ கூடும். வார்த்தைகளில் திக்கள் ஏற்படும் .கொடுத்த வாக்குறுதியை காப்பார்த்த மாட்டார், வார்த்தைகளில் விரசம் கலந்து காணப்படும்.சொட்டை விழலாம், ஒற்றை தலைவலி, அடர் புருவம், மலச்சிக்கல்,உடல் வலி வரலாம்.தற்பெருமை உடயவர்கள்,தங்கள் என்னத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்கள்,முன் கோபம் உடயவர்கள்.

சூரியன்

2ல் சூரியன் : குடும்பம் &வாக்கு.

  • அனாவசிய செலவு,
  • மிரட்டலுடன் கூடிய வருவாய்,
  • உள்ளதை உள்ள படி பேசி வம்பை விலை கொடுத்து வாங்குறது ,
  • குடும்பத்தையும் ரிங் மாஸ்டர் கணக்காக  நடத்துவது ,
  • கண்ணருகே அடிபடும்

3ல் சூரியன் : உடன் பிறப்பு, தைரியம்

  • எதிலும் தைரியத்துடன் செயல்பட கூடியவர்கள்.
  • தாயின் உடல்நலத்தில் பாதிப்புகள் தோன்றி மறையும்.
  • பயணங்கள் அடிக்கடி மேற்கொள்ள வேண்டிய சூழல் அமையும்.
  • காது வலி மந்தம்.

4ல் சூரியன் : தாய் ,வீடு, வாகனம்

  • தொழில் வாய்ப்புகள் கூடும்.
  • தற்பெருமை கொண்டவர்கள்.
  • சுய சம்பாத்தியம் மூலம் முன்னேற்றம் அடைய கூடியவர்கள்.
  • தாய் வழி உறவு ஒருவருக்கு ஊர் தலைமை.
  • அதிகம் வேலை இருக்கும்.
  • கல்வி,காடு சார்ந்த பகுதிகளில் வீடு அமையும்.

5ல் சூரியன் : பிள்ளைகள், பூர்வ புண்ணியம்.

  • முன் கோபம் ,கண்டிப்பு, மிரட்டல்,
  • ஏக புத்திரன்.
  • பெயர் புகழுக்காக மெனக்கெடுவது.
  • அவமானங்கள், அபத்திர தானம்,சிறிய குடும்பமாக இருக்கும்.
  • வாழ்க்கை வளமாக இருக்கும்.
  • தன்னுடைய முயற்சியால் உயர்வு அடைய கூடியவர்கள்.

6ல் சூரியன் : எதிரி, நோய் ,கடன்.

  • சத்ரு ஜெயம்,
  • ரோக நிவர்த்தி ,
  • ருண விமுக்தி,
  • தாய் மாமனுக்கு நல்லதில்லை,
சூரியன்

7ல் சூரியன் ; மனைவி,நண்பர்கள்

  • உடல் ஆரோக்கியம் கொண்டவர்கள்,
  • எதிர்ப்புகளை வெல்ல கூடியவர்கள்.
  • பாராட்டுகளை பெற கூடியவர்கள்.
  • அலைபாயும் மன நிலையை கொண்டவர்கள்.
  • ஆரோக்கியம் பாதிக்க கூடும்.
  • பயணங்களில் ஆர்வம் கொண்டவர்கள்

8ல் சூரியன் : ஆயுள்

  • ஆயுள் பலம் கொண்டவர்கள்.
  • எதிலும் கால தாமதமான முடிவை எடுக்க கூடியவர்கள்.
  • மண்டை உடைவது, அபராதம், காவல் ,சிறை, உள்ளூர் தலைவர்களுடன் குடுமிப்பிடி.

9ல் சூரியன் : தந்தை, வெளிநாடு

  • பகலில் பிறந்தால் தந்தைக்கு நல்லது.
  • பெரியவர்களின் ஆதரவு உண்டு,
  • லாங் டூர் அடிக்கிற தொழில்.

10ல் சூரியன் ; தொழில்.

  • அதிக முயற்சிகள் இன்றி வெற்றிகள் கிட்டும்.
  • நீண்டு நாட்கள் வாழ்வான்.
  • செல்வந்தனாக மாறுவான்.
  • மனைவி, குழந்தைகள், வேலையாட்கள் என்று செளகரியமாக வாழ்வான்.
  • கொள்கைக் குன்றாக இருப்பான்.
  • அரசில் செல்வாக்கு இருக்கும்.
  • அரச மரியாதைகள், விருதுகள் கிடைக்கும்

11ல் சூரியன் : (லாபம்)

  • அதிக முயற்சிகள் இன்றி வெற்றிகள் கிட்டும்.
  • நீண்டு நாட்கள் வாழ்வான்செல்வந்தனாக மாறுவான்.
  • மனைவி, குழந்தைகள், வேலையாட்கள் என்று செளகரியமாக வாழ்வான்.
  • கொள்கைக் குன்றாக இருப்பான்.
  • அரசில் செல்வாக்கு இருக்கும்.
  • அரச மரியாதைகள், விருதுகள் கிடைக்கும்

12ல் சூரியன் :  விரயம்

  • தந்தையிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும்.
  • தனது விருப்பம்போல் செலவு செய்ய கூடியவர்கள்.
  • புதிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!