குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026-ரிஷபம்
குரு பெயர்ச்சி நாள் மற்றும் நேரம்
சித்திரை மாதம் 31 ஆம் தேதி(14.05.2025) புதன்கிழமை இரவு10.36 மணிக்கு சூரிய உதயாதி 42.02 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.
ஐப்பசி மாதம் 1ம் தேதி(18.10.2025) சனிக்கிழமை இரவு 7.47 மணிக்கு சூரிய உதயாதி 34.20 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார்.
கார்த்திகை மாதம் 19ம் தேதி(05.12.2025) வெள்ளிக்கிழமை மாலை 05.25 மணிக்கு சூரிய உதயாதி 27.40 நாழிகை அளவில் திருக்கணிதப்படி குரு பகவான் வக்ரகதியில் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு திரும்புகிறார்.
குரு பெயர்ச்சி கிரக நிலைகள்
ரிஷபராசி அன்பர்களே! இதுவரை குருபகவான் உங்கள் ஜென்மராசியில் அமர்ந்து உங்களை அலைக்கழித்தார். அரசாங்கப் பிரச்சனைகள், அதிகமான செலவுகள், வீண் விரயங்கள், சகோதர பகை, பெண்களால் அவச்சொல், மனைவி மக்களிடம் தகராறு, ஒரு சிலர் குடும்பத்தை விட்டு உத்யோகத்தின் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணமாகவோ பிரிய நேர்தல், வைத்தியச் செலவுகள், உடல் நோய். நொடி தேவையற்ற பிரச்சனைகளில் தலையிட்டு மன உளைச்சலுக்கு ஆளாகுதல்.பிள்ளைகளால் மன அமைதி கெடுதல், விபத்துக்கள், அவமானப்படுதல், தீராத வைத்தியச் செலவுகள் போன்ற தீய பலன்களை அடைந்தீர்கள். அதே சமயம் தெய்வ வழிபாடு. தீர்த்த யாத்திரை, நேர்த்திக்கடன் செலுத்துதல், சுபகாரியங்களில் கலந்து கொள்ளுதல். பெரியமனிதர் சந்திப்பு போன்ற நல்ல பலன்களையும் அடைந்தீர்கள்.
தற்சமயம் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்துக்குக் குருபகவான் பெயர்ச்சியாகப் போகின்றார். தற்சமயம் நடக்க இருக்கிற குருப்பெயர்ச்சியானது. உங்கள் ராசிக்கு 2மிடமாகிய தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்தில் மிதுன ராசியில் குரு அமர்வது உங்களுக்கு யோகம் தான். குரு 2மிடத்தில் அமர்வது மிகவும் நல்லது.
முதலில் தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். பழைய தொழில் அபிவிருத்தியாகும். தொழிலை நவீனப்படுத்துவீர்கள். புதிய தொழில் செய்ய உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். புது வேலை வாய்ப்புகள் அமையும். எதிரிகள் கை சற்றுக் குறையும். உங்கள் ஆயுள் தீர்க்கமாகும். நீண்ட நாட்களாக இருந்த நோய் நீங்கும். திருமணமாகாலிருந்தால் திருமணம் கூடி வரும். வீட்டில் சுபகாரிங்கள் நடக்கும். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் சாதகமாக முடியும்.
மனதிலே உற்சாகமும், மகிழ்ச்சியும் குடிகொள்ளும். பிரயாணங்கள் அனுகூலமாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வெளிவட்டாரப் பழக்கம் நன்மை தரும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். மகான்களின் தரிசனமும், தெய்வவழிபாடும் உண்டாகும். மொத்தத்தில் ரிஷப ராசி நேயர்களுக்கு ஒரு அற்புதமான காலமாக அமையப் போகின்றது. ஆபரண யோகமும், ஆடம்பரச் சாமான்களும் சேரும் புதுவீடு, மனை வாங்குவீர்கள்.
சனியினாலும் நன்மைகள் அதிகரிக்கும். குருபகவான் 72 நாட்கள் கடகத்தில் வக்ர கதியில் சஞ்சரிக்கும் போது சிறிது பலன்கள் மாறுபடலாம். ஆனால் சனிப்பெயர்ச்சி உங்களுக்கு மிகுந்த நன்மைகள் தரும்.
குரு பார்வை பலன்கள்

வியாபாரிகள் : பழைய தொழிலில் இருந்த சிக்கல் நீங்கி, வியாபாரம் புதுப்பொலிவுடன் நடக்கும். தொழிலை நவீனப்படுத்த வசதிகள் கிடைக்கும்.
பேங்க் லோன் போன்றவை கிடைத்து, ஒரு சிலர் புதிய வியாபாரம் ஆரம்பிப்பீர்கள். சரக்குகள் நல்ல விலைக்கு விற்பனையாகி லாபத்தை ஈட்டித் தரும் லாபத்தை பல வகைகளில் முடக்குவீர்கள். புதிய கட்டிடம் கட்டி இடமாற்றம் செய்ய வாய்ப்பு உண்டாகும். கோர்ட் கேஸ் பிரச்சனைகள் சாதகமாகும். சனியினால் இன்னும் சில புது நன்மைகள் நடக்கும்.
உத்யோகஸ்தர்கள் : நீண்டகாலமாக கணவன், மனைவி பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர முடியும். நீங்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். உத்யோக உயர்வு, சம்பள உயர்வு முதலிய நல்ல பலன்கள் கிடைக்கும். ஆபிஸில் உங்கள் கௌரவம் உயரும். வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு நல்ல உத்யோகம் கிடைக்கும். குடும்பத்துக்காகவும் உங்கள் நேரத்தை செலவிட முடியும். மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்பெண்கள்: கணவன் மனைவி உறவு அற்புதமாக இருக்கும். நீங்கள் விரும்பிய நகை துணிமணிகளையும், வீட்டுக்குத் தேவையான ஆடம்பரச் சாமான்களையும் வாங்க முடியம் மாமியார், நாத்தனார் உறவு சீராசு இருக்கும். ஒரு சிலர் தனிக்குடித்தனம் செல்வீர்கள் உதயோகம் பார்க்கும் பெண்களுக்கு வேலையிலும், குடும்பத்திலும் ஆதரவு உண்டு. நிறை நாள் உடல் உபாதைகள் நீங்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.
மாணவர்கள்: உயர்கல்வி அடைவீர்கள், நல்ல முறையில் படித்துப் பட்டம் பெறுவீர்கள் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். பெற்றோர், ஆசிரியரின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். Campus Interview -யில்நல்ல வேலை கிடைக்கும்.
கலைஞர்கள்: பொற்காலமாகும் பேரும், புகழும் அதிகரிக்கும். வருமானம் உயரும். ஏகப்பட்ட சந்தர்ப்பங்கள் கிடைத்து. உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும்
அரசியல்வாதிகள்: மங்கிக்கிடந்த உங்கள் புகழ் உயரப் போகின்றது. அரசியலில் நீங்கள் ஒரு முக்கியப் புள்ளியாகத் திகழ்வீர்கள். பட்டம், பதவி, பணம் மூன்றும் உங்களைத் தேடி வரும் உங்களைச் சுற்றி எப்போதும் கூட்டம் இருந்து கொண்டேயிருக்கும்.
விவசாயிகள் : நன்செய், புன்செய் பயிர்கள் நன்கு விளைந்து லாபத்தை ஈட்டித் தரும் வருமானம் பெருகும். கால்நடை வாகனங்கள் செழிக்கும்.
பரிகாரம்: பிரதோஷ வேலையிலே சிவபெருமானை வணங்கி வருவது நலம். வியாழக்கிழமை தோறும் தக்ஷிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பு. குலதெய்வத்தை தவறாமல் வழிபடவும்.