Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசிபலன் |Indraya rasi palan -11.12.2024

இன்றைய ராசிபலன் |Indraya rasi palan -11.12.2024

இன்றைய ராசி பலன்

மேஷம்

உங்களுக்கு புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும்.

ரிஷபம்

உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் நிலையில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சினைகள் ஓரளவு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்

மிதுனம்

நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். வியாபாரத்தில் லாபம் பெருகும். சேமிப்பு உயரும்.

கடகம்

indraya rasi palan kadagam

உங்களுக்கு தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சிம்மம்

உங்கள் ராசிக்கு பகல் 11.48 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களுக்கு சிறு மனக்குழப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. பொருளாதார பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

கன்னி

உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 11.48 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். வேலையில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. பயணங்களில் கவனம் தேவை.

துலாம்

உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களின் பிரச்சினைகளுக்கு உறவினர்கள் பக்க பலமாக இருந்து உதவுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம்

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். கடன் பிரச்சினைகள் குறையும்.

தனுசு

நீங்கள் ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டு.

மகரம்

வேலையில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

கும்பம்

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.

மீனம்

குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை குறையும் சூழ்நிலை ஏற்படலாம். சுப செலவுகளால் கையிருப்பு குறையும். தொழில் புரிவோர் தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular