12 லக்னம் பற்றிய குறிப்புகள்
மேஷ லக்னம்
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியபகவானின் பிள்ளையான சனிபகவான் மிகுந்த தொல்லை தருவான்.அவ்வாறில்லாமல் அவன் வீடும்,பொருளும்,நிலபுலன்களும் தருவானேயானால் அச்சாதகன் ஆயுள்குறையும் என்பதையும் உணர்வாயாக.மேலும்அச்சனிபகவான் திரிகோணத்தில் இருந்தால்மிகுந்த நன்மை விளையும்.அதற்கு மாறாகக் கேந்திரத்தில் இருந்தால் கெடுபலனே இருக்கும்.போகமகாமுனிவரின் கருணையாலே மிகவும் லட்சுமி கடாட்சத்துடன் தனலாபம்பெற்று வாழ்வான்.
ரிஷப லக்னம்
ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்கள் குழந்தையை போன்றவர்கள்.அல்ப சந்தோஷி,எதிராளி கொஞ்சம் அக்கரயோட பேசின போதும் மனசில் உள்ளதை உள்ளபடி பேசி வம்புல மட்டிப்பாங்க.கொடுத்த பேச்சை கப்பதனும்ன்னு துடிப்பாங்க. இதையே பிறரிடம் பார்த்து எமாறுவங்க.குடும்பத்துடன் அதீத பிணைப்பு இருக்கும்.அனைவரையும் அரவணைத்து முன்னேற நினைப்பார்கள்.மாற்றங்களை விரும்பாத ராசி.ஏதன் மேல் அதிக ஆசை வைக்கிறார்களோ அதுவே இவர்களுக்கு ஆப்பு வைக்கும்.அதிக அட்டாச்மெண்ட் வேண்டாம்
மிதுன லக்னம்
மிதுன லக்கினத்தில் பிறந்த ஜாதகர் குணங்கள் தனித்துப் பெற்றாலும், அவற்றோடு சேர்ந்த கிரகங்கள் சுபத்துவ அதி வலுப்பெற்றால் அவர்களின் செயல்பாடு மற்றும் புகழ் நன்றாக வெளிப்படும். இவர்களின் குணம் மற்றும் செயல்களைப் பார்ப்போம்.இவர்கள் அழகானவர்கள், அறிவாளிகள் என்பதால் சாதுரியமான செயல்கள் செய்வார்கள்,இளமையானவர்கள், பேச்சாளி, கணக்கில் ஆர்வ மிக்கவராகவும், அறிவு மிக்க சிறப்பான செயல் திறனாளி.
வீடு, வாகனம், பணவரவு அதிகம் உண்டு அதற்கேற்ற செலவு, முயற்சி இருக்கும்,புகழ், அம்மாவிடம் அன்பு,புதன் என்பது இளைஞர் என்பதால் விளையாட்டு வீரராகவும், பல தொழில் செய்பவராகவும், சுறுசுறுப்பும் அதேநேரம் எடுத்த காரியத்தை முடிப்பார்கள்,நுண்கலை வல்லுநர்கள், கதை ஆசிரியர்கள், சிற்பியாக, அதிகாரமிக்க வேலை அமையும், எதாவது ஒரு கலைகளில் வல்லுநராக இருப்பார்கள்.
கடக லக்னம்
கடக லக்கினத்தில் பிறந்தவர்கள் மனது அலைபாய்ந்துகொண்டே இருக்கும்,பாசமிக்கவர்கள், பயம் வெளியில் காட்டிக்கொள்ளமாட்டார்கள் (basement weak), தன்னை முழுமைப்படுத்திக்கொள்ளப் புத்தியை பயன்படுத்தி வேலை செய்வார்கள்,வசீகர அழகு உண்டு, ஆளுமைமிக்க பதவியில் இருப்பவர்கள், எல்லோரையும் வழி நடத்தும் திறன் கொண்டவர்கள்,பேச்சிலேயே ஆளை எடைபோடும் தன்மை கொண்டவர்கள், மூளை கட்டளையிடுவற்குமுன் துரிதமாக தன் வேலையை செய்வார்கள்,தனித்துவம் மிக்கவராக காட்டிக்கொள்வர்.
தெய்வ அனுக்கிரகம் கொண்டவர்கள்,படபடப்பாகச் சிலசமயம் இருப்பார்கள்,எல்லா ஜீவராசிகளிடம் அன்பு காட்டுவார்கள்,வெளிநாட்டுக்குச் சென்று சம்பாதிப்பார்கள்,தலைமைப் பண்பும், சுறுசுறுப்பானவர், மாணவர்கள் அதிக கவனத்துடன் படிக்கவேண்டும்,பெரிய மனிதர்களோடு நட்பு இவர்களுக்கு பிடிக்கும்.ஆண்டுக்கொருமுறை நண்டுகளின் மேலோடுகள் கழன்று புதுப்பித்துக் கொள்கின்றன. அதே போன்று இவர்களும் ஆண்டுக்கு ஒருமுறை தங்களை மாற்றிக்கொள்வார்கள்
சிம்ம லக்னம்
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களை கண்டு பிறர் கொஞ்சம் தயங்கிப் பேசவும் மரியாதை கொடுக்கவும் வேண்டியிருக்கும்.பலருக்கு கம்பீரமான தோற்றமும் இருக்கும். திட புத்தியுள்ளவர்களாகவும் இருப்பார்கள்.ஆனால் முன் கோபியாகவும் இருப்பார்கள்.சிம்ம லக்னத்திற்கு செவ்வாயும், சூரியனும் சுபர்கள். சுக்ரனும், புதனும் பாவிகள்.செவ்வாயுடன் சுக்ரன் கூடி இருந்தால் கெட்ட பலன்களையே கொடுப்பார்கள்.சுக்ரன், சனி , புதன் இவர்கள் மாரகதிற்கு சமமான கண்டத்தை கொடுப்பார்கள்.சிம்ம லக்னம் என்ற பெயருக்கேற்ப பல சமயங்களில் மற்றவர்களுக்கு சிம்ம ஸ்வரூபமாகவே விளங்குவார்கள்.
கன்னி லக்னம்
கன்னி லக்னத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதன் வலுத்திருந்தால் புதிதாக கற்பதில், படிப்பதிலும் மிகுந்த ஆர்வம் இருக்கும்.கணிதத்திலும், தன்னை சுற்றி சுத்தமாக வைத்திருப்பார்கள், விஞ்ஞான துறையில் இருப்பார்கள், பெருந்தன்மை கொண்ட தர்மவான், அறிவு நுட்பம் கொண்டவர்கள்,கடன் இருக்கும், நிலையில்லாத தன்மை கொண்டவர்கள், ரகசிய மிக்கவர்,திருமணம் கொஞ்சம் பிரச்னை,சிறுவயதில் மகிழ்ச்சியும் பிற்பகுதியில் கொஞ்சம் பிரச்னைகளை எதிர்கொள்வார்கள்,திறமைசாலி, எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.பொறியியல் வல்லுநர், பேச்சால் மற்றவர்களை ஆட்கொள்பவர்கள்,உணவு பிரியர், கவரக்கூடியவர்கள், நகைசுவை தன்மை இருக்கும்,பேச்சில் நிதானம், பிற மொழிகளை கற்பதில் ஆர்வம்,நிறையபேர் நோய்ப் பாதிப்பு இருக்கும், தோல் பிரச்னை இருக்கும், ஆரோக்கியத்தில் ஒருவித நடுக்கம் இருக்கும், பயம் இவர்களை துரத்தும்,கலைத்துறை மீது அதிக காதல் கொண்டவர்கள்,சிறந்த ஆசிரியராக இருப்பார்கள், பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள்,இந்த லக்னத்தில் குரு உதவியோடு நீதிபதிகளாவும்,இரண்டுக்கு மேற்பட்ட தொழிலுக்கு ஏற்றவர்கள்..
துலாம் லக்னம்
துலாம் லக்கினகாரர்கள் வசீகர தோற்றம் கொண்டவர்கள், மற்றவர்களுக்கு மரியாதையை கொடுப்பவர்கள், இனிமையான குரல் கொண்டவர்கள், பேராசை கொஞ்சம் வெளிப்படும், சகோதரர்கள் நண்பர்களால் சந்தோஷம் அடைவார்கள்.
குழந்தைகள் மேலுயர உதவர்கள், சந்தோஷம் துக்கம் சேர்ந்து இருக்கும், கடன் இருந்துகொண்டு இருக்கும், அமைதியானவர்கள், கலையிலும் இசையிலும் மிகுந்த ஆர்வமும், முயற்சியால் முன்னுக்கு வருபவர்,வேலை மாற்றம் இருந்துகொண்டு இருக்கும், படிப்பு வைத்திய செலவு அவ்வப்பொழுது ஏற்படும்,பயணம் இவர்களின் பொழுதுபோக்கு,புத்திசாலி மிக்கவர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் எடைபோட்டு பழகுவார்கள், அழகிய கவர்ச்சியானவர்கள், வெற்றியாளர்கள்,அரசாங்கத்தால் அவ்வளவு நன்மை பெறமாட்டார்கள்,சர்க்கரை நோய் மற்றும் வயிறுக்குக் கீழ் உள்ள கருப்பை, சுக்கிலம் குறைபாடு சிலருக்கு ஏற்படும்
விருச்சிக லக்னம்
விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சந்திர திசையும், குரு திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும்.உங்கள் ஜாதகத்தில் அந்த காலகட்டம் எப்போது வருகிறது என்பதை அறிந்து நீங்கள் சரியாக திட்டமிட்டால் உங்கள் வாழ்க்கையே தலை கீழாக மாறும்.யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு உங்கள் வாழ்க்கை நிலை உயரும்.உங்களை தூற்றியவர்கள் கூட உங்கள் உதவியை நாடி வரும் காலம் அது.
தனுசு லக்னம்
தனுசு லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சூரிய திசையும், செவ்வாய் திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும்.உங்கள் ஜாதகத்தில் அந்த காலகட்டம் எப்போது வருகிறது என்பதை அறிந்து நீங்கள் சரியாக திட்டமிட்டால் அது உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.அனைத்து செல்வங்களையும் சேர்க்கும் காலம் அது.
மகர லக்னம்
மகர லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர திசையும், சனி திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும்.உங்கள் ஜாதகத்தில் அந்த காலகட்டம் எப்போது வருகிறது என்பதை நீங்கள் சரியாக திட்டமிட்டால் செல்வம் பெருகும்,வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும்,சமுதாயத்தில் அந்தஸ்து கூடும்.
கும்ப லக்னம்
கும்ப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு; புத திசையும், சனி திசையும், சுக்கிர திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும்.உங்கள் ஜாதகத்தில் அந்த காலகட்டம் எப்போது என்பதை அறிந்து நீங்கள் சரியாக திட்டமிட்டால் உங்களின் வளர்ச்சி அபரிவிதமான இருக்கும்மற்றவர்கள் பார்த்து பொறாமைகொள்ளும் அளவிற்கு உங்கள் வாழ்க்கை நிலை உயரும்.
மீன லக்னம்
மீன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசையும் சந்திர தசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும்.உங்கள் ஜாதகத்தில் அந்த காலகட்டம் எப்போது வருகிறது என்பதை நீங்கள் சரியாக திட்டமிட்டால் சிறப்பான வளர்ச்சி இருக்கும்.