கடக ராசி திருமண வாழ்க்கை
இவர்களின் 7- ஆம் வீடு மகரம் எனும் சனி வீடு.சூரியன்,சந்திரன்,செவ்வாய் சாரம் வாங்கிய உத்திராடம், திருவோணம்,அவிட்ட நட்சத்திரங்கள் உள்ளன. இவர்களின் வாழ்க்கைத் துணை சிறிது பொறுமை உடையவராகவும் , கோபம் , பிடிவாதம் , கர்வம் நிறைய உடையவராகவும் இருப்பர்.மகரம் என்பது கால புருஷ தத்துவப்படி 10-ஆம் வீடு எனவே , இந்த ராசி – லக்னத்தாரின் வாழ்க்கைத் துணைவர் மிகவும் கௌரவம் பார்ப்பவராக இருப்பார்.
கடக லக்ன , ராசிக்கு 7 – ஆம் அதிபதியான சனி உச்சமானால் , நல்ல சுகபோகத்துடன்- நிறைந்த கௌரவத்துடன் எல்லாரும் வந்து பணிவுடன் பேசும் அளவுக்கு பெரிய மனிதத்தன்மையோடு இருப்பர்.திருமணம் ஆனவுடன் சிலருக்கு மாமனாரே நல்ல வேலை வாங்கிக் கொடுத்தோ அல்லது வியாபாரம் ஆரம்பித்துக் கொடுத்தோ பெருமைப்படுத்துவர்.
இதே கடக லக்ன – ராசிக்கு 7 – ஆம் அதிபதி நீசமானால் அந்தோ பரிதாபம்தான் . திருமணம் ஆனவுடன் வேலை போய் , கெளரவம் இழந்து மிகவும் கஷ்டப்படுவார்கள்.
ஆண் கடக ராசிக்காரர்கள் என்றால் பராவாயில்லை ;கல்யாணம் ஆனவுடன் மனைவியை வேலைக்குப் போகவேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்பதோடு சரி . ஆனால் கடக ராசி – லக்ன பெண்களுக்கு 7 – ஆம் அதிபதி நீசமாகியிருந்தால் திருமணம் ஆனவுடன் கணவருக்கு வேலை போய்விட்டால் நிறைய கஷ்டம் நீசபங்கம் ஆகியிருந்தால் முதலில் வேலை போய் , பிறகு கிடைத்துவிடும்.
இதைப் பிடித்து கடக லக்ன பெண்கள் பயப்பட வேண்டாம். உங்கள் ஜாதகத்தில் புதன் நன்றாக இருப்பின் கணவரின் மாத சம்பள வேலை நிலைக்கும்.இவர்களின் மாமியார் பொல்லாதவராகவும் மாமனார் சாதுவாகவும் சிலசமயம் வேடிக்கைப் பேச்சு உடையவராகவும் இருப்பார்.
இவர்களின் மாமனார் வீடு தோட்டம் , வயல்வெளி , பூங்கா போன்றவற்றுக்கு அருகில் இருக்கும் . தெற்கு அல்லது மேற்கு திசையில் துணை அமையும்.
போ , ஜ , ஜி , ஸ்ரீ , ஜே , ஜோ , க , த , தீ(P,J,S,K,T,D) மற்றும் டா ஆகிய எழுத்துகளில் பெயர் ஆரம்பிக்கும்.