சந்திரன் சுபராகி (சுக்ல பக்ஷம்) புதனுடன் பாபிகளுடன் சேராமல் இருவரும் பரஸ்பர பார்வையுடன் இருந்து, அம்ச லக்னத்தில் சுபரும் இருந்தால் இந்த தோஷம் இருக்காது.
ஒரு ஜாதகம் யோக ஜாதகமாக இருந்து, தசாபுத்திகளும் யோக தசையாக இருந்தால் நற்பலன்களே கிடைக்கும்.
ஒரு ஜாதகர் பிறந்த தினத்திற்கு உரிய கிரகமும், சந்திரனும் வலுவாக அமைந்து லக்னத்தில் சுபர் இருப்பின் மாந்தி தரும் தோஷம் விலகும்.
சந்திரன் சுபராகி கேந்திரத்தில் குரு இருந்தாலும் இந்த தோஷம் விலகும்.
நவாம்சத்தை கணக்கில் எடுக்காமல் பலர் பலன் கூறுகிறார்கள். நவாம்ச லக்னத்திலிருந்து குரு சுக்கிரன் புதன் இணைந்து பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ஆம் இடத்திலோ 9ம் இடத்திலோ இருந்தாலும் இந்த ஃதோஷம் விலகும்.
நவாம்சத்தில் புதன் நின்ற ராசியிலிருந்து சுக்கிரன் பதினோராம் இடத்தில் இருந்தாலும் இந்த தோஷம் விலகும்.
இதேபோல் நவாம்சத்தில் புதன் நின்ற ராசியிலிருந்து சந்திரன் 11-ல் அமைந்தாலும், மாந்தியின் கெடுதல் மாறி நற்பலன்கள் தரும்.
மேலும் நவாம்சத்தில் குரு நின்ற இடத்தில் இருந்து 11ல் சுக்கிரன் இருந்தாலும் கெடுபலன்கள் மறையும்.
இது தவிர அஷ்டவர்க்கத்தில் 6 மற்றும் 12ம் பாவங்களை தவிர இதர பாவங்களின் பரல்கள் உயர்ந்து இருப்பவர்களுக்கும் 3,4,7 பாவபரல்கள் உத்தம நிலையில் இருப்பவர்களுக்கும் மாந்தி கெடுதல் செய்யாது.
மேலும் யாரொருவர் மூதாதையர்களுக்கு சிரத்தையுடன், சிராத்தம் மற்றும் குடும்ப வழக்கப்படி வழிபாடுகள் செய்து வருகிறார்களோ, அவர்களுக்கும் மாந்தி தரும் தோஷம் விலகும்.