குரு வக்ர பெயர்ச்சி 2024 : கடகம்,சிம்மம் பலன்கள் மற்றும் பரிகாரம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

குரு வக்ர பெயர்ச்சி 2024

குரு வக்ர பெயர்ச்சி 2024 : கடகம்

உங்கள் பிறப்பு ஜாதகத்தில் வக்ர குரு இருந்து, தற்போதைய குரு வக்ரமாகப் பயணிக்கும் காலத்தில் நீங்கள் நினைத்தது நடக்க, அதன் முனைப்பாக வெகு பிரயாசைப்பட்டு உழைப்பீர்கள். ஓரிடத்தில் உட்காராமனி ஓடிக்கொண்டே இருப்பீர்கள். உழைப்பின் அறிவின் பயன்பாடும் அதிகமிருக்கு சிலர் வெகுவாக முயற்சிசெய்து, நல்ல மருமகளை வீட்டிற்கு அழைத்துவருவீர்கள்.

குரு வக்ர பெயர்ச்சி 2024

வெளிநாட்டு வேலை அல்லது உயர்கள் பொருட்டு, முயன்று வெற்றிகாண்பீர்கள் அரசியல்வாதிகள், அதிர்ஷ்டமான புதிய பதவிகிடைப்பதால் தங்களது முழு உழைப்பையும் திறமையையும் அதில் வெளிப்படுத்துவர். ஆக, இந்த வக்ர குரு காலத்திலும் மிக சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

நீங்கள் நினைத்தபோல் வேலை கிடைக்கும். சிலர் வேலையில் பதவி உயர்வும் பெறுவர் உங்களை நீங்களே மிகப் பிரகாசமாக வெளிப்படுத்திக் கொள்வீர்கள்.

பரிகாரம்

திருச்செந்தூர் முருகனுக்கு சிறு வேல் வாங்கி உண்டியலில் செலுத்துங்கள். அருகிலுள்ள முருகன் கோவிலுக்கு செப்புப் பாத்திரம் வாங்கிக்கொடுங்கள்.

குரு வக்ர பெயர்ச்சி 2024 : கடகம்

சிம்ம ராசியினரின் பிறந்த ஜாதகத்தில் குரு வக்ரமாக இருந்து, தற்போதைய கோட்சார குரு வக்ரகாலத்தில் தொழிலில் நேர்மறை- எதிர்மறை முதலீடுகள் அதிகமாகும். எனவே அது சார்ந்த அலைச்சலும் பரபரப்பும் அதிகரிக்கும். வியாபாரத்தில் நிறைய கிளைகள் திறக்கும் வாய்ப்புள்ளது.

வீடு விஷயம் நல்ல யோகம் தரும் மனை விஷயம் லாபம் கொண்டுவரும். அரசியல்வாதியாக இருந்தால், பிறந்த இடத்தில் ஒரு பதவி கிடைத்து மிக மகிழ்வீர்கள். உயர்கல்வி யோகமுண்டு. சில தம்பதிகள் வாரிசு யோகம் பெறுவர். இதனையெல்லாம் கண்டு, ‘சிம்ம ராசியா கொக்கா’ என உங்களை நீங்களே பாராட்டிக்கொள்வீர்கள்.

குரு வக்ர பெயர்ச்சி 2024

இந்த ராசிக் குழந்தைகளின் பெற்றோர், புது வியாபாரம் தொடங்குவர்.

பரிகாரம்

கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலய சிவனை வணங்கலாம். அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு மஞ்சள், மஞ்சள் பொடி கொடுத்து வணங்குவது உயர்வு தரும்.

Leave a Comment

error: Content is protected !!