குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026-கடகம்
குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம்
சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.
ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார்.
கார்த்திகை மாதம் 19ம் தேதி(05.12.2025) வெள்ளிக்கிழமை மாலை 05.25 மணிக்கு சூரிய உதயாதி 27.40 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் வக்ரகதியில் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு திரும்புகிறார்.
குரு பெயர்ச்சி கிரக நிலைகள்
கடக ராசி அன்பர்களே! கடந்த ஒரு வருடமாக குருபகவான் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்திலே அமர்ந்து மிகப்பெரிய யோகங்களைச் செய்தார். குருபகவானின் நல்ல பலன்கள் கிடைக்கத்தான் செய்தது. தொழில் பரவாயில்லாமல் நடந்தது. வருமானம் ஓரளவுக்குக் கிடைத்தது. குடும்பத் தேவைகளை நல்ல முறையில் சமாளித்தீர்கள். புதிய தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் அமைந்தன. திருமணம், சடங்கு போன்ற சுபகாரியங்கள் கைகூடிற்று.கடன் பிரச்சனைகள் குறையத் துவங்கியது. பூர்வீகச் சொத்துக்களில் இருந்த பிரச்சனை நீங்கியது. பெரிய மனிதர் ஆதரவு, நட்பு கிடைத்தது. வெளி வட்டாரப்பழக்கம் நல்ல மதிப்பும், மரியாதையும் கிடைத்தது. புதிய வீடு, மனை வாங்கும் யோகம் சிலருக்கு அமைந்தது.
தற்சமயம் உங்களது ராசிக்கு 6, 9க்குரிய குருபகவான் உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாமிடமாகிய மிதுன ராசியில் சென்று அமரப்போகின்றார்.
குரு பார்வை பலன்கள்

குரு விரயஸ்தானத்தை அடைவது என்பது மிகவும் மோசமானதாகும். பலவகைகளில் பணச் செலவுகளும், அதிகமான விரயங்களும், எதிர்பாராத வகையில், குடும்பத்தில்வைத்திலும், செலவுகளும், வாகனம் போன்றவற்றில் ரிப்பேரும், பொருள்கள் திருடு போகுதலும், கடன் வாங்கி சுபகாரியங்களை நடத்துதல், லோன் போட்டு வீடு, மனை, வாகனம் வாங்குதல், தொழிலை அல்லது குறு நடத்துதல், இவன் மாற்றம் செய்தல், ஜாமீன் பிரச்சனைகளும், பார்டிகளிடம் பணம் அதிகம் நிலுவையில் நிற்பதுமான தெண்டச் செலவுகள் ஏற்படும். மிகவும் திட்டமிட்டு காரியமாற்ற வேண்டிய காலமாகும். புது முயற்சிகளை ஒத்திப் போடுங்கள்.
புலிப்பாணி முனிவரின்
“தானென்ற சுந்திரனான் வியத்திலோ தவத்தாலே வந்ததொரு இலங்கை வேந்தன் கோனென்ற இராமன் கைஅம்பால் மாண்டான் குவலயத்தில் சென்மனுக்கு கொடுமை மெத்த மானென்ற மறலிபயம் பொருளுஞ் சேதம் மைந்தனே அரிட்டங்கள் வந்து கூடும்”.
என்கிறார். இதையே இன்னொரு ஜோதிடப் பாடலும், வண்மையுற்றிட ராவணன் முடி பன்னிரண்டிலே வீழ்ந்ததும்” என்று கூறுகிறது. ஆனால் குரு பகவான் வக்ர கதியில் சிம்மத்தில் இருக்கும் 72 நாட்கள் மிகுந்த நன்மைகள் ஏற்படும்.
வியாபாரிகள் : திடீரென்று வியாபாரத்தில் முடக்கம் ஏற்பட்டது போல இருக்கும். வெளியே பணம் நிறைய நிலுவையில் வயில் நிற்கும். வசூல் ஆகாது. பொருளாதார நெருக்கடி தோன்றும். எனவே அதைச் சமாளிக்க புதிய கடன்பட வேண்டிவரும். வேலைக்காரர்களும் நிறைய போனஸ் எதிர்பார்ப்பார்கள். ஒரு சிலர் புதிய வியாபாரத்தை ஆரம்பிப்பீர்கள். வெளிவட்டாரப் பழக்கம் சுமாராக இருக்கும். ஸ்பெகுலேசன் துறைகள் சுகப்படாது. விரயங்கள் அதிகம் ஏற்படும்.
உத்யோகஸ்தர்கள் : திடீரென்று இடமாற்றம் கிடைக்கப் பெறுவீர்கள். மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாவீர்கள். நீங்கள் நல்லவிதமாக பணி புரிந்தாலும், உங்களுக்கே கெட்ட பெயர் ஏற்படும். குடும்பத் தேவைகளுக்காக ஆபிஸில் லோன் போட வேண்டி வரும்.
பெண்கள் : கணவர் உங்களை மதிக்காதது போல நடந்து கொள்வார். குழந்தைகளும் உங்கள் சொல்லைக் கேட்க மாட்டார்கள். அக்கம், பக்கத்தாரிடம் கடன் வாங்கிவிடுவீர்கள். உறவினாரிடமும், பக்கத்து வீட்டினருடனும், சின்ன விஷயத்துக்காக சண்டை வரும். தலைவலி, உடல் உபாதை தொந்தரவு தரும். ஒரு சிலருக்கு கடன் வாங்கி, புதுவீடு, மனை. யோகமும், திருமண யோகமும் கூடிவரும். ஒரு சிலர் நகைகளை அடகு வைப்பீர்கள்.
மாணவர்கள் : நன்றாகவே படிப்பீர்கள். நல்ல மார்க்கும் வாங்குவீர்கள். ஒரு சிலர் வெளியே சென்று படிக்க நேரிடலாம். கண்ணாடி போட நேரிடலாம். அல்லது சிறு வைத்தியச் செலவு ஏற்படலாம். பொறுப்புடன் படிப்பீர்கள்.
கலைஞர்கள்: வெளியூர் வாய்ப்புகள் நிறைய ஏற்படும். வருமானத்தை விட பெயரும், புகழும் அதிகரிக்கும். பிறருக்காகப் பாடுபட்டு, குடும்பத்தைக் கவனிக்க மாட்டீர்கள். அவர்களின் வெறுப்பைத் தேடிக் கொள்வீர்கள். ஒரு சிலருக்கு சின்னவீடு அமையும். எனவே
அரசியல்வாதிகள் : தவறான பழக்கத்துக்கும், குடி போன்ற கெட்டபழக்கமும் உங்களுக்கு ஏற்பட்டு, உங்கள் மதிப்பை நீங்களே கெடுத்துக் கொள்வீர்கள். உங்களை விட திறமை குறைந்தவர்களுக்கு கிடைக்கும். மரியாதையைக் கண்டு, கோபப்பட்டு பேசி, கெட்ட பெயர் வாங்குவீர்கள் வீண் பந்தாவுக்காக சொந்தப் பணத்தைச் செலவழிப்பீர்கள். நிதானமாக நடக்க வேண்டிய காலமிது.
விவசாமிகள் : பயிர் விளைச்சல் நல்லமுறையில் இருக்கும். ஆனால் லாபம் அதிகம்கிடைக்காது. செலவினங்கள் நிறைய ஏற்படும். கால்நடை, வாகனம் விருத்தியிராது. கடன்பட வேண்டிவரும்.
பரிகாரம் :
இராமநாதபுரம் அருகிலுள்ள நவபாஷாணம் என்ற தேவிபட்டிணம் சென்று கடலுக்குள் ஸ்ரீராமரால் பூஜிக்கப்பட்ட நவக்கிரகங்களை வழிபட உத்தமம்.
கும்பகோணம் அருகிலுள்ள ஆலங்குடி அல்லது செங்கோட்டை அருகிலுள்ள புளியரை சென்று ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியை வழிபட்டால் நல்லது.
வாரந்தோறும் வியாழக்கிழமை சிவன் கோவிலில் தக்ஷிணாமூர்த்திக்கு நெய்தீபமேற்றி, கொண்டைக்கடலை படைத்து அர்ச்சனை செய்தால் உத்தமம்.
மதுரை மேலூர் திருப்பத்தூரிலிருந்து பட்டமங்கலம் என்ற ஊருக்கு சென்று அங்குள்ள அஷ்டமாசித்தி தக்ஷிணாமூர்த்தியை 108 முறை வலம் வந்து வழிபட்டால் நல்லது.