குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026- கன்னி
குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம்
சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.
ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார்.
கார்த்திகை மாதம் 19ம் தேதி(05.12.2025) வெள்ளிக்கிழமை மாலை 05.25 மணிக்கு சூரிய உதயாதி 27.40 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் வக்ரகதியில் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு திரும்புகிறார்.
குரு பெயர்ச்சி கிரக நிலைகள்
கன்னி ராசி அன்பர்களே! இதுவரை குருபகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் அமர்ந்து பல யோகங்களை வழங்கினார். தொழிலில் மேன்மை, லாபம் அதிகம். வருமானம் பல வழிகளில் வருதல், உத்யோகத்தில் நன்மை. மதிப்பு, மரியாதை பெருகுதல், குடும்பத்தில் திருமணம், சடங்கு போன்ற சுபகாரியங்கள் நடைபெறுதல், கடன் வாங்கி வீடு, மனை, வாகனம், ஆபரணம் வாங்குதல் போன்றவை ஏற்பட்டது. ஒரு சிலருக்கு மட்டும் பூர்வீகச் சொத்து விற்பனை, தேவையில்லாத விரயம் ஆஸ்பத்திரிச் செலவு போன்றவை ஏற்பட்டது. மற்றபடி, அதிகமான நன்மைகளே ஏற்பட்டது.
குருபகவான் உங்கள் ராசிக்குப் பத்தாமிடமாகிய மிதுன ராசிக்குப் பெயர்ச்சியாகின்றார். பொதுவாக கோட்சார ரீதியாக, குருபகவானுக்கு பத்தாமிடம் என்பது அத்தனை சிறப்பானதல்ல. “பத்திலே குரு பதவியைப் பறிக்கும்” என்பார்கள்.
புலிப்பாணி முனிவரும்.
“பொன்னனுமே பால்மதிக்கு பத்தி லேர ஆமப்பா ஆதிசிவன் தெருவுந் தோறும் அரகரா அய்யமெடுத்துண்டாரப்பா ஊமப்பா அத்தமனாயிருந்த புரூரன் உள்ளபடியறுப்புண்டான் வினையினாலே”
என்கிறார், மற்றொரு ஜோதிடப் பாடலும், “ஈசனொரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டதும் என்கிறது. அதாவது பரமசிவனே தலையோட்டிலே இரந்துண்டு வாழ்ந்த காலம் இக்காலம் என்று அர்த்தமாகும்.
குரு பார்வை பலன்கள்

கடன் அன்பை முறிக்கும், தொழிலை விட்டுவிடலாமா உத்யோகத்தில் V.R.S. கொடுத்து விடலாமா என்றிருக்கும். உறவினர். நண்பர் பகையாவார்கள். நெருங்கிய உறவினர் வகையில மரணச் செய்தி கேள்விப்படுவீர்கள். திருமணம், சுபகாரியங்கள் தள்ளிப் போகும். கால்நடை வாகனம் போன்றவற்றுக்கு சேதாரம் ஏற்படும். ஜாதகத்தில் நல்ல திசாபுத்திகள் நடந்தால் அதிகம் பாதிக்காது. குருபகவானின் 5, 7, 9ம் பார்வைகளாலும், பாதிப்புகள் குறையும்.
பொதுவாக பத்தாமிடத்துக்குரு என்பது. தொழில் முடக்கத்தை நீங்கள் சந்திக்க வேண்டி வரலாம். உத்யோகஸ்தர்கள் செய்யாத ஒரு குற்றத்துக்காக பழிச் சொல்லை வாங்க நேரிடலாம். அல்லது சஸ்பென்ட் மெமோ வாங்க நேரிடலாம். யாருக்காவது ஜாமீன் போட்டு, அதன அதனால் நீங்கள் பிரச்சனைகளையும் கோர்ட்டு, கேஸ் முதலியவற்றைச் சந்திக்க நேரலாம். சகோதரர் உறவு பாதிக்கும். கூட்டுத் தொழிலில் பிரச்சனை ஏற்படும். சனியும் சுமாரான பலன் தரும். 7மிடத்து சனியின் தாக்கம் அதிகமாகும். காதலில் தோல்வி ஏற்படும்.
“குரு பார்க்க கோடி நன்மை” என்பது போல, குருபகவானின் பார்வைக்கு பலம் உண்டு. தன்னுடைய பார்வையால் உங்கள் ராசிக்கு 2ம் மிடத்தைப் பார்ப்பதால், வாக்கு நாணயம் தவறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டாலும், வாக்கு, நாணயம் தவறாது கடைச்யில் ஏதாவது ஒரு வழி கிடைக்கும்.
4-ம் மிடத்தை பார்ப்பதால் கால்நடை, வாகன யோகம் அமையும். அது போல உடல் பாதிப்புகள் நீங்கும். எதிரிகளின் சூழ்ச்சி விலகும். நோய், கடன், கட்டுக்கடங்கும். ஆனால் 8.10.2025 முதல் 21.12.2025 வரை குருபகவான் கடகத்தில் இருக்கும் போது, மிகுந்த நன்மைகளும், புது வேலை வாய்ப்பும் சுபகாரியங்களும் நடைபெறும்.
வியாபாரிகள்: வியாபார முடக்கம் ஏற்படும். உங்களுக்கு வர வேண்டிய பணம் நிலுவையில் நிற்கும். லாபம் ஏட்டிலே தான் இருக்கும். நீங்கள் பணம் வாங்கியவர்கள். உங்களிடம் பணம் கேட்டு நெருக்குவார்கள். வட்டிக்கு வட்டி கட்ட வேண்டிவரும். தொழிலை நடத்த முடியுமா என்ற அச்சம் ஏற்படும். எப்படியோ சமாளிப்பீர்கள். கடைசி நேரத்தில் பணம் வரும். கடன் தொல்லை தரும். புதுமுயற்சிகள் தாமதமாகும். கூட்டுத் தொழிலில், பங்காளிகளுக்குள் பகை ஏற்படும் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய தொழில் அமையும். பின்பு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
உத்யோகஸ்தர்கள் : உங்களுக்கும் மேலதிகாரிகளுக்கும் பகையை மூட்டி விடுவார்கள் வேண்டாத டிபார்ட்மெண்டுக்கு, அல்லது ஊருக்கு மாற்றி விடுவார்கள். ஆபிஸில் எல்லோரிடமும் கெட்ட பெயர்தான் ஏற்படும். நீங்கள் பாட்டுக்கு ஒதுங்கி இருந்தாலும் உங்களை ஏதாவது சிக்கலில் மாட்டிவிடுவார்கள். புதிய வேலை தேடியவர்களுக்கு ஏனோதானோவென்று ஒரு வேலை கிடைக்கும். அதுவும் நிலைக்காது. இறுதியில் ஒரு நல்ல வேலை அல்லது தொழில் அமையும். எனவே உங்களுக்கு நடந்த கெடுதல்கள் நன்மைக்காகத் தான் என்று உணர்வீர்கள்.
பெண்கள் : மிகவும் உணர்ச்சி வசப்படுவீர்கள். கணவன், மனைவி உறவில் அடிக்கடி பகை ஏற்படும். உடலில் நோய் வேறு தாக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒரே நேரத்தில் குடும்பப் பொறுப்பையும், ஆபிஸையும் கவனிக்க முடியாமல் திணறுவீர்கள்.
அபார்ஷன் போன்றவை ஏற்படலாம். திருமண வயதிலிருந்தால், திருமணம் தாமதமாகும் நகைகளையெல்லாம் செலவுக்காக அடமானம் வைக்கி வேண் வரும்.தொழியில் மாற்றம் வரும், இறுதியில் அனைத்தும் நன்மைக்காகவே என்று நம்புவீர்கள்.
மாணவர்கள் :
எத்தனை படித்தாலும் மார்க் வராது. சோம்பேறித்தனமும் மறதியும், ஆட்கொல்லும், ஊக்கத்துடன் படியுங்கள். ங்கள். சிலருக்கு தேர்வின் போது, உடல்நிலை பாதிக்கும். ஒரு சிலர் படிப்பை பாதியில் விட்டுவிடுவார்கள்.
கலைஞர்கள் : ஒரு சிலருக்கு வெளிநாட்டில் வாய்ப்புகள் வரும். ஒரு சிலருக்கு வாய்ப்பே கிடைக்காது. கிடைத்தாலும் வருமானம் சிறிதளவே கிடைக்கும். சுடன் வாங்கி குடும்பத்தை நடத்த வேண்டிவரும். வெறும் பெயர் தான் மிஞ்சும் நல்ல சந்தர்ப்பங்கள் கை நழுவிப் போகும்.
அரசியல்வாதிகள் : உங்களால் முன்னுக்கு வந்தவர்கள் உங்களை அரசியலிருந்தே ஓரங்கட்ட முயல்வார்கள். பதவி திடீரென்று காலியாகும். அத்தோடு கெட்ட பெயரும், கோர்ட்டு கேஸ் பிரச்சினைகளும் உண்டாகும். முன் ஜாக்கிரதையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
விவசாமிகள் : கால்நடை வாகனங்கள் சேதாரமாகும். விவசாயம் பலிதமாகாது. நன்செய், புன்செய்ப் பயிர்கள் மகசூல் தராது. இயற்கைத் தொந்தரவுகளால் வருமானம் குறைவு.
பரிகாரம் :
கண்டிப்பாக ஒரு முறை ஆலங்குடி அல்லது தஞ்சாவூர் அருகே திட்டை சென்று தக்ஷிணாமூர்த்தியை வழிபட வேண்டும். வியாழக்கிழமை தோறும் தக்ஷிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி கொண்டைக்கடலை படைத்து, மஞ்சள் வஸ்திரம் சாற்றி முல்லை மலரால் அர்ச்சனை செய்யவும்.
வியாழக்கிழமையன்று, அதிகாலை எழுந்து நீராடி குலதெய்வத்தை வணங்கிவிட்டு. பசுந்தயிர் சாதத்தை (கடுகு + மிளகாய் தாளிக்காமல்) தயார் செய்து நிவேதனம் செய்து காகத்துக்கு போட்டு, தான் தன்னுடைய குடும்பத்தாருடன் உண்ணலாம். கொண்டைக்கடலை சுண்டல் செய்து, அருகிலுள்ள சிவன் கோவிலில் குருவுக்கு நிவேதனம் செய்துவிட்டு, பக்தர்களுக்கு தானம் செய்தால் உத்தமம்.
திருச்செந்தூர் சென்று தரிசனம் செய்து வந்தால் நலம். ஸ்ரீ செந்திலாண்டவரைத் தரிசித்து விட்டு, 5 ஆண்டிகளுக்கு அன்னதானம். வஸ்திரதானம் செய்தால் உத்தமம்.