மகர ராசி
இவர்களின் குடும்ப நிலையை அறிய இவர்களின் 7 ஆம் பாவ மான கடகத்தைக் கவனிக்க வேண்டும்.கடகத்தில் குரு , சனி , புதன் சார நட்சத்திரங்களான புனர்பூசம் , பூசம் , ஆயில்யம் உள்ளன.
கடகம் சந்திரனின் வீடு ஆதலால் மகர லக்ன வாழ்க்கைத் துணைவர் எப்போதும் பரபரவென்று வேகமாகச் செயல்பட்டுக் கொண்டே இருப்பார்.தாய்மை குணம் நிரம்பியவர் . அன்பானவர் சுறுசுறுப் பானவர். இங்கு குரு உச்சமடைவார். அதனால் மகர லக்ன , மகர ராசி வாழ்க்கைத் துணைவர்கள் ஆன்மிக சிந்தனையோடும் ஒழுக்கத்துடனும் , வீரத்துடனும் , விவேகத்துடனும் நடந்து கொள்வர்.எல்லாராலும் வணங்கத் தக்கவர்களாக இருப்பர்.
மகர லக்ன 7 – ஆம் அதிபதி உச்சமானால் நிறைய வளங்கள் , விவசாய நிலம் , செல்வம் , பிரபலம் , அழகு , செல்வாக்கு , சொல்வாக்கு நிரம்பிய வாழ்க்கைத் துணைவர் அமைவர்.
இதே மகர லக்ன 7 – ஆம் அதிபதி நீசமானால் இவர்களின் வாழ்க்கைத் துணை எப்போதும் மனக் குழப்பத்தோடு காணப்படுவார்.சோம்பேறிகளாக கலகம் செய்பவர்களாக பிறர் வாழப் பொறுக்காதவர்களாக இருப்பர்.
இவர்களின் மாமியார் யாரையும் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களை மதிப்பிடும் அறிவு பெற்றி ருப்பார் . மாமனார் எப்போதும் அலைந்து கொண்டிருப்பவராகவும் தெய்வபக்தியோடு ஆன்மிக பயணம் செய்பவராகவும் இருப்பார்.
இவர்களின் மாமனார் வீடு கடை வீதிகளுக்கு அருகில் இருக்கும். சிலருக்கு நீர் நிலைகளுக்கு அருகில் இருக்கும்.
இவர்களின் களத்திர தாய் வீடு மேற்கு அல்லது தென்கிழக்கு திசையில் இருக்கும்.
ஹி , ஷீ , ஹே , ஹோ , டி , டு , டே , டோ , யி , ஹ ஆகிய எழுத்துகளில் வாழ்க்கைத் துணையின் பெயர் ஆரம்பிக்க வாய்ப்புள்ளது .













