குழந்தை பிறப்பில் ஏற்படும் தோஷங்கள்
கிரகங்களின் பலத்தை வைத்தே கீழே கூறிய பலன்களை மதிப்பிட வேண்டும்.லக்னம் 12 பாவங்களின் விளைவுகள் அல்லது முடிவுகள்- லக்னம் மிக முக்கியமான ஒன்றாகும். துன்பங்களையும், தீமையையும் கொடுக்கக்கூடியது. ஜாதகர் தன்னுடைய 32 வயதுவரை துன்பங்கள் வராது என்று சொல்ல முடியாது.
“24 வயது வரை ஒருவரின் ஆயுள் நிர்ணயம் என்பது மிகக் கடினமாகும்“
குறுகிய கால வாழ்வு:லக்னத்திலிருந்து சந்திரன் 6, 8, 12ல் இருந்து அசுபர்களின் பார்வை பெற்றால் அந்த குழந்தையின் உடல் நலத்தில் 8 வயது வரை கவனமாக இருக்க வேண்டும். சுபர் பார்வை பெற்றால் 18 வயது வரை கவனமாக இருக்க வேண்டும்.
வக்ரகதியில் உள்ள கிரகம் 6, 8 12ல் இருந்து சுபர் பார்வை பெற்றால் குழந்தை ஒரு மாதம் வரை கண்டம். லக்னத்தில் சுபர் பார்வை பெற்று ஐந்தாமிடத்தில் சனி, செவ்வாய், சூரியன் சேர்ந்து இருந்தால் தாய் ,சகோதரர் இழப்பு நேரிடலாம். லக்னத்தில் அல்லது எட்டில் செவ்வாய், சனி, சூரியனுடன் சுபர் பார்வையின்றி அசுபர் பார்த்ததிடில் உடனே இறக்கும்.
சனியும், செவ்வாயும் லக்கினத்தை பார்த்தால், பிரகாசமாக ராகுவுடன் எங்கேயாவது சேர்ந்தால், குழந்தை 15 நாட்களுக்குள் இறந்துவிடும். குழந்தையுடன் தாயாரும் உடனே இறக்க நேரிடும்.சனி 10-ல் சந்திரன் 6-ல் செவ்வாய் ஏழிலும் இருக்க உடனே எமனுக்கு பிரீதி செய்ய வேண்டும். சனி லக்னத்தில் இருந்து சந்திரன் குருவும் (எட்டில் சந்திரன் குரு 3-ல் குழந்தை ஒரு மாதம் மட்டுமே வாழும்).
சந்திரன் அசுபர் உடனிருந்து 8, 7 அல்லது லக்னம் இவற்றிலிருந்தால் சீக்கிரமே இழப்பை ஏற்படுத்தும். காலையில் பிறந்த குழந்தை அல்லது மாலையில் பிறந்த குழந்தை எதுவாயினும் ஹோரா அல்லது கண்டாந்த பிறப்பானால் திரிகோணத்தில் பாவர்கள் இருப்பினும் உடனே இறந்துவிடும்
கண்டாந்தம்: கடகத்தின் கடைசி நவாம்சம் விருச்சகத்தின் மற்றும் மீனம் கண்டாந்தா என்று அழைக்கப்படுகிறது. லக்னம் அல்லது சந்திரன் கண்டாந்தத்தில் இருந்தால் சீக்கிரமாக இழப்பு உண்டாகும் என்று பராசரர் சொல்கிறார்.
6 மற்றும் 12ஆம் இடங்களில் பாவ கிரகங்கள் இருந்திட அல்லது இரண்டு எட்டில் பாவ கிரகங்கள் நின்றிட லக்னம் மற்ற பாவ கிரகங்களுக்கு நடுவில் நிற்பின் அந்தக் குழந்தை விரைவில் மரணம் அடையும்.
பாவ கிரகங்கள் லக்னத்திலும் மூன்றிலும் நின்றுவிட சந்திரனும் பாவ கிரகங்களுடன் இருக்க பிறந்த குழந்தை பிறந்த உடன் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
தேய்பிறை சந்திரன் லக்னத்தில் இருக்க, கேந்திரம் மற்றும் திரிகோணங்களிலும் எட்டிலும் பாவர்கள் இருப்பின் அந்த குழந்தை சீக்கிரமே மரிக்கும்.
லக்னத்தில் சந்திரன் நிற்க 8,12 அல்லது 7ல் பாபகர்த்தாரி யோகத்தில் கிரகங்கள் நின்றிட பிறந்த குழந்தை அதி சீக்கிரம் இறந்து விடும்.
சனி, சூரியன், செவ்வாய் 12 , 9 அல்லது 8ல் நிற்க சுபகிரகங்கள் பார்வை இல்லாவிடில் அந்த குழந்தை பிறந்தவுடன் இறக்கும்.
7-ஆம் இடம் மற்றும் திரிகோணத்தில் பாவ கிரகங்கள் இருந்து லக்னத்தில் தேய்பிறை சந்திரன் இருந்தால் அந்தக் குழந்தை சீக்கிரம் இறப்பை சந்திக்க நேரிடும்.

எல்லா கிரகங்களும் பலமிழந்து அபோக்லிமா ஸ்தானத்தில்( 3, 6 ,9, 12 )இருப்பின் அந்த குழந்தை இரண்டு அல்லது ஆறு மாதங்களே உயிர்வாழும்.
பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் உள்ள சந்திரனை மூன்று பாவக்கிரகங்கள் பார்ப்பின் தாயாருக்கு பெரிய அளவில் பாதிப்பு அல்லது மரணம் கூட சம்பவிக்கும்.
இரண்டாம் இடத்தில் ராகு, சூரியன், புதன், சுக்கிரன், சனி இருப்பின் அந்த குழந்தையின் தகப்பனார் இறப்பார் அதன்பின்னர் தாயாரும் இறப்பார்.
பாவ கிரகங்களுக்கு ஏழு அல்லது எட்டில் சந்திரன் பாவ கிரகங்களுடன் நின்றிட பாவ கிரகங்களின் பார்வை இருப்பின் அந்த ஜாதகரின் தாயார் சீக்கிரம் மரணம் அடைவார்.
ஏழாம் இடத்தில் சூரியன் உச்சமாகவோ அல்லது நீசமாகவோ இருப்பின் அந்தக் குழந்தை தாய்ப்பால் அருந்தாது( மேஷம் மற்றும் துலாம் லக்னத்திற்கு மட்டுமே இது பொருந்தும்).
சந்திரனுக்கு நாளில் பாவ கிரகங்கள் இருந்தாலும் பாவ கிரகங்களின் எதிரிகளின் வீட்டில் சந்திரன் இருந்தாலும் கேந்திர திரிகோணங்களில் சுபர்கள் இல்லாவிடில் அந்த குழந்தையின் தாயார் விரைவில் மரணம் அடைவார்.
ஆறு மற்றும் பன்னிரண்டில் பாபகிரகங்கள் இருப்பினும் தாயாருக்கு கெடுதல் உண்டாகும் நான்கு பத்தில் பாவர்கள் இருப்பின் தகப்பனாருக்கு அதே நிலை ஏற்படும்.
லக்னத்தில் பாவகிரகங்களும் புதனும் 7 மற்றும் பன்னிரண்டில் பாவ கிரகங்கள் இருக்க பிறந்த குழந்தையானது குடும்பத்தையே அழித்துவிடும்.
லக்னம் இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் ஆகிய இடங்களில் முறையே குரு, சனி, ராகு நின்றிட அந்த குழந்தையின் தாயாருக்கு விரைவில் மரணம் ஏற்படும்.
சந்திரனுக்கு திரிகோணங்களில் பாவ கிரகங்கள் இருந்து சுப கிரகங்கள் சேர்க்கை இல்லாமல் இருப்பின் அந்த குழந்தை விட்டுவிட்டு தாயார் மரணம் அடைவாள்.
சந்திரனுக்கு திரிகோணங்களில் சனி செவ்வாய் இருவரும் இருக்க நவாம்சத்திலும் அதே நிலையில் இருப்பின் அந்தக் குழந்தை இரண்டு தாயார்கள் இருப்பர் அல்லது அந்தக் குழந்தையின் ஆயுள் அற்ப ஆயுள் ஆகும்.
லக்னம் 7 மற்றும் 6 இல் முறையே சனி செவ்வாய் மற்றும் சந்திரன் நின்றிடில் அந்தக்குழந்தையின் தகப்பனார் அதே சீக்கிரம் மரணம் அடைவார் அல்லது அதிக துன்பங்களுக்கு ஆளாக நேரிடும்.
லக்னத்தில் குரு நிற்க சனி செவ்வாய் சூரியன் புதன் இரண்டாம் இடத்தில் நின்றிட அந்த ஜாதகரின் திருமண நேரத்தில் தகப்பனாருக்கு மரணம் ஏற்படும்.
சூரியனுக்கு ஏழில் பாவ கிரகங்களும் சூரியனும் பாவ கிரகங்களுடன் சேர்ந்து பாபகர்த்தாரி யோகத்தில் இருக்க பிறந்த குழந்தையின் தகப்பனாருக்கு ஆதி சீக்கிரம் மரணம் நிகழும்.
பத்தில் செவ்வாய் ஏழில் சூரியன் ராகு 12ல் இருந்தால் அந்த ஜாதகரின் தகப்பனார் தூரதேசத்தில் வாசிப்பார்
எதிரி வீட்டில் பத்தாம் இடத்தில் செவ்வாய் அமர்ந்திட அந்த ஜாதகரின் தகப்பனாருக்கு விரைவில் மரணம்(செவ்வாய்க்கு எதிரி புதனுக்கும் கன்னி ராசி மற்றும் தனுசு ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு இது பொருந்தும்)
லக்னத்தில் சனி செவ்வாய் ஏழில் சந்திரன் 6 இல் உள்ள குழந்தை பருமனாக பிறக்கும் அந்த தகப்பனாருக்கு ஆயுள் பலம் குறைவு.
சனியால் சூரியன் பார்க்கப்பட்டு நவாம்சத்தில் மேஷம் விருச்சிகம் ஆகிய வகைகளில் இருந்தாலும் அந்தக் குழந்தை பிறக்கும் முன்னரே அவரது தகப்பனார் குடும்பத்தை விட்டு விலகி நிற்பார்.
4, 10 , 12 ஆம் இடங்களில் பாவ கிரகங்கள் இருப்பின் குழந்தையின் பெற்றோர் குழந்தையை தவிக்க விட்டு சென்றுவிடுவார்கள் குழந்தை அலைந்து திரியும்.
நான்காமிடத்தில் குரு ராகு இருவரும் சேர்ந்து எதிரி வீட்டில் இருப்பினும் லக்னத்தில் சேர்ந்து எதிரி வீட்டில் இருப்பினும் குழந்தையின் தகப்பனார் குழந்தையை 23 வயது வரை பார்க்கமாட்டார்( மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு இது பொருந்தும்).
சூரியன்-பிதுர்காரகன்
சந்திரன்-மாதுர்காரன்
சூரியனை பாவிகள் பார்க்க பாபகர்த்தாரி யோகத்தில் சூரியன் இருப்பின் தகப்பனாருக்கு கெடுதல்.
சூரியனுக்கு 4,6 எட்டில் சந்திரன் இருப்பது தாயாருக்கு கெடுதல்.பாவ கிரகங்கள் 4,6,8 இருப்பதும் தாயாருக்கு நல்லதல்ல.