Homeஜோதிட குறிப்புகள்லக்னாதிபதி 12 பாவங்களில் நிற்கும் பலன்கள் - தொடர்ச்சி

லக்னாதிபதி 12 பாவங்களில் நிற்கும் பலன்கள் – தொடர்ச்சி

லக்னாதிபதி

லக்னாதிபதி ஏழாம் இடத்தில்இருந்தால்!

லக்னாதிபதி 7-ல் நிற்க ஜாதகரால் வாழ்க்கை துணைக்கு அதிர்ஷ்டம், ஆதாயம் உண்டு.நண்பர்கள் புடைசூழ வாழக் கூடியவர்.சொந்தங்களை விட நண்பர்கள், துணைவரால் நன்மை அடைவார்.திடீர் புகழ் ,பணம் பெறுவார்.மக்களால் விரும்பப்படும் தலைவராவார்.கலாரசிகர்.செய்ய நினைப்பதை சரியாக செய்யக்கூடியவர்.தன் சந்தோஷத்தை மட்டுமே பூர்த்தி செய்ய விரும்பும் சுயநலவாதி.யாரைப்பற்றியும் கவலைப்படாமல் நினைத்ததை முடிப்பார்.தன் மனதிற்கு சரியான பட்டதை துணிந்து செய்வார்.யாரை எப்படி எந்த நேரத்தில் வேலை வாங்க வேண்டும் என அறிந்து தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் திறன் மிக்கவர்.இவர் உதவி கேட்டால் பிறர் தட்டாமல் செய்து கொடுப்பர் ,முகராசிகாரர்.

துணைவர் அமைவதை பொறுத்து வாழ்க்கை மாறும், காரியவாதி.பாவ கிரக பார்வை சேர்க்கை பார்வை இருந்தால் சுயநலத்தை காட்டிக்கொடுத்துவிடும்.நெருங்கியவர் விலகி விடுவார், தானே தன் வாழ்க்கையை கெடுத்துக் கொள்வார்.துரோகம் செய்யும் எண்ணத்தால் நல்லவர்களைப் பகைத்துக் விலக்கி வைக்கப்படுவார்.

மனம் நொந்து வாழ நேரும்.சுயநலத்தால் வாழ்க்கையை இழப்பார். 6 ,8, 12ஆம் அதிபதிகள் தசையில் நோயால் கடனால், எதிரிகளால் விரையம் ஏற்படும்.ஆயுள் பங்கம் உண்டு ,சனி பார்வை பக்கவாத நோய் தரும்.

லக்னாதிபதி எட்டில் நின்றால்! 

லக்னாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் இருந்தால் உடல் ரீதியான பாதிப்பு, உடல் பலவீனம் கொண்டவர்.ஆயுள் பலம் இருந்தாலும், நல்ல எண்ணம், நல்ல புத்தி இல்லாதவர்.இல்லாத ஒன்றை இருப்பதாக தேட கூடியவர்.ஏமாந்தவர் கிடைத்தால் அவரை வைத்து காலம் தள்ளுவார்.அவமானம் அடிக்கடி நிகழும்.பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும் அனைத்தையும் தன் தவறான நடவடிக்கையால் இழந்துவிடுவார்.

பலம் பெற்ற சுபகிரக பார்வை சேர்க்கை இருந்தால் ஓரளவு நேர்மையும் நன்மையும் பெறுவார்.பூர்வ புண்ணியம் 5ஆம் இடம் சிறப்பாக அமைந்தால் சொற்ப லாபம்பெறுவார்.யாரும் கணிக்காதவற்றை கணிக்கும் ஆற்றல் வித்தியாசமான- நுணுக்கமான கலை ஆய்வு கொண்டவர்.

லக்னாதிபதி

விபரீத ராஜ யோகம் இருந்தால் அமானுஷ்ய சக்தி பெற்றவராக இருப்பார்

பாவ கிரக பலம் பெற்று சம்பந்தம் பெற்றால் குறைந்த ஆயுள் காலம் வாழ்ந்து, கொலை, கொள்ளைகளில் துணிந்து இறங்க கூடிய கொடூரமான வராக இருப்பார்.புத்திர தோஷத்தால் மனம் வெறுப்பார், நினைத்த வாழ்க்கை வாழாமல் போவார் ,அரசாங்க தண்டனை கிட்டும் ,குடும்பம் நடத்த சிரமப்படுபவராக வாழ நேரிடும்.

லக்னாதிபதி ஒன்பதில் நின்றால்! 

ஒன்பதாம் வீட்டில் லக்கினாதிபதி நின்றால்  தந்தைக்கு பிடித்தவர் ஆகவும் தந்தையால் யோகம் பெற கூடியவராகவும் இருப்பார்.பெரியவர்களிடத்தில் மதிப்பும் மரியாதையும் கொண்டவர்.நேர்மை, நியாயத்தில் நம்பிக்கை கொண்டு அதன்படி நடக்கக் கூடியவர். பாராட்டுப் பெற கூடியவர்.

தர்மம் செய்வதில் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கும் ,இல்லாத ,இயலாதவர்களுக்கும் தரவே எண்ணுவார்.தெய்வ நம்பிக்கை  கொண்டவர்.லக்னாதிபதி சுப பலம் பெற்றால் வள்ளலாக இருப்பார்.சகல ஞானமும் கிடைக்கும்.

லக்னாதிபதியை பாவ கிரக பார்வை சேர்க்கை பெற்றால் கஞ்சன், எதற்கெடுத்தாலும் குறை கூறுவார்.பிறரை குழப்பி விட்டு தன் வாழ்க்கையை கவனமாக வைத்துக் கொள்வார்.கெடுக்கும் எண்ணத்தை வெளிக்காட்டாமல் கெடுப்பார்.நம்பியவரை நட்டாற்றில் விடுவார்.தன்னைச் சூழ்ந்தவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை விரும்ப மாட்டார்.முதுகில் குத்துபவர்கள்

இவருடன் நெருங்கிப் பழகியவர்களும் விலகுவார்கள்.குடும்பத்துக்குள்ளேயே தானே முதன்மையாய் வாழ வேண்டுமென நினைப்பவர்.

லக்னாதிபதி பத்தில் நின்றால்! 

லக்னாதிபதி பத்தில் நிற்க தன்னுடைய உழைப்பால் உயர்ந்த நிலைக்கு வருவார்.

நல்ல தலைவனாக மக்களால் போற்றப் படுவார்.எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் தன்னுடைய தனித்திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக செய்யக்கூடியவர்.குடும்ப பொறுப்பு மிக்கவர் அனைவரையும் அனுசரித்துப் போகக் கூடியவர்.தெய்வத்தை முறையாக வழிபடக்கூடியவர்.யாரையும் நம்பி வாழாத சுயம்புவாக இருப்பார்.

பலருக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டுவார்.அன்பு, கருணை, இரக்கத்தால் புண்ணிய காரியங்கள் செய்வார்.கல்வி ,ஆன்மீக காரியங்களுக்கு உதவக்கூடியவர்.இடைவிடாமல் உழைத்து நினைத்ததை முடிப்பவர்.

உழைப்பிற்கேற்ற பலன் கிடைத்து வீடு, வாகனம், நிலபுலன் கிடைத்து நிம்மதியான மனநிறைவான வாழ்க்கையை அடைவார்.தொழிலில் பக்தி, தொழில் வெற்றி மிக்கவர்.பாவ கிரக பார்வை இணைவு பெற்றால்  சோம்பேறியாக மாற்றி  செய்தொழிலில் பாதிப்பைத் தரும்.

நடுத்தரமான வாழ்க்கையும், சுமாரான வருமானமும் கிடைக்கும்.மனதிருப்தி கொண்டவர்.பலம் பெற்ற பாவ கிரக பாதிப்பு இருந்தால் சட்டத்திற்கு புறம்பான தொழில், வெளிநாட்டு மத தொடர்புடைய தொழில் செய்வார்.எப்படியும் வாழலாம் என்னும் எண்ணம் இருக்கும்.எதிலும் முழு ஈடுபாடு காட்டுவார்.

லக்னாதிபதி

லக்னாதிபதி பதினொன்றில் நின்றால்!  

லாபஸ்தானத்தில் லக்னாதிபதி இருந்தால் அதிர்ஷ்டம் மிக்கவர்.வாழ்க்கையில் நினைத்தது நடக்கும்.எல்லா விஷயங்களிலும் நன்மை தானாக தேடி வரும்.கெட்டது தானாக விலகி விடும், நல்ல மதிப்பு மரியாதை கிடைக்கும்.மக்கள் வசியம்  மிக்கவர் ,நல்ல பழக்க வழக்கத்தால் பெரியவர்களின் அன்புக்குரியவராகவும் ஆசி பெற்றவராகவும் திகழ்வார்.

 தீய பழக்க வழக்கத்தை பற்றி தெரிந்து கொள்வதை விட மூத்தவர் சொன்னாலே புரிந்துகொண்டு தவறு செய்யமாட்டார்.ஜாதகரின் மூத்த சகோதரருக்கு உதவி கரமாகவும் யோகத்தை தரும் உடன்பிறப்பாகவும் உறுதுணையாகவும் இருப்பார்.மூத்த சகோதர சகோதரிகளின் அன்பும் ஆதரவும் புகழும் ,லாபமும் கிடைக்கும்.

ஏமாற்றாத எண்ணத்தால் உயர்நிலை பெறுவார்.பெண்களால் விரும்பப்படுவார். சிலருக்கு இளைய தாரத்தால்  நன்மை கிடைக்கும்.இளையதாரத்தின்  மீது பற்றும் பாசமும் கொண்டவராக இருப்பார்.இவரால் இளைய தாரம் பயனடைவர்.

பாவ கிரக பார்வை பெற்றால் பெண்களால் அவமானத்தையும், வீண்  பழியையும் சுமக்க நேரும்.பிறருக்காக பொறுப்பேற்று நஷ்டம் அடைவார்.மூத்த சகோதரர்களால் ஏமாற்றப்படுவார்.கூட்டுத்தொழில் நஷ்டத்தைத் தரும்.கவனமின்றி  இருந்தால் மாரகத்தை  தந்துவிடும்.அதிர்ஷ்டமே  துருதஷ்டமாக  மாறிவிடும்

லக்னாதிபதி பன்னிரெண்டில் நின்றால்!

விரய ஸ்தானத்தில் லக்கினாதிபதி  நின்றால் உழைப்பிற்கேற்ற ஊதியமும், தகுதிக்கேற்ற பதவியோ, திறமைக்கேற்ற  முன்னேற்றமோ, ஆசைகேற்ற வளர்ச்சியும் இன்றி அவதிப்படுவார்.கிடைத்ததை சேமிக்க தெரியாதவர் ஆகவும் பேராசை ஆடம்பர வீண் செலவுகள் செய்யக் கூடியவராகவும் இருப்பார்.சொந்த ஊரை விட்டு வெளியூர் வாசம் சிறப்பு தரும்.

சொத்துக்கள் வைத்துக்கொண்டால் விரையம் ஏற்படும் என்பதால் வாழ்க்கைத்துணை, பிள்ளைகள் பெயரில் வைக்க வேண்டும்.பாவ கிரகங்கள் பலமும் தீய தசையும் நடந்தால் தகுதிக்கேற்ற வேலை செய்யமாட்டார்கள்.கீழான தொழில் ,சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையில் ஈடுபடுவார்.

முயற்சி  என்ற பெயரில் காலவிரயம் செய்வார்.அவசர புத்தி என்பதால் எடுத்தோம் கவிழ்த்தோம் என சிந்திப்பார்.எடுத்த வேலையை முடிக்காமல் திணறுவார்.விலக முடியாத விஷயங்களில் மாட்டிக்கொண்டு தடுமாறுவார்.சொத்துக்களை வீண் விவகாரங்களில் முடங்கி அவதிப்படுவார்.

லக்னாதிபதி விரயத்தில் இருந்தால் வாழ்நாளில் அடிக்கடி அதிக விரயத்தை சந்திக்க நேரும்

லக்னாதிபதி பலம் 

லக்னாதிபதி ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம், வர்க்கோத்தமம், லக்னாதிபதி தன் வீட்டைப் பார்த்தல் ,நட்பு கிரக சாரம் பெறுதல், கேந்திர திரிகோணாதிபதி சாரம் பெறுதல் , லக்னாதிபதி நின்ற அதிபதியின் பலம் என பல்வேறு நிலைகளை கணக்கிட வேண்டும். மேலும் லக்னம் நின்ற நட்சத்திர அதிபதி நல்ல நிலையில் பலம் பெற்றால் ஜாதகர் சிறப்பான வாழ்க்கையை பெற முடியும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!