நவகோள்களின் லக்ன பலன்கள்-புலிப்பாணி
லக்னத்தில் சூரியன் இருந்தால்:
- நாடாளும் பாக்கியம் உண்டு. ஆனால் மிகவும் மூர்க்க குணம் உள்ளவனாகவும், முன்கோபியாகவும், கலகம் செய்பவனாகவும் இருப்பான்.
லக்னத்தில் சந்திரன் இருந்தால்:
- அரசனுக்கு அருகில் இருந்து சேவை செய்பவனாகவும், யோகம் உள்ளவனாகவும் இருப்பான்.
- மேலும் சிவனுக்கு மனைவியாக திகழும் உமையவள் இவனது இல்லத்தில் வாசம் செய்வாள்.
- குளிர்ந்த மேனியும், நல்ல குணம் உடையவனாகவும் இருப்பான்.
லக்னத்தில் செவ்வாய் இருந்தால்:
- ஜாதகர் வெகு சூரனாகவும், அபிமானியாகவும், கலகம் செய்பவனாகவும் இருப்பான்.
- ஆனால் செய்யும் தொழிலில் வல்லவனாக திகழ்வான்.
- ரோக பயமும் உண்டு.
- செவ்வாய் ஆட்சி உச்சம் ஆக இருந்தால் சத்ருக்களை வெல்லும் வீரம் உடையவனாகவும், தைரியம் உடையவனாகவும் இருப்பான்.
லக்னத்தில் புதன் நின்றால்:
- ஜாதகர் தேக லட்சணம் உள்ளவராகவும், ஞானியாகவும் இருப்பார்.
- புதன் உச்சமானால் இந்த பலன்கள் இன்னும் விசேஷமாக நடைபெறும்.
- புதன் நீசமானால் வாதரோகமுடையவனாகவும், அற்ப வித்தையுடையவனாகவும் இருப்பான்.
லக்னத்தில் குரு:
- தேவகுரு லக்னத்தில் நின்றால் தேவாதி தேவனை போல் மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பான்.
- மேலும் நாடாளும் மன்னனாகவும், மிகுந்த புத்திசாலியாகவும், பாக்கியசாலியாகவும் இருப்பான்.
- குரு லக்கினத்தில் உச்சமாக இருந்தால் கோடி தோஷம் நீங்கி தேவர்கள் கொண்டாடும் வண்ணம், திரவியத்தால் தானம் செய்து மக்கள் யாவரும் பாராட்டும் வண்ணம் வாழ்வான்.
லக்னத்தில் சுக்கிரன்:
- ஜாதகர் அதிக செல்வனாகவும்,அழகானவனாகவும், குணமுள்ளவனாகவும் இருப்பான். மேலும் அறநெறி தவறாது வாழ்வான்.
- பெண் பிரியானவாகவும் இருப்பான்.
- சுக்கிரன் லக்கினத்தில் உச்ச பலத்துடன் இருந்தால் அதிக வித்தைகளை கற்று, பந்து ஜனங்களோடு, அந்தணர்களுக்கு பிரியம் உள்ளவனாகவும் மிகுந்த பொருள் சம்பாதித்து பாக்கியவான் என்று கூறும்படியும் வாழ்வான்.
- சுக்கிரன் பகை நீசமாக இருந்தால் காம வெறி பிடித்தவன் ஆகவும் உடையவனாகவும் களத்திர விரோதம் உள்ளவனாகவும் இருக்கும் இருப்பான்
லக்னத்தில் சனி நின்றால்:
- ஜாதகர் மனோவியாதி உடையவனாகவும், துக்கம், பீடை நிறைந்தவனாகவும் இருப்பான்.
- ஆயுள் தீர்க்கம்.
- சனி பகவான் ஆட்சி, உச்சமாக இருந்தால் அவனது புகழ், கீர்த்தி, செல்வாக்கு உலகம் முழுவதும் பரவும்.
- சகோதர தோஷம் உள்ளவனாகவும், சற்று கடுமொழி பேசுபவனாகவும்,கலகம் செய்பவனாகவும் இருப்பான்.
லக்னத்தில் ராகு இருந்தால்:
- விஷரோகமும் ,வியாதியும் உண்டாகும்.
- மேலும் அந்த ஜாதகருக்கு புத்திர தோஷம் உண்டு.
லக்னத்தில் கேது நிற்க:
- ஜாதகருக்கு விஷரோகம் உண்டாகும்.துஷ்ட குணமுடையவன்.
- மெல்லிய தேகம் உடையவராக இருப்பார்.
- ராகு-கேது நட்பு, உச்சம், பலம் பெற்று இருந்தால் தோஷத்தில் இருந்து நிவாரணம் பெற முடியும்.