மாந்தி-Mandhi
ஒருவருடைய ஜாதகத்திலுள்ள நற்பலன்களை முடக்கும் சக்தி மாந்திக்கு உண்டு ஒரு மனிதன் பல கோவிலுக்கு சென்றும் பரிகாரங்கள் செய்தும் மாற்றம் இல்லையென்றால் அந்த மனிதன் மாந்திபாதிப்பில் உள்ளார் என்பது நிச்சயம் அறியலாம்
தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில ஜோதிடர்கள் மட்டுமே மாந்தியை வைத்து பலன் கூறுகிறார்கள் கேரளா ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் கிரகம் மாந்தி
ஜோதிடத்தில் மாந்தி
மாந்தியின் பார்வை
மாந்தி 2 , 7 , 12 ஆகிய இடங்களை பார்க்கும்
ஜாதகத்தில் மாந்தி 1 , 5 , 9 ஆகிய இடங்களில் இருந்தால் தான் ஏன் பிறந்தேன் என்ற அளவுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும்
மாந்தி 3 , 6 , 11 ஆகிய இடங்களில் இருந்தால் சில நன்மைகளைச் செய்யும்
மாந்தி 8 , 12 ஆகிய இடங்களில் இருந்தால் கடுமையான தோஷத்தை ஏற்படுத்தும்
மாந்தி 1 , 4 , 7 , 10 ஆகிய இடங்களில் இருந்தால் (கேந்திரங்களில்) மத்திம பலன்களை தரும்.
இதில் 4 , 10 ஆகிய இடங்களில் சந்திரனுடன், மாந்தி இருந்தால் தாய்க்கு கெடுதல்
9 , 3 ஆகிய இடங்களில் சூரியனுடன், மாந்தி இருந்தால் தகப்பனுக்கு கெடுதல்
12 – பாவத்தில் மாந்தி இருந்தால் என்ன பலன்
1 -ம் பாவத்தில் இருந்தால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.
2 -ம் பாவத்தில் இருந்தால் தன, வாக்கு , குடும்ப ஸ்தானம் பாதிப்பை ஏற்படுத்தும்
3 – ம் பாவத்தில் இருந்தால் இளைய சகோதரருக்கு, உடல் ரீதியான, மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும்.
4 – ம் பாவத்தில் இருந்தால் தாய்க்கு கெடுதலை ஏற்படுத்தும்.
5 – ம் பாவத்தில் இருந்தால் பூர்வீகம் மற்றும் பித்ரு தோஷத்தை ஏற்படுத்தும்.
6 – ம் பாவத்தில் இருந்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிரிகளால் தோஷத்தை ஏற்படுத்தும்.
7 – ம் பாவத்தில் இருந்தால் மனைவி வழியே தோஷத்தை ஏற்படுத்தும்.
8 – ம் பாவத்தில் இருந்தால் விபத்து தோஷத்தை ஏற்படுத்தும்.
9 – ம் பாவத்தில் இருந்தால் உறவினர்கள் வழியே பாதிப்பை ஏற்படுத்தும்.
10 – ம் பாவத்தில் இருந்தால் தொழில் மற்றும் வியாபாரம் முடக்கத்தை ஏற்படுத்தும்.
11 – ம் பாவத்தில் இருந்தால் தவறான வழிகளில் லாபத்தை ஏற்படுத்தும்.
12 – ம் பாவத்தில் இருந்தால் பஞ்சனை தோஷம் மற்றும் காரிய தடையை ஏற்படுத்தும்.
எந்த ஒரு லக்னமாக இருந்தாலும் சிம்ம வீட்டில் மாந்தி இருந்தால் தோஷத்தை ஏற்படுத்தாது.
1 , 2 , 5 , 7 , 8 , 9 ஆகிய பாவத்தில் மாந்தி இருந்தால் உடல்ரீதியான பாதிப்பு, களத்திர தோஷம், புத்திர தோஷம், பிரேத தோஷம், மனை தோஷம், குடும்ப தோஷம், அதிக பாதிப்பை ஏற்படுத்தும்
மீண்டும் ஒருமுறை சொல்கின்றேன் ஒரு ஜாதகத்திலுள்ள யோகங்களையும், நல்ல தசாபுத்திகளையும் முடக்கும் சக்தி மாந்திக்கு உண்டு
லக்கினத்தில் மாந்தி (mandhi)இருந்தால் பிறக்கும்பொழுது போராட்டமான பிறப்பாக இருந்திருக்கும்.
லக்கினத்தில் மாந்தி(mandhi) இருந்தால் அந்த ஜாதகருக்கு மரணபயம் என்பது எப்போதும் இருந்துகொண்டே இருக்கும் .
லக்கினத்தில் மாந்தி(mandhi) இருக்கும் நபர்களுக்கு அவருடைய குடும்ப உறுப்பினர்கள் தெரிந்த நபர்கள் மரணம் அடையும் பொழுது இவர் அந்த மரணத்தை உயிர் பிரியும் அந்த சூழ்நிலையை தன் கண் முன்னே காண்பார்.ஜாதகருக்கு எப்போதும் பிரச்சனை இருக்கும்.உடல் உபாதைகள் அதிகம் ,தலை,முகம் ,பகுதியில் தொல்லைகள் ,அடிக்கடி உடல்நிலை பாதிப்பு.
லக்கினத்தில் மாந்தி(mandhi) இருந்தால் மற்றவரிடம் கேட்ட பெயர் ஏற்படும்.வாயாடி உடையவர் ,மந்த புத்தி இருக்கும் ,
மாந்தி(mandhi)11 இல் இருப்பின் ஜாதகர் யோகம் அடைவார் ,
குரு+ மாந்தி -புத்திர தோஷம்
ராகு+மாந்தி கூட்டு மரணம் ,
சனி +மாந்தி -திடீர் மரணம் ,குழந்தைகளால் விரயம் உண்டு ,
சூரியன் +மாந்தி – தந்தைக்கு கஷ்டம் ,
கேது +மாந்தி -தீவிபத்து ,
மாந்தி(mandhi) நின்ற ராசிக்கு திரிகோணத்தில் குரு வரும் போது சுப பலனும் சனி வரும்போது தீய பலனும் ஏற்படும் ,
மாந்திக்கு(mandhi) குரு பார்வை இருந்தால் கெடுபலன் குறையும் ,
4 இல் மாந்தி(mandhi) இருந்தால் தாயார் வர்க்கத்தில் துர்மரணம் + அற்ப ஆயுள் உண்டு ,
4 இல் மாந்தி(mandhi) இருந்தால் வீட்டில் நிம்மதி வளர்ச்சி குன்றும் ,
10 இல் மாந்தி என்றால் வேலை செய்யும் இடத்தில்பாதிப்பு ,அருகே சுடுகாடு இருக்கும் ,
6 இல் மாந்தி(mandhi) வயிற்று கோளாறு இருக்கும் ,
மாந்தி நின்ற ராசியும் அதற்கு அடுத்த ராசியும் அதற்கு முந்தய ராசியும் அதாவது பனிரெண்டாவது ராசிக்கும் ஏழாம் ராசியும் கெடும்
8 இல் மாந்தி இயற்கைக்கு மாறான மரணம் ,கணவன் அல்லது மனவிக்கு ஆயுள்பங்கம் ,சில சங்கடங்கள் இருக்கும் ,8 ,20 ,32 ,44 இந்த வயதுகளில் ஒரு இழப்பு பாதிப்பு வரும் ,
9 இல் மாந்தி(mandhi) தந்தை வழியில் ஒருவர் சிறு வயதில் இறந்திருப்பர் எனலாம் ,பெண்ணிற்கு கர்ப்பபை சார்ந்த பிரச்சனைகள் வரும் ,தந்தை மகன் கருத்து வேறுபாடு ,பூர்விக சொத்தில் பிரச்சனைகள் உண்டு ,
9 இல் மாந்தி(mandhi) பெண் ஜாதகத்தில் புத்திர தோஷம் ,வெளியூரில் மரணம் ஏற்படும் ,
பெண்கள் ஜாதகத்தில் மாந்தி(mandhi) மூன்றில் இருந்தால் முரட்டு குணம் இருக்கும்
சந்திரன் +மாந்தி -கனவு தொல்லை அதிகம் ,அதாவது தூக்கத்தில் அலறுவார் ,
லக்கனத்தை விட D60 எனப்படும் சஷ்டியாம்சத்தில் மாந்தி இருக்க கூடாது அப்படி இருப்பவர்களிடம் ஜாதக பலன் சொல்லி பணம் கையில் வாங்க கூடாது பாவப்பட்ட பணம் ஜோதிடருக்கே தோஷம் அது ,
மாந்தி + பனிரெண்டாம் அதிபதி சேர்க்கை வெளிநாடு யோகம் ,
பெண்கள் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் எட்டாம் அதிபதியோடு மாந்தி இருந்தால் கணவர் மாமியார் கொடுமை இருக்கும்.
9ஆம் இடத்தில் மாந்தி(mandhi) பூர்வ புண்ணிய கர்மாக்களை தோஷங்களை அனுபவிக்க வைக்கும் கண்டம் ,
சூரியன் +மாந்தி -3 இல் மற்றும் 9 இல் இருந்தால் தந்தைக்கு கண்டம் ,
சந்திரன் +மாந்தி -3 இல் மற்றும் 9 இல் இருந்தால் தாய் மனவருத்தம் அடைவார் ,
செவ்வாய் +மாந்தி -3 இல் மற்றும் சகோதரன் பாதிப்பு
செவ்வாய் +மாந்தி +குரு -வீடு வாசல் உண்டு ,
மாந்தி +புதன் -கிறுக்கன் ,
மேஷத்தில் குரு +மாந்தி -பெண்பித்தன் ,துரோகி
சுக்கிரன் +மாந்தி -கள்ளத்தொடர்பை ஏற்படுத்தும் ,
சனி +மாந்தி -அற்ப ஆயுள் ,
2ல் மாந்தி திமிரான பேச்சு ,தகாத வார்த்தைகளால் குடும்பத்தில் மதிப்பில்லை .
சந்திரன் +மாந்தி – அன்னதானம் செய்ய கூடாது.