Homeகுரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 மகரம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 மகரம்

குரு பெயர்ச்சி பலன்கள் (Guru Peyarchi Palangal) – மகரம்

சித்திரை மாதம் 9ம் தேதி (22.04.2023) சனிக்கிழமை, உதயாதி நாழிகை 43:30 அதாவது இரவு 11: 27 மணிக்கு ரேவதி நட்சத்திரம் 4ம் பாதம் மீன ராசியில் இருந்து அஸ்வினி நட்சத்திரம் 1ம் பாதம் மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைகிறார்.

குரு பெயர்ச்சி பலன்கள்
குரு பெயர்ச்சி கிரக நிலைகள் -2023

சனி பகவானின் அருள் பெற்ற மகர ராசி அன்பர்களே!!! வரும் குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்கப் போகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

குருபகவான் உங்கள் ராசிக்கு 3 மற்றும் 12-ம் இடத்துக்கு அதிபதி ஆவார். இப்போதைய பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-வது இடத்திற்கு செல்கிறார். அவருடைய சிறப்பு பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே ஆயுள் (8-மிடம் ) தொழில் (10-மிடம்) விரயம் (12மிடம்) ஸ்தானங்களில் பதியும்.

இதுவரையில் மூன்றாம் இடத்திலிருந்து வந்த குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்துக்கு செல்வதால் பெரிய பாதிப்புகள் வராது. மன உளைச்சல் அதிகமாக காணப்படும். 4-ல் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் அலைச்சல், டென்ஷன், சுகவாழ்வு பாதிப்பு, குடும்பத்தில் சிறு சிறு பிரிவுகள், சின்ன சின்ன சண்டைகள், உறவு முறைக்குள் பிரச்சனை, தாயாரின் உடல்நலம் பாதிப்பு, மருத்துவ இதர செலவுகள், நட்பு முறையிலும், உறவு முறைகளிலும் அவமானப்படும் நிலை, தொழில் பணவரவில் தடை, கொடுக்கல் வாங்கலில் பிரச்சனைகள் உண்டாகும்.

எலக்ட்ரானிக் பொருள்களான டிவி, மொபைல், லேப்டாப், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருள்களால் வீண் செலவுகள் உண்டாகும். மனக்கவலைகள் மற்றும் கஷ்டங்கள் உண்டாகும். இங்கு குறிப்பிட்ட இடங்களில் எந்த இடங்களில் பாதிப்பு தருகிறதோ அந்த இடத்தின் தன்மைக்கேற்ப கவனத்தோடு செயல்படுங்கள் நன்மைகள் நடக்கும்.

மகர ராசிக்காரர்களின் பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். இவர்கள் எவ்வளவு எளிதாக யாருக்கும் வாக்குறுதி கொடுக்க மாட்டார்கள். வாக்கு கொடுத்தது விட்டால் அதை எப்படியாவது முடித்துக் கொடுத்து விடுவார்கள்.

குருவின் பார்வை பலன்கள்

குரு பெயர்ச்சி பலன்கள்

குருபகவான் தனது ஐந்தாம் பார்வையாக எட்டாம் இடத்தை பார்ப்பதால் விபத்துகள் ஆபத்துகள் நிகழாது. உடல் ஆரோக்கியம் மேம்படும்.வீண் விரயங்கள் தடுக்கப்படும். மருத்துவ செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பெரிய பாதிப்புகள் இருக்காது.

குருபகவான் தனது ஏழாம் பார்வையால் 10-ஆம் இடத்தை பார்ப்பதால் தொழில் விருத்தி உண்டாகும். புதிய தொழில்கள் மூலமாக வருமானம் தேடி வரும். பட்டம், பதவிகள் தேடி வரும். உயர் பதவியோகம் அமையும்.

குரு பகவான் தனது ஒன்பதாம் பார்வையால் பன்னிரெண்டாம் இடத்தை பார்ப்பதால் 12-ம் பாவத்தின் அசுமைத்தன்மைகள், தாக்கங்கள் குறையும். வீண் விரைய செலவுகள் தவிர்க்கப்படும். சுப விரயமாக மனைவி. பிள்ளைகள் பெயரில் அசையும் அசையா சொத்துக்கள் அமைக்கலாம். சிலருக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு கிடைக்கும். பணத்தட்டுப்பாடுகள் நீங்கும்.

குரு பெயர்ச்சி பலன்கள்

பலன் தரும் பரிகாரம்

அருகில் இருக்கும் விநாயகர் ஆலயங்களுக்கு சென்று வணங்குங்கள். ஒருமுறை பிள்ளையார்பட்டி சென்று கற்பக கணபதியை மனம் ஒன்றி வணங்கி விட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நிம்மதி நிறையும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!