குரு பகவான்
குரு பகவான் எந்த பாவத்தில் இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?
கிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக வலிமையான கிரகம் குருவாகும் அது ஏறக்குறைய ஓராண்டு காலம் ஒரு ராசியில் இருக்கும் அது மிகுந்த நன்மைகளை செய்யும்.
குரு பகவான் ஒருவர் ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவத்தில் அமர்ந்து இருந்தால் அந்த ஜாதகம் தோஷமற்ற ஜாதகம் இவ்வாறு கிரக சிந்தாமணி என்னும் நூல் கூறுகிறது.இதற்கு காரணம் ஒரு ஜாதகத்தின் முக்கிய இடங்களான 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களை லக்கினத்திலிருந்து பார்ப்பதாகும்.
இந்த குரு பகவான் தீமை எதுவுமே செய்யாத? செய்யும் நீச பலம் பெற்றால் அஷ்டமஸ்தானம் எனும் எட்டாம் வீட்டில் இருந்தால், விரைய ஸ்தானம் எனும் பனிரெண்டாம் வீட்டில் இருந்தால் தீமைகளை செய்யும்.
லக்கினம் -முதல் வீடு -Guru in First House
ஒருவர் தம் ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவத்தில் குரு பகவான் இருக்கப்பெற்றவர்,எல்லா நம்பிக்கையும் பெற்றிருப்பார்,பிறருக்கு உபதேசம் செய்யும் தகுதி இருக்கும்,சாந்தம் உள்ளவராய் இருப்பார்,இனிப்பு பொருள்களை மிகவும் விரும்புவர்,நன்றியுள்ளவர், பெருந்தன்மையாக இவர் பிறருக்கு உதவிகள் செய்வதில் விருப்பம் உள்ளவர் ஆவார்,இவருக்கு பிறர் விரும்பும் உடல் அமைப்பும், அழகும் அமைந்திருக்கும்,இவர் வாழ்வில் அமைதியும் புகழும் பெறுவார்,இவரிடம் அறிவாற்றலும், ஆழமான சிந்தனையும் அமைந்திருக்கும்,கணிதம், விஞ்ஞானம், ஜோதிடம், மருத்துவம் ஆகியவற்றை அறிந்திருப்பார்,இவர் தம் மனதிற்குள் எதையும் மறைத்து வைக்க அறியாதவர் ,உத்தமர்.
2-ம் வீட்டில் குரு-Guru in Second House
குரு பகவான் இரண்டாவது பாவத்தில் அமையப்பெற்றவருக்கு,பொன் பொருள் ஆடை ஆபரணங்கள் ஆகியன சேரும்,வீடு ,வாகனம், நிலம் ,ஆடு ,மாடு, கோழி ஆகியவற்றை கொண்டு வசதியாக வாழ்வார்,தெய்வீக ஆசார அனுஷ்டானத்தில் பக்தி உள்ளவர்,பிறர் மனம் புண்படாமல் பேசுவார்.
3-ம் வீட்டில் குரு-Guru in Third House
குரு பகவான் மூன்றாம் பாவத்தில் இருக்கப் பெற்றவருக்கு,அவர் குழந்தைகளே அவருக்கு விரோதிகளாக மாறுவர்,தன்னலம் மிகுந்தவர்,முதலில் தமக்கு வேண்டியவற்றை கவனம் செலுத்துவார் பிறகுதான் மற்றவரைப் பற்றிய அக்கறை கொள்வார்.பொதுவாக மூன்றாம் இடத்தில் குரு அமைவது கிரக தோஷமே!இதற்கு கிரக தோஷ பரிகார பூஜை செய்வது நலம் தரும்.
4-ல் குரு-Guru in Fourth House
குரு பகவான் நான்காம் பாவத்தில் இருக்கப்பெற்றவர்-ஆனந்தமாக வாழ்வார். இவருக்கு மனைவியின் அன்பும், வசதிகள், மிகுந்த அளவில் ஏற்படும்.தர்ம காரியங்களுக்கு தாராளமாக செலவு செய்வார்,அரசாங்கத்தின் மூலம் மிகுதியான வருமானம் வரும்.
5-ம் வீட்டில் குரு-Guru in Fifth House
ஐந்தாம் பாவத்தில் குரு பகவான் அமையப் பெற்றவருக்கும்-ஓரிரு குழந்தைகளே பிறக்கும்,தாய் மாமன் இருக்கமாட்டார். ஜாதகப்படி அரசு அலுவலகத்தில் வேலை செய்வார்.குழந்தைகளால் யோகத்தை அனுபவிப்பார்.புத்தி கூர்மை உள்ளவர்.பந்தயம், லாட்டரி, கமிஷன், வியாபாரம் ஆகியவற்றில் லாபம் அடைவார்கள்.5ம் மிடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் புத்திர ஸ்தானம் என்றும் கூறப்படும் இந்த ஸ்தானத்தில் கிரகங்கள் இருக்கக் கூடாது சுபகிரகங்களின் பார்வை இருக்கலாம்.ஏதேனும் ஒரு கிரகம் இருந்தால் கிரக பரிகார பூஜை செய்து கொள்வது நல்லது.
6-ம் வீட்டில் குரு-Guru in Sixth House
ஆறாம் பாவத்தில் குரு பகவான் அமையப் பெற்றவருக்கும்-உப்புச நோய்கள், ரத்தம் கெடுதல், சர்க்கரை நோய் முதலியன ஏற்பட வாய்ப்பு உண்டு.நல்ல வேலைக்காரர்கள் அமைவார்கள்,உடலின் உள்ளே கோளாறு இருந்தாலும் வெளியே தெரியாது.கம்பீரமாய் இருப்பார் பகைவரை வென்று பலம் பெறுவார்
7-ம் வீட்டில் குரு-Guru in Seventh House
ஏழாம் பாவத்தில் குரு பகவான் அமையப்பெற்றவர்-ஆனந்தமாய் வாழ்வார் இளம்வயதில் திருமணம் நடக்கும்.இவர்கள் கல்வி ஞானம், புத்திக்கூர்மை, உத்தியோகம், வியாபாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவர்.வீடு, நிலம், வாகனம், ஆடு ,மாடு ஆகியவற்றோடு சுகபோக வாழ்க்கை அனுபவிப்பர்.
8-ம் வீட்டில் குரு-Guru in Eight House
குரு பகவான் எட்டாம் பாவத்தில் அமையப்பெற்றவருக்கு-நீண்ட ஆயுள் உண்டு ஆனால் நிம்மதியான வாழ்க்கை அடைவது அறிவு.ஆஸ்துமா போன்ற நோய் ஏற்படக்கூடும்.உடல் பருத்து விடாமல் கவனித்துக் கொள்ளவேண்டும்.வயிற்று கோளாறுகள் ஏற்படலாம்.
9-ம் வீட்டில் குரு-Guru in Nineth House
ஒன்பதாம் பாவத்தில் குரு பகவான் அமையப்பெற்றவருக்கு-தகப்பனார் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்.பல குழந்தைகளைப் பெறும் பேருண்டு செல்வம் பொழியும் சிறப்பான வாழ்க்கை அமையும்.ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரத்தில் ஏராளமாக பணம் ஈட்டுவார்.நெடுந்தூர பயணங்கள் கடல் கடந்த பயணங்கள் ஆகியவற்றினால் லாபம் ஏற்படும்.
10-ம் வீட்டில் குரு-Guru in Tenth House
பத்தாம் பாவத்தில் குரு பகவான் அமையப்பெற்றவருக்கு-ஏதாவது ஒரு துறையில் தலைமை ஏற்கும் வாய்ப்பு ஏற்படும்.சிறந்த சிவபக்தராக விளங்குவார்.இவர் சிறந்த கல்வி ஞானம் மிகுந்தவர்.வாழ்க்கையில் செல்வமும் பெற்று சிறப்பாக வழிநடத்துவார்.
11-ம் வீட்டில் குரு-Guru in Eleventh House
பதினோராம் பாவத்தில் குரு பகவான் அமையப்பெற்றவருக்கு-வசதி மிகுந்த வாழ்க்கை அமையும்.பணியாளர்கள் பணி செய்வார் சிறிய தந்தை, மூத்த சகோதரர் ஆகியோரால் செல்வ உதிக்கட்டும்.நல்ல நண்பர்கள் துணையுடன் புகழ் பெறுவார்.இசை, நடனம் ஆகியவற்றில் ஆர்வம் ஏற்படும்
12-ம் வீட்டில் குரு-Guru in Twelfth House
பனிரெண்டாம் பாவத்தில் குரு பகவான் அமையப்பெற்றவருக்கு-போக இச்சை மிகுதியாக இருக்கும். இவர் தம் மனைவிக்கு அடங்கி நடப்பார்.எப்போதும் எங்காவது சுற்றி கொண்டே இருப்பார்.வாழ்க்கையில் நிம்மதி இராது ஏராளமாக செலவு செய்வார் அதனால் கடன் தொல்லைகள் ஏற்படும்.உணவு உடை இன்பம் ஆகியவற்றை தக்க நேரத்தில் அனுபவிக்க இயலாது.