நண்டு கோவில் -திருத்தேவன்குடி
அபிஷேகம் செய்தால் நண்டு வெளியில் வருமா???
இயற்க்கை எழில் கொண்ட தஞ்சாவூர் மாவட்டம் வேப்பதூர் அருகே உள்ளது திருத்தேவன்குடியில்(Thirudevankudi) வீற்றிருக்கும் கற்கடேஸ்வரர் கோவில் .
ஒரு ஆச்சரியமான தகவல் உள்ளது
தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 42வது சிவாலயமாக உள்ள கற்கடஸ்வரர் ஆலயம் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் வேப்பத்தூர் அருகிலுள்ள திருத்தேவன்குடியில் உள்ளது.
இரண்டு அம்பிகை சன்னதிகள்
இக்கோவிலில் இருக்கின்றன இந்தக் கோவிலின் கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தில் இந்திரன் வாளால் வெட்டிய வெட்டு தழும்புகளும் சிவலிங்கத்தில் நண்டு நுழைந்து வெளியேறியது துவாரமும் இருக்கின்றன.
ஆடி அமாவாசையும்
பூர நட்சத்திரமும் கூடிய நேரத்தில் 21 குடம் காராம் பசும்பாலைக் கொண்டு இங்கிருக்கும் சிவ லிங்கத்தை அபிஷேகம் செய்து நீராட்டினால்
சிவலிங்கத்திலிருந்து நண்டு வெளியில் வந்து காட்சி கொடுக்கும் என்று வசிஷ்ட மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது
இந்திரனின் கர்வத்தின் காரணமாக நண்டை வெட்ட முயன்றபோது அந்த வாள் தவறுதலாக சிவலிங்கத்தின் மீது பட்டதும் பதறினான் சிவபெருமான் தோன்றி அவனுக்கு அறிவுரை கூறியதும் வருந்தினான் தேவர்களின் தலைவர் திருந்திய இடமென்பதால் இத்தலம் திருந்துதேவன்குடி என்று வரலாறு கூறுகிறது…