குரு பெயர்ச்சி பலன்கள் (Guru Peyarchi Palangal) :ரிஷபம்
சித்திரை மாதம் 9ம் தேதி (22.04.2023) சனிக்கிழமை, உதயாதி நாழிகை 43:30 அதாவது இரவு 11: 27 மணிக்கு ரேவதி நட்சத்திரம் 4ம் பாதம் மீன ராசியில் இருந்து அஸ்வினி நட்சத்திரம் 1ம் பாதம் மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைகிறார்.
சுக்கிர பகவான் அருள் பெற்ற ரிஷப ராசி அன்பர்களே! வரும் குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்க போகிறது என்பதை பற்றி இப்பதிவில் காண்போம்.
உங்கள் ராசிக்கு 8, 11-ம் இடங்களுக்கு உரியவரான குரு தற்போது உங்கள் ராசிக்கு 12-ஆம் இடமான விரய ஸ்தானத்திற்கு வருகிறார். அவருடைய விசேஷப் பார்வைகள் உங்கள் ராசிக்கு 4-ம் இடமான சுக மற்றும் தாய் ஸ்தானம், 6-ம் இடமான சத்ரு ரோக ஸ்தானம், 8-ம் இடமான ஆயுள் ஸ்தானம் ஆகிய இடங்களில் பதியும்.
இந்த அமைப்பின்படி உங்களுக்கு முயற்சிகளால் முன்னேற வேண்டிய காலகட்டமாக வரும் காலகட்டம் அமையும். அலுவலகத்தில் உங்கள் எண்ணம் போல் ஏற்றங்கள் வந்து சேரும். அதே சமயம் பொறுப்புகளும் அதிகரிக்கும். சுமை அதிகம்னு உங்கள் நிழல் கிட்ட கூட முனகாமல் இருக்கிறது அவசியம்.
எதிர்பார்த்த உயர்வுகள் தாமதமாக ஆனாலும் நிச்சயம் கிடைக்கும். பொறுமையாக இருங்கள். பிறர் தவறை பெரிதுபடுத்தி பேசுவதற்கு முன்னால் உங்கள் குறைகளை சரி செய்ய பழகிக் கொள்ளுங்கள். உயர்வுகள் உறுதியாகும்.
விட்டுக் கொடுத்துப் போனால் வீட்டில் விசேஷங்கள் படிப்படியாக வரத் தொடங்கும். பெற்றவர்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். அக்கம் பக்கத்து நட்புகளுடன் எல்லை வகுத்து பழகுங்கள். பூர்வீக சொத்துகளில் அலட்சியம் வேண்டாம். மூன்றாம் நபர் யாரையும் குடும்ப பிரச்சனைகளில் தலையீடு செய்ய அனுமதிக்க வேண்டாம். சுப காரியங்களில் வீண் ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். கடன்களை முறையாக திருப்பி செலுத்துங்கள்.
செய்யும் தொழிலில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். முழுமையான முயற்சியும் நேரடி கவனமும் இருந்தால் முன்னேற்றம் உறுதியாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்யும் முன் பலமுறை யோசித்து செய்வது நல்லது. உங்கள் தனிப்பட்ட பெயரில் புதிய தொழில் எதையும் தொடங்குவதை விட உண்மையான அன்பு உள்ளங்கள் பெயரோடு இணைத்து தொடங்குவது நல்லது.
அரசு, அரசியல் துறையினர் எதையும் நிதானமாக செய்வதும், ஒவ்வொரு வார்த்தையும் யோசித்துப் பேசுவதும் அவசியம். முகஸ்துதி நட்புகள் முதுகு பக்கமாக குழி தோண்டலாம் அத்தகைய நபர்களை உடனே விலக்குவது அவசியம்.
கலை, படைப்பு துறையினருக்கு முயற்சிகளுக்கு ஏற்பவே வாய்ப்புகள் வரும். அனுபவத்தை பாடமா வைத்துக்கொண்டு வாய்ப்புகளை பொறுத்து உணர்ந்து பயன்படுத்திக் கொள்வது அவசியம். மாணவர்கள் தங்களது கவனத்தை திசை திருப்பாமல் படித்தால் கணிசமான வெற்றி கைக்கு கட்டும். எல்லாம் தெரியும் என்கின்ற நினைப்பு ஒருபோதும் வேண்டாம்.
பயண பாதையில் கவனசிதறல் கூடவே கூடாது. இரவு நேரங்களில் தொலைதூரம் பயணிக்க வேண்டாம். உடல் நலத்தில் கொஞ்சம் கூடுதலாகவே கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம். நரம்பு, எலும்பு தேய்மானம், ரத்த நாள உபாதைகள், பரம்பரை நோய் பிரச்சனை தலை தூக்கலாம் கவனமாக இருங்கள்.
செய்ய வேண்டிய பரிகாரம்
அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று அருகம்புல் சாற்றி வழிபடுங்கள். ஒருமுறை காணிப்பாக்கம் சென்று கணபதியை வணங்கி வாருங்கள் வாழ்வில் ஏற்றம் இருக்கும்.
எனது மகன் பிறந்த தேதி 19.03 1994
நேரம் மதியம் 01.30
இடம் பழனி
அய்யா திருமணம் எப்போது நடை பெறும்?